மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே பற்றி மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்திய கிரிமினல் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் கூறிய கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. அப்படியிருந்தும் பயங்கரவாத குற்றப் பின்னணி கொண்ட அவரை, போபால் வேட்பாளராக பா.ஜ.க களம் இறங்கியிருப்பது தேர்தல் ஜனநாயகத்தின் மீது பிடிப்பு கொண்டவர்களின் நம்பிக்கையை சுக்கு நூறாக்கியிருக்கிறது.
இந்நிலையில் டிவி 9 பரத்வாஷ் என்ற செய்தித் தொலைக்காட்சியில் நேரலை விவாத மேடையொன்றில் தாகூர் பங்கேற்றிருக்கிறார். அப்பொழுது சிறைச்சாலையில் இருந்தபோது அவர் மீது அரங்கேற்றப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக நீதிமன்றத்திற்கோ அல்லது அவரது நலம் விரும்பிகளான பிரதமர் மோடியிடமோ, உள்துறை அமைச்சர் இராஜ்நாத்சிங்கிடமோ அல்லது மராட்டிய அரசாங்கத்திடமோ ஏன் முறையிடவில்லை என்று நெறியாளர் அஜித் அஞ்சும் கேட்டார். கேள்வி கேட்டதும்தான் தாமதம் பதில் சொல்லாமல் தனது மைக்கை தூக்கி போட்டுவிட்டு தாகூர் நடையை கட்டினார்.
2008-ல் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் கர்கரே கொல்லப்பட்டார். அவர் அதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூரை கைது செய்திருந்தார். “அவர் அழிந்து போவார் என்று நான் அப்பொழுது சாபமிட்டேன். அவரும் அடுத்த இரண்டு மாதங்களில் அழிந்து போனார்” என்று கடந்த ஏப்ரல் 18-ம் தேதி அன்று பேசியதாக ANI செய்தி ஊடகம் தெரிவித்திருந்தது. பின்னர் எதிரிகளுக்கு இடம் கொடுக்க விரும்பவில்லை என்று கூறி தன்னுடைய கருத்தைத் திரும்ப பெறுவதாகவும் தாக்கூர் கூறினார்.
படிக்க:
♦ வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக !
♦ Reason – ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நேர்காணல் !
எதேச்சையாக, அதற்கு சில நாட்களுக்கு முன்பும் கூட மைய சட்ட அமைச்சர் இரவி சங்கர் பிரசாத்தும் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை பற்றி இதே நெறியாளர் கேட்ட ஒரு கடினமான(!) கேள்வியொன்றிற்கு பதிலளிக்காமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே குஜராத் படுகொலை பற்றிய கரண் தபாரின் கேள்விக்கு மோடி வெளறிய முகத்துடன் வெளியேறியது அனைவரும் அறிந்தது. அதே கரண் தபாரின் கேள்வியை ஜெயாவும் மோடியைப் போன்றே எதிர்கொண்டார். இன்று பிரக்யா சிங்கும் கேள்விகளைக் கண்டு தெறித்து ஓடுகிறார். காரணம், பாசிஸ்டுகளுக்கு கேள்விகள் பிடிப்பதில்லை !
https://youtu.be/y0aPLhDL9bo
சுகுமார்
நன்றி : ஸ்க்ரால்