டலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் காவிரி நீரை வீணாக கடலில் கலக்க விட்ட பொதுப்பணித் துறையை கண்டித்தும், எடப்பாடி அரசை பதவி விலகக் கூறியும்,  கல்லூரி நுழைவுவாயிலில் 13.09.2019 அன்று போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழகத்தை நாசமாக்கும் ஹைட்ரோகார்பன் எடுப்பதே மத்திய – மாநில அரசுகளின் நோக்கம். அதன் காரணமாகவே காவிரி வறண்டு கிடப்பதை அனுமதிக்கிறது. எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை.

இந்தப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு எடப்பாடி அரசை பதவி விலகக் கூறியும் தமிழகத்தை நாசமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க