பத்திரிகைச் செய்தி

11.05.2019

தூத்துக்குடி தியாகிகளின் முதலாமாண்டு நினைவைப் பேசக்கூடாது என்பதற்காகவே பொய்வழக்கு!

கடந்த 2018-ம் ஆண்டு, டிசம்பர் 29 அன்று “14 பேரின் உயிர் தியாகம் வீணாகலாமா? குற்றவாளிகளை கைது செய்!”  என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தோழர் இளஞ்சேகுவேரா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தோழர் தியாகு, ஜனநாயக வழக்குரைஞர் சங்கத்தின் செயலர் பாரதி, வழக்குரைஞர் சுரேஷ் சக்தி முருகன் ஆகியோர் மீது 505(i)(b) சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது திருவல்லிக்கேணி போலீசு.

இந்த வழக்கு பதிவு செய்ததின் பின்னணி என்ன?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டடத்தை சீர்குலைத்து வன்முறையை ஏவி 15 பேரை சுட்டுக் கொன்றது போலீசு.

சுட்டுக்கொன்ற போலீசு மீது எந்த நடவடிக்கையும் இல்லை, ஆனால் போராடிய மக்கள் மீதும், மக்கள் அதிகாரம் அமைப்பின் மீதும், போடப்பட்ட வழக்குகளும், ஏவப்பட்ட அடக்குமுறைகளும் ஏராளம்.

படிக்க :
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் ! மக்கள் அதிகாரம் ராஜு பதில்
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | போலீசு உருவாக்கிய பொய்க் கதை

மக்கள் அதிகாரம் சார்பில் கூட்டங்கள் நடத்த போலீசு அனுமதி மறுக்கிறது. அரங்க நிர்வாகிகளை அச்சுறுத்துகிறது. அதையும் எதிர்கொண்டு சென்னை நிருபர்கள் சங்கக்கட்டிடத்தில் நடத்திய கூட்டத்திற்குதான் இந்த வழக்கு.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவேந்தலை மக்கள் அனுசரிக்க உள்ள நிலையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றுவரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசுவதையேகூட குற்றமாக்கி பொது அமைதியை சீர்குலைத்தது போலீசுதான். அது மட்டுமல்ல, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, மீத்தேன் என எதைப் பேசிடவும் கூடாது என்கிறது அரசு.

பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக, மக்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள் மீது போலீசு வழக்கு பதிவு செய்கிறது.

இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மீதும், மற்ற தலைவர்கள் மீதும் போடப்பட்ட பொய் வழக்குகள் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

போலீசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தங்கள்
தோழர். மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்
9962366321
ppchennaimu@gmail.com
Facebook id : makkal athikaram

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க