privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஆதித்யநாத்திற்கு கருப்புக் கொடி காட்டியது பயங்கரவாதமாம் - என்னடா நாடு இது ?

ஆதித்யநாத்திற்கு கருப்புக் கொடி காட்டியது பயங்கரவாதமாம் – என்னடா நாடு இது ?

-

கறுப்புக் கொடி காட்டினால் – பிணை கிடையாது –உ.பி.யில் இந்துத்துவ பாசிசம்!

.பி. மாநிலத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டி போராடிய 2 பெண்கள் உட்பட மொத்தம் 11 மாணவர்களுக்கு கடந்த ஜூன் 10,2017 அன்று பிணை வழங்க மறுத்து விட்டது லக்னோ நீதிமன்றம்.

உ.பி. மாநிலம் லக்னோவில் உள்ளது லக்னோ பல்கலைக்கழகம். மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு போதிய நிதி இல்லை எனக் கூறி வரும் பல்கலைக்கழகம், யோகி ஆதித்யநாத் பங்கு பெறும் சத்ரபதி சிவாஜி விழாவிற்கு மட்டும் அளவிற்கு அதிகமான நிதியை ஒதுக்கியிருந்தது. இதையொட்டி கடந்த ஜூன் 7 அன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பங்கேற்பதற்காக வந்த ஆதித்யநாத்தின் பாதுகாப்பு வாகனங்களை வழிமறித்த சமாஜ்வாடிக் கட்சியின் மாணவர் அமைப்பு மற்றும் இதர மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தரையில் அமர்ந்து கறுப்புக் கொடி காட்டிப் போராடினர். அப்போது பல்கலை நிர்வாகத்திற்கும், உ.பி. கவர்னர் ராம் நாயக்கிற்கும், உ.பி ரவுடி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் எதிராக கோஷம் எழுப்பினர்.

பாய்ந்து சென்று அம்மாணவர்களில் 11 பேரைக் கைது செய்த ‘ஹஸன்கஞ்ச்’ “போலீசு, அவர்கள் மீது முதல்வரின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்ததாகவும், கலவரம் நடத்த முயன்றதாகவும்” கூறி வழக்குப் பதிவு செய்தது. இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக அப்பகுதி போலீசு ஆய்வாளர் உடனடியாக அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். லக்னோ நீதிமன்றத்தில் ஜூன் 8 அன்று ஆஜர்படுத்தப்பட்ட 11 மாணவர்களையும் 4 நாள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களுக்கு பிணை வழங்கக் கோரி கடந்த ஜூன் 10 அன்று தொடுக்கப்பட்ட வழக்கில் அம்மாணவர்கள் செய்த குற்றம் ‘அதிபயங்கரமானது’ என்று கூறி பிணை வழங்க மறுத்துவிட்டார் லக்னோ தலைமை நீதிமன்ற நீதிபதி சுனில்குமார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 11 மாணவர்களில் 8 மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளது லக்னோ பல்கலைக்கழக நிர்வாகம்.முதல்வரின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் என்.கே. பாண்டே தெரிவித்துள்ளார்.

2007-ம் ஆண்டு நடைபெற்ற கோரக்பூர் கலவரத்தின் சூத்ரதாரியான காவி ரவுடி ஆதித்யநாத்தை முதல்வராகக் கொண்ட மாநிலத்தில், ஜனநாயகப் போராட்டத்திற்கு நீதியாக பொய் வழக்குகளைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும் ?

செய்தி ஆதாரம் :