கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட ஒரு தலித் சிவில் உரிமைகள் அமைப்பான ஈக்வாலிட்டி லேப்ஸ், தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் “ஜாதி வெறி மற்றும் துன்புறுத்தல்கள் அதிகமாக செயல்படுத்த அனுமதிப்பதாக” குற்றம் சாட்டியுள்ளது.
தி வாஷிங்டன் போஸ்ட்டில் ஜூன் 2-ம் தேதி வெளியான அறிக்கையின்படி, நிறுவன ஊழியர்கள், தோன்மொழி சௌந்தரராஜனைப் பற்றி “இந்துவெறி” மற்றும் “இந்து எதிர்ப்பு” போன்ற “தவறான தகவல்களை” பரப்பத் தொடங்கியுள்ளனர்.
“இந்த நேரத்தில், சாதி சமத்துவத்தை எதிர்ப்பவர்கள், தேன்மொழி சௌந்தரராஜன் மற்றும் சமத்துவ ஆய்வகங்கள் பற்றிய தவறான தகவல்களை உள்நாட்டில் பரப்பி, சிவில் உரிமைகள் நிகழ்வை இறுதி ரத்து செய்யும் வரை எடுத்து செல்வார்கள்” என்று சமத்துவ ஆய்வகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தலித் உரிமைகள் ஆர்வலர் தேன்மொழி சௌந்தரராஜன், அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனருக்கு, ஏப்ரல் மாதம் கூகுள் செய்தி ஊழியர்களுடன் திட்டமிடப்பட்ட பேச்சு வார்த்தைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தேன்மொழி சௌந்தரராஜனை பேச அழைத்த கூகுள் நியூஸ் மூத்த மேலாளர் தனுஜா குப்தா, அவரது பேச்சை கூகுள் நிறுவனம் ரத்து செய்ததைத் தொடர்ந்து தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். “நிறுவனத்தில் எனது வேலையைச் செய்து, சாதி சமத்துவத்தை ஊக்குவிக்கும் பணியில், நான்கு பெண்கள் துன்புறுத்தப்பட்டு அமைதியாக இருப்பதைக் கண்டேன். உண்மை என்னவென்றால், இவை தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் அல்ல” என்று குப்தா தனது கடிதத்தில் கூறினார்.
படிக்க :
♦ இணையப் புரட்சியின் யோக்கியதையும் கூகுள் ரீடரும்!
♦ கடந்த ஆண்டில் மட்டும் 49 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அதானி !
கூகுள் நிறுவனத்திற்குள் நடக்கும் இந்த சாதிப் பாகுபாட்டிற்கு அல்பபெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (AWU) கண்டனம் தெரிவித்துள்ளது. “பணியிடத்தில் சாதி சமத்துவத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூகுள் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது.
கூகுள் வைத்திருக்கும் நிறுவனமான Alphabet-ன் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள் தேன்மொழி மற்றும் மூத்த மேலாளர் தனுஜா குப்தா ஆகியோருக்கு ஆதரவு இருக்கிறார்கள். “நாங்கள் தேன்மொழி சௌந்தரராஜன், தனுஜா குப்தா மற்றும் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையை அனுபவிக்கும் மற்றும் எதிர்த்துப் பேசும் அனைவருடனும் நிற்கிறோம்” என்று ஆல்பாபெட் தொழிலாளர் சங்கம் (Alphabet Workers Union-AWU) கூறியது.
தேன்மொழியின் பேச்சை மீண்டும் நிலைநிறுத்துவது, சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட பேச்சாளர்களை தொடர்ந்து கொண்டு வருவது, நிறுவனத்தில் உள்ள சாதியப் பாகுபாடுகளை தடுத்து நிறுத்தற்கு ஏற்ற முதலீடுகள் என மூன்று அம்சங்களில் நடவடிக்கை எடுக்குமாறு கூகுளை வலியுறுத்தியது AWU.
எனினும், கூகுள் நிறுவனம் சாதி பாகுபாடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஷானன் நியூபெரி “எங்கள் பணியிடத்தில் சாதி பாகுபாடுகளுக்கு இடமில்லை. எங்கள் பணியிடத்தில் பழிவாங்குதல் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக நாங்கள் மிகவும் தெளிவான, பொதுவில் பகிரப்பட்ட கொள்கையையும் கொண்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.
சௌந்தரராஜனின் பேச்சுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏழு கூகுள் ஊழியர்கள் நிறுவனத் தலைமை மற்றும் குப்தாவிற்கு “சாதி சமத்துவம் பற்றிய விவாதத்தால் அவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்” என்று வெறுப்பு வார்த்தைகளை பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இந்த ஊழியர்களிடமிருந்து வரும் புகார்கள், “தெரிந்த தவறான தகவல் தளங்களில் இருந்து உள்ளடக்கத்தை நகலெடுத்து, பேச்சாளரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தது”என்று மின்னஞ்சல்கள் கூறப்பட்டுள்ளன. “இந்து தேசியவாதம் அல்லது சாதிய படிநிலையை விமர்சிக்கும் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள கல்வியாளர்களை குறிவைத்துள்ள” தளங்களும் அமைப்புகளும் இதில் அடங்கும் என்று அறிக்கை கூறியது.
படிக்க :
♦ சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !
♦ டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்
தேன்மொழி சௌந்தரராஜன், ஏப்ரல் 27 அன்று, பிச்சை மற்றும் கூகுள் தலைமை பன்முகத்தன்மை அதிகாரி மெலோனி பார்க்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், பிச்சையின் “தார்மீகக் கடமை” பற்றி அவர் நினைவுபடுத்தினார். “நீங்களும் நானும் தமிழர்கள். நீங்கள் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர், நான் தலித் குடும்பத்தைச் சேர்ந்தவன். நீங்கள் இருக்கும் மதுரையில், என்னைப் போன்ற தலித் மக்கள் கொடூரமான வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.. சாதி சலுகை உள்ள ஒருவராக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சரியானதைச் செய்யும் பாத்திரத்தில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள்” என்று அவரது கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் சாதிய ஒடுக்குமுறைகள் தற்போது தேன்மொழியின் உரையை தடுத்து நிறுத்தியதில் இருந்து அம்பலமாகியுள்ளது. கூகுல் நிறுவனம் போன்ற பல கார்ப்பரேட் தொழில்நுட்ப நிறுவனங்களில் நிகழும் சாதிய – இன ஒடுக்கு முறைகளை எதிர்த்து உலகின் பல்வேறு சமூக செயல்பாட்டாளர்கள், முற்போக்காளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் ஒன்றிணைத்து குரல் கொடுப்பது மிகவும் அவசியம்.
சந்துரு