ந்தியாவின் முன்னணி பதிப்பகமான பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் (PRH), தெலுங்கு கவிஞர் வரவர ராவின் புத்தகமான “வரவர ராவ்: தி புரட்சிக் கவிஞர் – Varavara Rao: The Revolutionary Poet” என்ற புத்தகத்தில் இருந்து ‘இந்துத்துவா’ ‘சங்க பரிவார்’ மற்றும் ‘அயோத்தி’ உள்ளிட்ட பல வார்த்தைகளை நீக்க பரிந்துரைத்துள்ளது.
வரவர ராவ் 1960-களில் இருந்து பல்வேறு மக்கள் இயக்கங்களுடன் தொடர்புடையவர் மற்றும் எல்கர் பரிஷத் – பீமா கோரேகான் வழக்கில் தொடர்புடையதாகக் கூறி ஆகஸ்ட் 2018-ல் கைது செய்யப்பட்டார்.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 81 வயதான வரவரராவின் கவிதைத் தொகுப்பான “வரவர ராவ்: தி புரட்சிக் கவிஞர்” என்ற புத்தகம் முதல் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவர உள்ளது.
புத்தகத்தின் திருத்தப்பட்ட வரைவின் நகலை தணிக்கைக்கு உட்படுத்திய வெளியீட்டாளரின் சட்டக்குழு ‘காவிமயமாக்கல்,’ ‘ஊபா – UAPA’ மற்றும் ‘நக்சல்பாரி’ பற்றிய குறிப்புகளை கோடிட்டதாக, ஜூன் 3 அன்று குயின்ட் அறிக்கை கூறுகிறது.
வரைவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், தேசத்துரோகம் மற்றும் அவதூறு வழக்குள் பதிவு செய்யப்படும் என்ற பென்குயின் அச்சத்தை காட்டுகிறது. பீமா கோரேகான் வழக்கில் சிறையில் உள்ள வரவர ராவ் தற்போது மருத்துவ ஜாமீனில் உள்ளார். இப்பிரச்சினையை பற்றி ராவ் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஏனெனில், அவரது ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்று, அவர் ஊடகங்களுடன் பேசக்கூடாது.

படிக்க :

♦ கூகுள் நிறுவனத்தில் சாதிய ஒடுக்குமுறை ! சாதிய – இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் !

♦ “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு

புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவரான கவிஞர், நாவலாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான மீனா கந்தசாமி, தி குயின்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சட்டரீதியான சோதனை பற்றி பேசுகிறார். “எனக்கு, ஒரு ஆசிரியராக இது பேரழிவை ஏற்படுத்துகிறது. ஒரு எழுத்தாளராக, இது இன்னும் இதயத்தை உடைக்கிறது, ஏனென்றால் இன்று வரவர ராவுக்கு என்ன நடக்கிறது என்பது நாளை நம் அனைவருக்கும் நடக்கும்” என்றார்.
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பென்குயின் ரேண்டம் ஹவுஸின் மூத்த ஆணையாளர் ஆசிரியர் இந்தத் திட்டத்தில் ஆர்வமாக இருப்பதாகத் தோன்றி, ஒரு திட்டத்தைச் சமர்ப்பிக்கும்படி எங்களிடம் கேட்டார். நான் இந்தப் புத்தக முன்மொழிவை எழுதி, வேணுகோபால் ராவை (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் வரவர ராவின் மருமகன்) வரவழைத்து, அதைச் சமர்ப்பித்தோம்.” என்றார்.
“வரவர ராவ் எப்போதுமே தனது வாழ்க்கைப் படைப்பின் தொகுப்பை பெங்குயின் வெளியிட வேண்டும் என்று விரும்பினார் என்றும், அவர் (சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு) தனது படைப்பை சிறப்பாகப் பிரதிபலிக்கும் குறிப்பிட்ட கவிதைகளைத் தேர்ந்தெடுத்தார் என்றும் வேணுகோபாலிடமிருந்து நான் அறிந்தேன்” என்றார் மீனா.
புத்தகத்திற்கான ஒப்பந்தம் 2020-ல் கையெழுத்தானது மற்றும் வெளியீட்டாளர் அது 2021 நடுப்பகுதியில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். இருப்பினும், ஒப்பந்தம் வெளியிடுவதற்கு 24 மாத கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது. வரவர ராவின் மருமகன் வேணுகோபால், புத்தகத்தை வெளியிட வெளியீட்டாளர்களுக்கு அக்டோபர் 2022 வரை அவகாசம் இருப்பதாகவும், தவறினால் “ஒப்பந்தத்தை மீறியதற்காக ஆசிரியர்கள் அவர்கள் மீது வழக்குத் தொடரலாம்” என்று கூறினார்.
65 கவிதைகளில் மூன்று கவிதைகள் 2021-ல் கைவிடப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட 65-ல் ராவின் மூன்று கவிதைகள் ஏன் தொகுப்பிலிருந்து கைவிடப்பட்டன என்பது குறித்து, வேணுகோபால் ராவ் விசாரணையை எதிர்கொள்ளும் போது எழுதப்பட்டதால் “சட்ட சிக்கல்கள்” என்று மேற்கோள் காட்டியுள்ளார்.
“அவர் ஒரு வழக்கின் கீழ் இருப்பதால் சில சட்டச் சிக்கல்கள் இருந்தன, அதனால்தான் மூன்று கவிதைகளை கைவிட்டோம். அவர் ஒரு வழக்கில் இருப்பதால், இது சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று வெளியீட்டாளர்கள் தெரிவித்தனர்” என்று அவுட்லுக் அறிக்கை வேணுகோபால் கூறியதை குறிப்பிட்டது.
000
2014-ம் ஆண்டில், பென்குயின் அவர்களின் சொந்த புத்தகமான “வெண்டி டோனிகரின் தி ஹிந்துஸ் – Wendy Doniger’s The Hindus” புத்தகத்தை திரும்பப் பெற்றது. இந்த புத்தகம் இந்து மதத்தின் “சிதைக்கப்பட்ட” பார்வையை முன்வைத்ததாகக் கூறி புகார்களை தொடுத்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அம்பேத்கர் ஜெயந்தி அன்று (ஏப்ரல் 14), பென்குயின் ரேண்டம் ஹவுஸ் “தலித் ட்ரூத்” என்ற புத்தகத்தை வெளியிட்டது. அதில் “தற்போதைய தலித் நிலையை, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக, அம்பேத்கரின் பொருத்தம் மற்றும் புதிய பாதையை பகுப்பாய்வு செய்கிறது. பல தலித் உண்மைகள் மற்றும் சாதி அமைப்பால் நிகழ்த்தப்படும் பொய்களுக்கு எதிரான அவர்களின் போர்கள் இந்த புத்தகத்தின் பக்கங்களில் பிரதிபலிக்கின்றன, இது எதிர்கால சந்ததியினருக்கான வாக்குறுதிகள் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது” என்றும் வெளியீட்டாளர் கூறினார்.
இருப்பினும், தி தலித் ட்ரூத் வெளியான ஒரு மாதத்திற்குள், ராவின் சமீபத்திய கவிதைத் தொகுப்பு பென்குயின் ரேண்டம் ஹவுஸின் சட்டக் குழுவின் கைகளால் தணிக்கைக்கு உட்படுத்தியுள்ளது.

படிக்க :

♦ பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்

♦ காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !

முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்களின் புத்தகங்கள் விலைமதிக்க முடியாதவை; உழைக்கும் மக்களை செயலுக்கத்துடன் சிந்திக்கவைப்பவை; பகுத்தறிவை விதைப்பவை; புரட்சிகர சிந்தனையை பட்டைத்தீட்டிக்கொள்ள உதவுபவை. எனவே முற்போக்கு சிந்தனையாளர்களின் புத்தகங்களில் இருக்கும் “இந்துத்துவா”, “சங்க பரிவார்”, “நக்சல்பாரி” “காவிமயமாக்கல்” “ஊபா” போன்ற வார்த்தைகளை நீக்க முயற்சிக்கின்றன. இது தன்னை விமர்சிக்க முடியாத இடத்தில் வைத்து பார்க்கும் பாசிஸ்டுகளின் மனநிலையாகும். அவ்வார்த்தைகளை எழுத்துபவர்களையும், பதிப்பிப்பவர்களையும், மொழிப்பெயர்ப்பவர்களையும் ஒடுக்க முயற்சிக்கின்றன.
ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல் புரட்சிகர, பகுத்தறிவு, முற்போக்கு படைப்புகளை வெளி கொணர்வோம். உழைக்கும் மக்களின் விடுதலைக்கான, காவி பயங்கரவாதிகளுக்கு படைப்புகளையும், புத்தகங்களையும், எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் காவி பாசிஸ்டுகளிடமிருந்து பாதுகாப்போம்.
காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க