மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! புதிய ஜனநாயகம் நவம்பர் 2019
- பி.எம்.சி. வங்கி முறைகேடு: வெளியே தெரியும் பனிமுகடு!
இந்திய வங்கித் துறை எந்தளவிற்கு கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாக இயங்கி வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது, பி.எம்.சி. வங்கியில் நடந்திருக்கும் நிதி முறைகேடுகள். - மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை!
2005-06 ஆம் ஆண்டு பட்ஜெட் தொடங்கி 2017 – 18 ஆம் ஆண்டு பட்ஜெட் முடியவுள்ள பதிமூன்று ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வருமான, சுங்க, உற்பத்தி வரித்தள்ளுபடிகளின் மொத்த மதிப்பு ஏறத்தாழ 42 இலட்சம் கோடி ரூபாய். - தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள்: மந்திரத்தால் மாங்காய் விழாது!
வட இந்திய மாநிலங்களுக்கு இணையாகத் தமிழகத்திலும் தீண்டாமைக் குற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இது சமூக நீதி பூமி எனக் கதைப்பதால் மட்டுமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்திவிட முடியாது. - கீழடி:”ஆரிய மேன்மைக்கு” விழுந்த செருப்படி!
கீழடியில் கிடைத்திருக்கும் தொல்லியல் ஆதாரங்கள் தமிழகத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர நாகரிகம் நிலவி வந்ததை நிரூபிக்கின்றன. - நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடிகள்: பா.ஜ.க.வின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது!
நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்துத் தேர்ச்சி பெறவும் பணம் வேண்டும்; அல்லது, அத்தேர்வில் மோசடி செய்யவும் பணம் வேண்டும். இனி மருத்துவராவதற்கு அடிப்படைத் தகுதி பணம்தான்! - தரம், தகுதி, பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள்!
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்கங்களைச் சேர்ந்த பிள்ளைகள் ஆரம்பக் கல்வி பெறுவதைக்கூடக் கொல்லைப்புற வழியில் தடுக்கும் சதியாகும். - காஷ்மீர்: இதன் பெயர்தான் இயல்பு நிலையாம்!
துக்கமென்றால் அழ முடியாது; மகிழ்ச்சியென்றால் கொண்டாட முடியாது. – இதுதான் மோடி உருவாக்கியிருக்கும் புதிய காஷ்மீர். - காஷ்மீர் போர் குறித்த பா.ஜ.க.-வின் வரலாற்று மோசடி!
பட்டேல் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்ற அமித்ஷாவின் கூற்று பொய் என்பதை பட்டேலின் கடிதப் போக்குவரத்துகள் தொகுதி-1 தெளிவாக்குகிறது. - பா.ஜ.க.-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம்! மருமகள் உடைத்தால் பொன்குடம் !!
ஊழலைச் சட்டபூர்வமாக்கி வருவதோடு, அ.தி.மு.க., உள்ளிட்ட ஊழல் கட்சிகளோடு கூட்டணியும் வைத்திருக்கும் பா.ஜ.க., ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசுவதற்குத் தகுதியற்றது. - மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம்: அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை!
ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே அடையாள அட்டை, ஒரே வரி என்ற வரிசையில் இந்திய மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம். - பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !
பகவத் கீதையைப் பொறியியல் பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது சாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் குற்றங்களைக் கருத்தியல்ரீதியாக நியாயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும். - மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !
மோடியின் பிறந்த நாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதற்காக நர்மதை நதிக் கரையோர விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டது, குஜராத் மாநில அரசு.
- அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா?
இந்தக் கொள்ளை சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை விற்பது தொடங்கி அர்ச்சகர்கள் தட்டில் விழுந்த காணிக்கை வரை பல வழிகளில் நடந்திருக்கிறது.
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
₹15.00Add to cart |
₹15.00Add to cart |
₹15.00Add to cart |