அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா ?
“கோயிலிலே குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கோயில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக.” 1952-ல் வெளியான பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த வசனத்தை இன்றைக்குத் தமிழகமெங்கும் மேடை போட்டுப் பேச வேண்டிய தேவையை சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தைத் தனியார் திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்ட தீட்சிதர்களின் முறைகேடும், அத்திவரதர் வைபவத்தில் அர்ச்சகர்கள், அதிகார வர்க்கம், தனியார் முதலாளிகள் கூட்டுச் சேர்ந்துகொண்டு அடித்த கொள்ளையும் உருவாக்கியுள்ளன.
”அத்திவரதர் வைபவத்துக்காக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? சிறப்பு தரிசன அனுமதிச் சீட்டுக்களை விற்றதன் மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு? பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்கம், வெள்ளி நகைகள் எவ்வளவு?” என்பவை உள்ளிட்ட 28 கேள்விகளைச் சமூக ஆர்வலர்கள் சிலர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டிருந்தனர். இதற்குச் ”சட்டப்பிரிவு 2(F)-இன்படித் தகவல் அளிக்க முடியாது” என்ற ஒற்றை வரிப் பதிலை, அதுவும் பதிலளிக்கும் அதிகாரியின் பெயர், பதவி எதையும் குறிப்பிடாமல் மொட்டைக் கடுதாசியைப் போலக் கொடுத்திருக்கிறது, மாவட்ட நிர்வாகம்.

“கோவில் நிர்வாகம் வாங்கிய பல இலட்சம் ரூபாய் பெறுமான அங்கவஸ்திரங்கள் மற்றும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய அங்கவஸ்திரங்கள்” குறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லி பாபு கேட்டிருந்த கேள்விகளுக்குப் ”பதில் அளிக்க முடியாத நிலையில் இருப்பதாகத்” தெரிவித்துள்ளார் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையர் தியாகராஜன்.
இவையெல்லாம் சாதாரண பக்தர்கள் தெரிந்துகொள்ளக்கூடாத தேவ இரகசியங்களா அல்லது பொதுமக்கள் அறிந்துகொள்ளக் கூடாத இராணுவ இரகசியங்களா? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்திருப்பதே, அத்திவரதரைக் காட்டிப் பக்தர்களிடம் பகற்கொள்ளையடித்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்தக் கொள்ளை சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை விற்பது தொடங்கி அர்ச்சகர்கள் தட்டில் விழுந்த காணிக்கை வரை பல வழிகளில் நடந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, அத்திவரதர் முன்பாக உட்கார்ந்து தரிசிக்க 50,000; நின்று கொண்டே தரிசிக்க 30,000; அத்திவரதரோடு ‘செல்பி’ எடுத்துக்கொள்ள 10,000 என ரேட் நிர்ணயிக்கப்பட்டுப் பசையுள்ள பக்தாளிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பிடுங்கப்பட்டிருக்கிறது.
தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்டு ஆயிரம், ரெண்டாயிரம் எனப் பக்தர்கள் தாராளமாகக் கொடுத்த காணிக்கைகள், உண்டியலுக்குப் பதிலாக அர்ச்சகர்களின் தட்டுகளில் விழுவதை உத்திரவாதப்படுத்தும் திட்டத்தோடு உண்டியல்களின் எண்ணிக்கை சொற்பமாகவே வைக்கப்பட்டன. எவ்விதக் கணக்கிற்குள்ளும் வராமல் நடந்த கொள்ளையிது.
படிக்க:
♦ அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு
♦ சதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் !
மிக முக்கியமாகச் சிறப்பு தரிசன அனுமதிச் சீட்டு விற்பனையின் மூலம்தான் கோடிகோடியாகக் கொள்ளையடித்திருக்கிறது, அர்ச்சகர்கள், அதிகாரவர்க்கம், முதலாளிகள் கூட்டணி. இந்த அனுமதிச் சீட்டுக்கள் ஒவ்வொன்றும் கள்ளச்சந்தையில் ரூ. 8,000-க்கு விற்கப்பட்டதாகவும், இந்த விற்பனை மூலம் மட்டும் இம்மூவர் கூட்டணி ரூ. 1,175 கோடி வரை கொள்ளையடித்திருக்கக் கூடும் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.
குறிப்பாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று முன்னணி ஜவுளி நிறுவனங்கள் “ரூ. 10,000-க்குப் புடவை வாங்கினால் பாஸ் இலவசம்” எனச் சலுகை அளித்துக் கல்லா கட்டியதன் மூலம் மட்டும் ரூ. 200 கோடிக்கும் குறையாமல் இலாபம் பார்த்திருப்பதாகக் குறிப்பிடுகிறது, ஜூனியர் விகடன் இதழ்.
இந்தக் கொள்ளையை நடத்துவதற்காகவே அத்திவரதரின் வரலாறு, மகிமைகள் குறித்து கார்ப்பரேட் ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் நடத்தப்பட்டு, பக்தர்கள் மயக்கப்பட்டனர். இந்தக் கொள்ளையின் ஆதாரமாக இருந்த அத்திவரதர் ஆழ்ந்த சயனத்திற்குச் சென்றுவிட்டார். அவர் இனி படுத்தபடியும் கேட்கப் போவதில்லை, எழுந்து நின்றாலும் கேட்கப் போவதில்லை. பக்தர்களே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பக்தியின் பெயரால் இன்னும் எத்தனை காலத்திற்கு ஏமாறப் போகிறீர்கள்?
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
//அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா//
நின்றும் கொள்ளாது உட்கார்ந்தும் கொள்ளாது , ஏனென்றால் இந்த முட்டாள்தனத்தில் மக்களுக்கும் பங்கிருக்கிறது .. என் வீட்டில் கொள்ளையர்களை திருட அனுமதித்துவிட்டு அத்தி வரதரிடம் காப்பாற்ற சொல்லி வேண்டுவதால் என்ன பயன்.. இருப்பினும் மக்களை ஏமாற்றி ஆன்மீகத்தின் பெயரால், பக்தியின் பெயரால் செய்த இந்த படுபாதக கொள்ளையை செய்தவர்கள் நிச்சயம் அவர்கள் செய்த தீய செயலுக்கான செயலுக்கான கேடு பலனை அனுபவிப்பார்கள் .
மதம் மனித மூளையின் வைரஸ்,எப்படி அரசியல் தற்காலத்தில் சிறந்த வியாபார மோ அதுபோல இதுவும் ஒரு நல்ல வியாபாரம்,மனித மூளைக்கு (மனிதகணிணிக்கு) மதம் என்ற வைரசை ஒரு முறைசெலுத்தி விட்டால் அதை அகற்றுவது மிகக் கடினம்,மனித மூளை இந்த வைரசின் வழியிலேயே செயல்படும்,முதலில் இந்த வைரஸ் மனித மூளையில் செயல் படுவதை ஓரளவுக்காகவேனும் கட்டுப் படுத்த ஒரு வழியை காண வேண்டும்