மேசான் மழைக்காடு  முதல்  இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வரை  முன் எப்போதும் இல்லாத அழிவை நாம் எதிர்கொள்கிறோம். இதற்கு கியூப வரலாற்றுப் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ, 30 வருடங்களுக்கு முன்பே சுற்றுச்சுழலை  பாதுகாக்க ஒருகிங்கிணைந்த  செயல்பாடு தேவை என்று அறைக்கூவல் விடுத்தார். இதை கடந்த 1992-ம் ஆண்டு, ஜூன்-2-ம் நாள் அன்று பிரேசிலின் ரியோ டி ஜனேரியோவில் நடந்த ஐக்கிய நாடுகளின் புவி மாநாட்டில் ஐந்து நிமிட உரையாடலில் அப்போதே எச்சரித்தார் பிடெல். முதலாளித்துவ சுயநலத்தின் வெளிப்பாடே பூமியின் இந்த மாற்றம். அவரின் சமூகப் பார்வையில் இன்றைய உலகம் அதற்கான விளைவுகளை எதிர்கொண்டு இருக்கிறது. ஃபிடெல் காஸ்டிரோ ஆற்றிய உரை :

“இயற்கை நமக்களித்த இந்தக் கொடையை  மனிதர்களாகிய நாம் தவறாக பயன்படுத்தி இயற்கையின் அழிவுக்கு வழிவகுத்துக் கொண்டு இருக்கிறோம். இயற்கையையும் மக்களையும் ஆண்டு கொண்டிருக்கும் ஏகாதிபத்திய பேராசையில் இயற்கை வளம் அழிந்து கொண்டிருக்கிறது. முக்கிய உயிரியல் இனங்கள் அழிவை நோக்கி செல்கின்றன. இதைப் பற்றி பேச வேண்டிய தருணமிது. இப்போதும் இதை பேசவில்லை என்றால் மனித இனம் அழிவை சந்திக்க நேரிடும். இயற்கையின் அழிவிற்கு  இந்த நுகர்வு சமூகத்தினர் (மேட்டுக்குடி) முக்கியக் காரணமாகத் திகழ்கின்றனர் .

அவர்கள் முன்னாள் காலனித்துவ பெருநகரத்திலிருந்து பிறந்தவர்கள். அவர்கள் பின்தங்கிய நிலைமையையும் வறுமையையும் உருவாக்கியுள்ள – மனிதகுலத்தின் பெரும்பான்மையினருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கின்ற – ஏகாதிபத்தியக் கொள்கைகளின் வாரிசுகளாக உள்ளனர்.

உலகின் மக்கள் தொகையில் 20% சதவிதம் மட்டுமே உள்ள அவ்ர்கள்ம் மூன்றில் இரு பங்கு உலோகத்தையும், நான்கில் மூன்று பங்கு ஆற்றலையும் பயன்படுத்துகின்றனர். இது மட்டுமின்றி ஒரு பக்கம் தொழிற்சாலை, உற்பத்தி என்கிற பெயரில் காற்று, கடல், நதி என இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. பெரும்பகுதியான காடுகள் அழிக்கப்படுகிறது. பாலைவனம் விரிவடைகிறது. பில்லியன்கணக்கான டன் வளமான மண் வெள்ளத்தால் கடலுக்கு அடித்து செல்லப்படுகிறது. எண்ணற்ற உயிர் இனங்கள் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. மக்கள் தொகை மற்றும் வறுமை வாழ்வை பெரும் கேள்விக் குறியாக்குகிறது.

நியாயமற்ற சர்வதேச பொருளாதார படிநிலைகளால் மிக மோசமாக கொள்ளை அடிக்கப்படுகின்ற இன்றைய மூன்றாம் உலக நாடுகளும் நேற்றைய காலனிய நாடுகளை, இதற்காக நாம் குறை சொல்ல முடியாது. நாம் இதற்கான பதிலைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஏனென்றால், அதில் அழிந்து கொண்டு இருப்பது சாதாரண மக்கள் மட்டுமே. இதன் விளைவு முன்றாம் உலக  நாடுகளில் உள்ள இலட்சக்கணக்கான மக்களின் உயிரை கொன்று குவிக்கிறது. இந்த எண்ணிக்கை இரண்டு உலகப் போர்களிலும் ஒவ்வொன்றிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகம்.

சமமற்ற வர்த்தகம்,  பாதுகாப்புவாதம் மற்றும் வெளிநாட்டுக் கடன் ஆகியவை சுற்றுச்சூழல் சமநிலையைத் தாக்கி சுற்றுச்சூழலின் அழிவை ஊக்குவிக்கின்றன. இந்த அழிவிலிருந்து பாதுகாக்க எல்லோருக்கும் உணவு மற்றம் சுகாதாரம்  கிடைக்க வழிவகுக்கச் செய்ய  வேண்டும்.  உலகில் மிகக் குறைந்த ஆடம்பரம், குறைந்த கழிவுகள் என்பதை வலியுறுத்தும் நாடுகளில், வறுமையின் அளவு குறைவாக உள்ளது.

சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் நுகர்வு பழக்கத்துக்கும் மூன்றாம் உலக வாழ்க்கை முறைகளுக்கும், மாறுவதை நிறுத்துங்கள். மனித வாழ்கையை இன்னும் பகுத்தறிவுடையதாக மாற்றுங்கள். ஒரு முறையான சர்வதேச பொருளாதார ஒழுங்கை பின்பற்றுவோம். மாசு இல்லாமல் நிலையான வளர்ச்சியை அடைய அறிவியலைப் பயன்படுத்துவோம். வெளிநாட்டுக் கடனை தவிர்த்து சுற்றுச்சுழலுக்கு பட்ட கடனைச் செலுத்துங்கள். மனித நேயத்தை ஒழிக்காமல் வறுமையை ஒழியுங்கள்.

படிக்க:
ஃபிடல் காஸ்ட்ரோ – சிறப்புக் கட்டுரை !
சுற்றுச் சூழல் : மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலி !

தற்போது நாம் உடனடியாக செய்ய வேண்டியது மூன்றாம் உலக நாடுகளின்  வளர்ச்சியை ஊக்குவித்து, அவற்றின் வளங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதும், பூமியை அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் அழிவை எதிர்ப்பதும் தான். அதுவே நமது தலையாய கடமை.

சுயநலத்தைக் கைவிடுவோம். ஏகாதிபத்தியத்தின் பொருளாதார கொள்கைகள்,  ஆதிகத்தின் திட்டங்கள், அவற்றின் பேராசை ஆகியவற்றிற்கு முற்றுப் புள்ளி வைப்போம். ஏகாதிபத்தியங்களின் பொறுப்பற்ற தன்மை மற்றும் வஞ்சகத்தை முறியடிப்போம். வெகுநாட்களுக்கு முன்னரே நாம் செய்து முடித்திருக்க வேண்டியதை, நாளை தொடங்குவோம் எனத் தள்ளிப்போடுவது மிகவும் தாமதமான ஒன்று. இன்றே தொடங்குவோம் சுற்றுச்சுழலை காப்போம் !”

கட்டுரையாளர் : ஃபிடல் காஸ்டிரோ
தமிழாக்கம் : சிந்துஜா
செய்தி ஆதாரம் :
liberationnews

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க