டந்த ஆண்டு ஜூலையில் உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் பல்கலைக்கழகத்துக்கு வந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டினார் மாணவி நேஹா. கருப்புக் கொடி காட்டியதற்காக அப்போது கைதும் செய்யப்பட்டார்.

பாஜக-வின் ‘அமோக’ வெற்றிக்குக் காரணமாக இருந்ததாக கூறப்படும் அமித் ஷா, உள்துறை அமைச்சராகியிருக்கும் நிலையில், மாணவி நேஹா-வை பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கியுள்ளது நிர்வாகம்.

போராட்டத்தின் போது போலீசால் தாக்குதலுக்கு ஆளான நேஹா. (கோப்புப் படம்)

மே 28-ம் தேதி, வெளியிடப்பட்ட நீக்க ஆணையில், “ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபடுதல், ஒழுங்கீன நடவடிக்கைகளை ஊக்குவித்தல்” ஆகியவற்றைக் காரணம் காட்டி நேஹா நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பல்கலைக்கழக மாணவர் கண்காணிப்பாளர் ராம்சேவக் துபே, “அவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. அவர் விடுதிக்கு தாமதமாக செல்வதோடு, விடுதி காப்பாளர்களிடமும் தகராறு செய்கிறார்” என்கிறார். நீக்க முடிவெடுத்தபின், விடுதிக்கு தாமதமாக செல்வதையெல்லாம் காரணமாகச் சொல்கிறது பல்கலை நிர்வாகம்.

உண்மையான பிரச்சினை நேஹா, தாமதமாக செல்வதல்ல. அவர் அரசியல் செயல்பாட்டாளர் என்பதே. சமாஜ்வாதி கட்சியின் மாணவர் அமைப்பில் உள்ள இவர், பல்கலைக்கழகத்தில் நடக்கும் மாணவர்களுக்கு எதிரான விசயங்களை எதிர்த்து வந்துள்ளார்.

பல்கலைக்கழக தேர்வுகள் முடிந்தவுடன் அனைத்து மாணவர்களும் விடுதியை காலி செய்துவிடவேண்டும் என நிர்வாகம் வலியுறுத்திய நிலையில், சில மாணவர்கள் வேறு சில தேர்வுகளுக்கு விடுதியில் தங்கிப் படிக்க அனுமதி கேட்டிருக்கின்றனர். நிர்வாகம் மறுத்துவிட்ட நிலையில், அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார் நேஹா.

படிக்க:
♦ ஆதித்யநாத்திற்கு கருப்புக் கொடி காட்டியது பயங்கரவாதமாம் – என்னடா நாடு இது ?
♦ அமித்ஷாவை விரட்டும் டிவிட்டர் : டிரண்டிங்கில் #GoBackAmitShah

தன்னைப் பற்றி பல்கலை நிர்வாகம் தெரிவிக்கும் புகார்கள் அடிப்படையற்றவை என மறுக்கிற நேஹா, இவையெல்லாம் அமித் ஷாவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதால் வந்த வினைகளே என்கிறார்.

“என்னைப் பற்றி நிறைய புகார் உள்ளதாகச் சொல்கிறார்கள். அந்த புகார்கள் அனைத்தும் மாணவர்கள் நலனுக்காக நான் போராடியதாலேயே வந்தவை. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்ததாலேயே, இங்கு சேர முடிந்தது. அப்படியிருந்தும் பல்கலை நிர்வாகத்தில் உள்ள சிலர் என் பணியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை சொல்கின்றனர். இங்குள்ள குறைகளை எதிர்த்து பேசுவதாலேயே அவர்கள் இப்படிச் செய்கின்றனர்” என்கிறார் நேஹா.

நேஹா, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என சொன்னால், பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேர்த்துக்கொள்வதாகவும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

தான் யாரிடமும் மண்டியிடத் தயாராக இல்லை என தெரிவிக்கும் நேஹா.

ஆனால், தான் யாரிடமும் மண்டியிடத் தயாராக இல்லை என தெரிவிக்கிறார் நேஹா. உயர்நீதிமன்றத்தில் தனது நீக்கத்தை எதிர்த்து முறையிடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேஹா, முன்பு படித்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதன்மையான மதிப்பெண் பெற்றிருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அங்கு நடந்த போராட்டத்திலும் அவர் பங்கேற்றிருக்கிறார்.

குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்தபோது தங்களை எதிர்த்தவர்களையெல்லாம் என்கவுண்டர் வேட்டையாடிய அமித் ஷா, இம்முறை நாட்டின் உள்துறை அமைச்சராகியிருக்கிறார். தன்னை எதிர்ப்பவர்களை, முன்னாட்களில் எதிர்த்தவர்களை, அவர்கள் மாணவர்களே ஆனாலும் இப்படி அடக்கி ஒடுக்குவதை அவரே ஒருவேளை செய்யாவிட்டாலும் அவரது அடிபொடிகள் செய்து முடித்துவிடுவார்கள். அதன் தொடக்கம்தான் போராடிய மாணவியை பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கியிருப்பது.


கலைமதி
நன்றி : த க்விண்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க