வினவு கருத்துக் கணிப்பு

ஜினி பட ரிலீஸ், மோடியின் செல்ஃபி விளம்பரங்களெல்லாம் ஒன்றுமில்லை என்பதாக காஞ்சிபுரம் அத்திவரதர் மாறி விட்டார். புதுப்படத்தில் ரஜினியின் கேரக்டர் என்ன, மோடி இன்று போட்டிருக்கும் கோட்டு சூட்டின் விலை என்ன என்ற சேதிகளுக்கு போட்டியாக அத்தி வரதர் இன்று என்ன கலரில் பட்டு உடுத்தினார் என்பது காஞ்சிபுரத்தை தாண்டி பேசப்படும் விசயமாகி விட்டது.

இன்று கத்திரிப்பூ பட்டாடையில், செண்பக பூ அலங்காரத்தில் அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாக தினமலர் எழுதுகிறது. அந்தப் பட்டுப்புடவையின் விலை குறைந்தது ரூ. 50,000-த்திற்கு மேல் என்று எழுதுகின்றன ஊடகங்கள். அந்தக் காலத்து மாதுரி தீஷ்ஷித் போன்ற ஹீரோயின்கள் ஒரு பாடலுக்கு ஒரு டசன் ஆடைகளை மாற்றுவது போல அத்தி வரதர் தினமும் தனது கெட்டப்பை மாற்றி வருகிறார்.

தெப்பக் குளத்தில் மூழ்கியிருந்து விட்டு நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை அவர் வெளியே வந்து தரிசனம் கொடுப்பதாக ஒரு புரட்டை பார்ப்பன பீடங்கள் அவிழ்த்து விட்டன. வரலாற்றின்படி இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. தமிழகத்தில் அரசியல் ரீதியாக வெற்றி பெற முடியாத இந்துத்துவக் கூடாரமும், பார்ப்பன கிச்சன் கேபினட்டும் இணைந்து இந்த அத்தி வரதர் கூத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

விவிஐபி டோக்கனில் அத்தி வரதரை தரிசித்த வரிச்சூர் செல்வம்.

இந்தப் புரட்டுக்கு அடிமை எடப்பாடி அரசு ஓகே சொல்லி, பிறகு ஊடகங்கள் அதுவும் பார்ப்பன ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அத்தி வரதரைப் பற்றி இத்துப் போன கதைகளை பலவற்றை வெளியிட்டு வருகின்றன. பிறகு தினமும் இலட்சக்கணக்கானோர் காஞ்சிபுரம் வருகின்றனர் என்று ஊடகங்கள் கொளுத்திப் போட்டன. மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம் விடுமுறை போடும் ‘தியாகத்தை’  கூட செய்யாமல் சனி, ஞாயிறு விடுமுறை அன்று காஞ்சிபுரத்தை மொய்க்கின்றன. வார நாட்களில் கூட்டமில்லை. இது போக வரிச்சூர் செல்வம் போன்ற ரவுடி பக்தர்கள் விவிஐபி டோக்கனில் அத்தி வரதரை தரிசித்து செல்கின்றனர்.

அத்தி வரதரை ஒரு முறை தரிசித்தால் சொர்க்கம், இரு முறை தரிசித்தால் மறு பிறப்பில்லை, மூன்றாம் முறை சந்தித்தால் விண்ணுலகில் தேவராகலாம் என்று மக்களிடையே கதைகளை எழுப்பி கூட்டம் சேர்க்க முயல்கின்றனர்.

பொதுவில் வியாபாரத்தில் காய்ந்து போயிருந்த காஞ்சிபுரம் இந்த அத்தி வரதர் வைபவத்தில் திடீரென விசுவரூபமெடுத்திருக்கிறது. சாதா, ஸ்பெஷல் வியாபாரிகள் அனைவரும் பத்து மடங்கு வணிகத்தை நடத்தி வருகின்றனர். அவர்களும் தங்களது பங்கிற்கு அத்தி வரதர் நினைத்தால் அள்ளிக் கொடுப்பார் என மக்களிடையே மூடநம்பிக்கைகளை விதைத்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர், ஆளுநர் போன்றோர் வந்து சென்ற நிலையில் மோடி வரப்போகிறாராம். அத்தி வரதரின் தர்பார் மொத்தம் 48 நாட்கள் என்றால் அதில் 24 நாட்கள் சயன கோலம், 24 நாட்கள் நிற்கும் கோலமாம். மோடி இந்த இரண்டு கோலத்தையும் பார்க்க போகிறாராம். நள்ளிரவில் அத்தி வரதரை தூக்கி நிறுத்தும் போது பார்க்கப் போகிறாரா தெரியவில்லை.

இன்றைய கேள்வி:

அத்தி வரதரைப் பற்ற வைத்தது யார்?

♣ பார்ப்பன பீடங்கள்
♣ ஊடகங்கள்
♣ அரசு
♣ பக்தர்கள்

(பதில்களில் இரண்டு தெரிவுகளை தெரிவு செய்யலாம்)

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூப்-ல் வாக்களிக்க :

அத்தி வரதரைப் பற்ற வைத்தது யார் ?

9 மறுமொழிகள்

 1. ஓசி சாேத்துல உடம்பை வளர்த்துட்டேன் ….அத்திவரதரை வைத்து பல வருடங்களுக்கு தேவையானதை கல்லாக்கட்டியாச்சு? … !

 2. தமிழகம் அன்றும் இன்றும் என்றும் தெய்வீகத்தில் திளைக்கும் மக்களைக்கொண்டது. அவர்களுடைய அதீதமான பக்தியை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது. இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்து மதம் தழைத்தோங்குவதை யாராலும் தடுக்க முடியாது. அத்திவரதர்கள் நமது இரத்தத்தில் ஊறிய வர்கள்.

 3. பக்திக்கும் மூடத்தனத்துக்கும் இடையே ஒரு சிறு கோடு தான் உள்ளது. கொஞ்ச நாட்களாகவே நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை, நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பத்தாண்டுகளுக்கு ஒரு முறை என்று சொல்லி எதையாவது கிளப்பி விட்டு பக்தியின் பேரால் சாதாரண மக்களை இந்த பண்டார கூட்டம் சுரண்டி வருகிறது. இப்போது ஆட்சி அதிகாரமும் கையில் இருப்பதால் சொல்லவே வேண்டியதில்லை. பகுத்தறிவு பேசக் கூடியவர்கள் ஊழல், குடும்ப அராஜகம் என சீரழிந்து தமிழ் நாட்டையும் இந்தியாவையும் சீரழித்ததால் வந்த வினை இது. கடைசியில் பாதிப்பு என்னவோ சாதாரண மக்களுக்குத் தான். உள்ளூரில் நாம் வணங்கும் தெய்வத்தின் மூலமாக கிடைக்காத நிம்மதி, அருள் உலகில் வேறு எங்கும் கிடைக்காது. இதை பொதுமக்கள் உணராத வரை பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது, ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது, நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு என்ற பெயரில் இந்த பண்டார கூட்டம் வயிறு வளர்க்கும். சாதாரண மக்கள் சுரண்டப்படுவதும் நடக்கவே செய்யும். இதில் நான்கு பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்தும் போயிருக்கிறார்கள். கொடுமை.

  • ஐயோ பாவம் கிறிஸ்துவ மதமாற்ற கூட்டங்களின் வயித்தெரிச்சல் இந்த கட்டுரையில் நன்றாகவே தெரிகிறது… தமிழகம் பெரியார் பூமி எல்லாம் கிடையாது இது ஆன்மிக பூமி.

   • உலகமே கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றை பின் பற்றும் ஆபிரகாமிய மதத்தவர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது மணி சார். இந்துக்கள் மெஜாரிட்டியாக இருப்பது உலகில் இரண்டே இரண்டு நாடுகளில் மட்டும். அதுவும் பல விடயங்களில் மிகவும் பின்தங்கிய நாடுகள். ஒட்டுமொத்த உலகமே ஆபிரகாமிய உலகம் என்பதை புரிந்துகொண்டு கருத்து வெளியிடவும். அவர்கள் அழிக்க நினைத்தால் இந்து மதம் ஒரு பொருட்டே அல்ல .ஆக்கிரமிக்க வந்தவர்கள், சுரண்ட வந்தவர்கள், மதம் மாற்ற வந்தவர்கள் ஆகியோர் எல்லாம் கருணை காட்டக் கூடிய அளவுக்கு மோசமான நிலைமையில் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களை இந்துமதக் கோட்பாடு தாழ்த்தி வைத்து ஒரு சிறிய கூட்டத்திடம் அடிமைப்படுத்தி வைத்திருந்தது.

    • அப்படிங்களா சார், இஸ்லாமியர்கள் ஒரு 800 வருடங்கள், கிறிஸ்துவர்கள் ஒரு 400 வருடங்கள், இருவருமே பல கொடூரங்களை ஹிந்துக்களுக்கு எதிராக செய்து மதம் மாற்ற பார்த்தும் முடியாதது… இனி மேலும்மா ? ஆபிரகாமிய மதத்தவர் இரக்கம் காட்டியவர்கள் இல்லை, அவர்களின் மனதில் இரக்கமும் இருந்தது இல்லை அதற்கு சாட்சி இந்தியாவில் அவர்களால் இடிக்கப்பட்ட பல ஆயிரம் ஹிந்து கோவில்கள், பெரும் படுகொலைகள் கொள்ளைகள் எல்லாம் வரலாற்று ஆதாரமாக இருக்கிறது.

     உலகிலேயே மிக பெரிய இன அழிவை சந்தித்தவர்கள் ஹிந்துக்கள், இந்தியாவில் நடந்தது போல் இவ்வுளவு பெரிய அழிவு உலகத்தில் வேறு எங்குமே நடந்தது இல்லை. ஹிந்துக்களுக்கு நிகழ்ந்த அழிவை பார்க்கும் போது யூதர்களுக்கு நடந்தது எல்லாம் ஒன்றுமே கிடையாது.

     இதற்கு அடுத்து செவ்விந்தியர்கள் இன படுகொலைகளை சொல்லலாம். அந்த மக்களையும் கிறிஸ்துவர்கள் ஏறகுறைய அழித்தே விட்டார்கள், இன்று பிரேசில் மெக்ஸிகோ போன்ற நாடுகள் தங்கள் பூர்விக மொழி கலாச்சாரம் அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் பலவற்றை இஸ்லாமியர்கள் மதத்தின் பெயரால் அழித்தே விட்டார்கள்.

     இவ்வுளவு பெரிய அழிவிற்கும் பிறகும் ஹிந்து தர்மம் இந்த நாட்டில் நிலைத்து நிற்கிறது.

     என் பார்வையில் கம்யூனிசம் இஸ்லாம் கிறிஸ்துவம் இவை மூன்றுமே ஒரே குணங்களை உடையவை….

 4. //சனி, ஞாயிறு விடுமுறை அன்று காஞ்சிபுரத்தை மொய்க்கின்றன. வார நாட்களில் கூட்டமில்லை// அப்படிங்களா ???? உங்களுக்கு உண்மையை பேசுவது என்றாலே கசக்குமா… கம்யூனிஸ்ட்கள் என்றால் நேர்மையாளர்கள் என்ற பொய் பிம்பத்தின் பின்னால் கம்யூனிஸ்ட்களின் பொய் பித்தலாட்டங்கள் இந்த மாதிரியான கட்டுரைகள் மூலம் வெளிப்படுகிறது.

  கவுரி லங்கேஷ் தனது கடைசி டீவீட்டில் சொன்னது போல் பொய் என்று தெரிந்தே பொய்களை வினவு பரப்புகிறது.

  நேர்மைக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் என்றுமே சம்பந்தம் கிடையாது.

 5. ஏய். பெரியார் காலத்திலிருந்தே இதே பொழப்பா போயிடுச்சு. ஏற்கனவே வீட்டுக்குள்ள தெய்வீகம், ஊருக்கு வெளியே நாத்திகம்ன்னு ஏமாத்திட்டு இருக்க. இந்த fraud தனத்துக்கு தான் சூ.. கழுவ கூட தண்ணி இல்லாம வச்சிருக்கான்.

 6. The sons of Hezron, who were born to him: Jerahmeel, Ram, and Chelubai. This is the family tree of Perez: Perez had Hezron, Hezron had Ram, Ram had Amminadab, Amminadab had Nahshon, Nahshon had Salmon, Salmon had Boaz, Boaz had Obed, Obed had Jesse, and Jesse had David.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க