டந்த வியாழக்கிழமை (19-09-2019) அன்று தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி-4 ஆய்வின் முடிவுகளானவை வெறும் தமிழ் – இந்திய வரலாற்றினை மட்டுமன்றி, தென்னாசிய வரலாற்றினையும் சேர்த்தே மாற்றி எழுதவேண்டிய ஒரு தேவையினை ஏற்படுத்தியுள்ளன.

இந்த ஆய்வு முடிவுகளில் சில ஏற்கனவே ஊடக மட்டங்களில் பேசப்பட்டு வந்த செய்திகள்தான் என்றபோதும், அவை அறிவியல் சான்றுகளுடன் அரசினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது முதன்மையானதே. ஏறக்குறைய 45 ஆண்டுகளிற்கு முன்னர்  சிவகங்கை மாவட்டத்தில் ஒரு மாணவனால் கண்டெடுக்கப்பட்ட ஒரு தொல் பொருள், ஒரு ஆசிரியரின் (பாலசுப்பிரமணியம்) கவனத்தினைப் பெற்றதிலிருந்து கீழடி ஆய்விற்கான விதை போடப்பட்டது.

archeologist-Amarnath Ramakrishnan
கீழடி அகழ்வாய்வுப் பனிகளில் அமர்நாத் இராமகிருஷ்ணன்.

பின்னர் நடுவண் அரசினால் 2014 ம் ஆண்டிலிருந்து  மூன்று கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதில் முதலிரு கட்டங்கள் அமர்நாத் ராமகிருசுணனால் சிறப்பாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலக்கணிப்பினைச் செய்வதில் நடுவண் அரசானது வேண்டுமென்றே பல குளறுபடிகளைச் செய்தது.  முதலில் கண்துடைப்பிற்காக வெறும் இரு பொருட்களை மட்டுமே ஆய்விற்கு அனுப்பியது. அதுவும் கீழ் மட்டங்களில் கிடைத்த பொருட்களை தெரிவுசெய்யாமல் (எப்பொழுதும் தொல்லியல் மேடுகளில் கீழ் மட்டத்திலேயே மிகப் பழைய காலப் பொருட்கள் கிடைக்கும்), வேண்டுமென்றே இடை மட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பொருட்களையே ஆய்விற்கு அனுப்பியது. அதன் பின்னரும் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்த தயங்கியே வந்தது.  நாடாளுமன்றத்தில் நா.உ (MP ) கனிமொழி கேள்வி எழுப்பிய பின்னரே ஆய்வு முடிவினை வெளியிட்டது.

அதில் அப்போதே கீழடித் தொல் பொருட்கள் பொ.மு 2ம் நூற்றாண்டைச் (BCE 2nd cent) சேர்ந்ததவை எனக் கண்டறியப்பட்டது.  இதன் பின்னர் சிறப்பாகச் செயற்பட்ட அமர்நாத் ராமகிருசுணன் வேண்டுமென்றே இடமாற்றப்பட்டு, சிறீராம் என்பவரின் தலைமையில் 3 -ம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இந்த ‘சிறீராம்’ என்பவர் தனது பெயரிற்கேற்ப ‘பொலோ ஜெய் ஸ்ரீராம்’  எனக் கூச்சலிடும் குழுவின் தாளத்திற்கேற்பவே ஆடினார்.  உண்மையில் முதலிரு கட்ட ஆய்வுகள் சுட்டிய பாதையில் தொடராமல், அதற்கு எதிர்த்திசையிலேயே வெறும் எட்டு குழிகளை மட்டுமே தோண்டி, அங்கு குறிப்பிடும்படி எதுவுமேயில்லை எனக்கூறி ஆய்வினை நிறுத்திக்கொண்டார். நடுவண் தொல்லியல் துறையானது இதே காலப்பகுதியில் குச(ஜ)ராத், உத்திரப்பிரதேசப் பகுதிகளில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளிற்குக் கொடுத்த முதன்மையினை கீழடிக்கு இறுதிவரைக் கொடுக்கவேயில்லை.

இந்த நிலையிலேயே தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நான்காம் கட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்தது. இப்போது  ஐந்தாம் கட்ட ஆய்வும் முடிவுறும் வேளையிலுள்ளபோதும், வியாழன் அன்று வெளியானது நான்காம் கட்ட ஆய்வின் அறிவியல் சான்றுகளுடனான அதிகாரபூர்வ முடிவுகளேயாகும்.  இதுவே பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வில் தெரியவந்தவை:

நான்காம் கட்ட ஆய்வு முடிவுகளை தமிழக அரசின் தொல்லியல் துறையானது ‘கீழடி -தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி’ என்ற தலைப்பிலான ஒரு நூலாகவே வெளியிட்டுள்ளது. அந்த நூலின் PDF வடிவமானது இக் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.  இவ்வாய்வில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை அமெரிக்க ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகல் ஆய்வுகூடத்திற்கு அனுப்பி AMS (Accelerated mass spectometry) முறையில் மேற்கொள்ளப்பட்ட கரிமச் சோதனை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு  அவற்றின் காலம் பொ.மு 6-ம் நூற்றாண்டு (BCE 6th cent) எனக் கண்டுள்ளார்கள்.  மேலும் ஆய்வு முடிவானது பின்வரும் வழிகளில் முதன்மை பெறுகின்றது.

படிக்க:
சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !
♦ தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்

சங்ககால பின்நோக்கிய காலவரையறை – சங்க காலமானது பொ.மு ஆறாம் நூற்றாண்டுவரைப் (BCE 6th cent) பின்நோக்கிச் சென்றுள்ளது. எனவே இனிச் சங்ககாலம் என்பது பொ.மு 600 (BCE 600) இலிருந்தே தொடங்கும்.

தமிழர்களின் நகர நாகரிக காலம் –  இதுவும் முதலில் கூறிய காலத்திற்கே (BCE 600) செல்லும். மேலும் இக் காலப்பகுதியிலேயே சிந்துவெளி நாகரிகத்திலும் இரண்டாம் நகர உருவாக்கப்பட்டிருந்த காலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தமிழி எழுத்தின் காலமும்  BCE 6-ம் நூற்றாண்டே – இங்கு கிடைத்த பானை ஓடுகளிலுள்ள எழுத்துகளது காலமும் பொ.மு 6ம் நூற்றாண்டு (BCE 600) என சான்றுப்படுத்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் இந்தியாவில் முதலில் எழுத்துகளைப் பயன்படுத்தியோர் தமிழர்களே என்பதும், அசோகரின் பிராமி எழுத்துகளை விட தமிழி 300 ஆண்டுகள் பழமையானவை என்பதும் சான்றுபடுத்தப்பட்டுவிட்டது.

எழுத்துகளின் பரவலான பயன்பாடு – எழுத்துகள் சிலரால் மட்டுமல்லாமல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கீழடி அகழாய்வில் 1001 ஓடுகள் இத்தகைய எழுத்து வரி வடிவங்களுடன் கிடைத்துள்ளன.  தமிழ்நாடு அரசு மேற்கொண்ட அகழ்வாய்வில் மட்டுமே 56 தமிழி எழுத்துகளைக் கொண்ட பானையோடுகள் கிடைத்துள்ளன. இந்த எழுத்துகள் பெரும்பாலும் பானைகளின் கழுத்துப் பகுதியில் எழுதப்பட்டுள்ளன. பானையில் கிடைக்கும் எழுத்துகள் பெரும்பாலும் பானை செய்வோரால் சுடுவதற்கு முன்பாக ஈர நிலையில் எழுதப்படும். கீழடியில் பானைகள் சுடப்பட்டு, உலர்ந்த பிறகு எழுதப்பட்ட எழுத்துகள் கிடைத்துள்ளன. அவற்றின் எழுத்தமைதி (கையெழுத்து) ஒரே மாதிரியாக இல்லை. ஆகவே வெவ்வேறு ஆட்கள் இவற்றை எழுதியுள்ளமை தெரியவந்துள்ளது. இதனால் எழுத்துகளின் பரவலான பயன்பாடு தெரியவந்துள்ளது.

சிந்துவெளி நாகரிக எழுத்திற்கும்-தமிழிற்குமிடையேயான தொடர்பு –  பொதுவாக மனிதனின் படிமலர்ச்சி பற்றிப் பேசும்போது ‘விடுபட்ட இணைப்பு’ {Missing link in human evolution} ஒன்று பற்றிப் பேசப்படும். அதுபோன்றே, எழுத்துகளின் படிமலர்ச்சியிலும் சிந்துவெளி வரி வடிவத்திற்கும், தமிழிற்குமிடையே ஒரு விடுபட்ட தொடர்பு இருப்பதாகக் கருதுவார்கள். அதற்கான வெளிச்சம் இப்போது கிடைத்துள்ளது.

கீழடி
சிந்து சமவெளி மற்றும் கீழடி எழுத்துக்கள் ஒரு ஒப்பீடு.

வேளாண்மை –  திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு போன்றவற்றின் எலும்புகள் மக்கள் வாழ்விடங்களில் கிடைத்ததன் மூலம் அவ் விலங்குகளை வேளாண்மைக்குப் பயன்படுத்தியிருப்பதனை அறியமுடிகின்றது. இதன்மூலம் சங்ககால சமூகம் வேளாண்மையினை முதன்மைத் தொழிலாகவும், கால்நடை வளர்ப்பினையும் ஒரு துணைத் தொழிலாகவும் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மேலும் தானியங்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் பானைகளும் கிடைத்துள்ளன.

கைத்தொழில் – முதன்மையான கைத்தொழிலாக பானை வனைவு காணப்படுகின்றது.  பானைகளைப் பொருத்தவரையில் தண்ணீர் சேமித்து வைக்கவும், சமையலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பானையோடுகள் இத்தாலியிலுள்ள பைசா பல்கலைக்கழகத்திற்கு (Universita Di Pisa) அனுப்பிச் சோதனைசெய்யப்பட்டதில், உள்ளூர் மண் பயன்படுத்தப்பட்டுள்ளமையும், தனித்த பானை வனைவு நுட்பம் பயன்படுத்தப்பட்டமையும் தெரியவந்துள்ளது. மேலும் கருப்பு சிவப்பு நிற பானையோடுகளிலிருந்து பானை செய்வதற்கு இரும்புத்தாதுப் பொருளான கேமடைட் – Hematite  (சிவப்பு நிறக் காரணம்), கரியினையும் (கருப்பு நிறக் காரணம்) பயன்படுத்தி 1100 பாகை செ வெப்பநிலையில் சுட்டுப் பானைகளை உருவாக்கியுள்ளார்கள்.  மேலும் பைசா பல்கலைக்கழக அறிக்கையில் 4 நூற்றாண்டுகளாக  (BCE6th cent –  BCE 2nd cent) இத்தகைய நுட்பத்தினைப் பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.  நெசவுத் தொழில் நுட்பத்தினை வெளிக்காட்டும் வகையில் நூல்களை நூற்கும் தக்களி, எலும்பிலான தூரிகைகள் (துணியில் வடிவங்களை வரைய), தறியில் தொங்கவிடப்படும் கருங்கல், சுடுமண்ணிலான குண்டு, செம்பிலான ஊசி என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

படிக்க:
துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019
♦ கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு

கட்டிடக்கலை – கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட செங்கற்கள், சுண்ணாம்புச்சாந்து, கூரை ஓடுகள் என்பன வேலூர் பல்கலைக்கழகப் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டதில் சங்ககால மக்களின் கட்டிடத் தொழில்நுட்பம் தெரியவந்துள்ளது.  செங்கற்களில் 80%  -இற்கும் கூடுதலாகச் சிலிக்காவும், பிணைப்பிற்காக 7 % சுண்ணாம்பும் கலந்துள்ளார்கள். சுண்ணாம்புச் சாந்தில் 97 %  சுண்ணாம்பு இருந்துள்ளது. இத்தகைய கலவைகளை நுட்பமாகப் பயன்படுத்தியதாலேயே கட்டிடங்கள் நீண்டகாலம் நிலைத்து நின்றிருக்கின்றன.  களிமண்ணால் அமைக்கப்பட்ட தரைத்தளங்களும் , கூரையில் பயன்படுத்தப்பட்ட ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், கூரைகளில் மரங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என உய்த்துணர முடிகின்றது. ஓடுகளில் மழை நீர் வடிந்தோடக்கூடிய வகையில் சிறு பள்ளங்களும் உள்ளன.  தச்சு வேலையும் இருந்துள்ளது.

வணிகம்  –  கீழடி அகழ்வாய்வில் குசராத் போன்ற வட இந்தியாவில் கிடைக்கும் அகேட் மற்றும் சூதுபவளம் போன்ற மணிகள் கண்டுபிடிக்கப்பட்டமையும், உரோமன் நாட்டு அரிட்டைன்  பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டமையும் தமிழர்களின் வணிகத் திறனை வெளிக்கொண்டுவந்துள்ளன. {இவ்விடத்தில் ஐந்தாம் கட்ட ஆய்வில் செப்பு-வெள்ளிக் காசுகளும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது 4ம் கட்ட ஆய்வறிக்கை என்பதால் காசுகள் இங்கு குறிப்பிடப்படவில்லை}. வணிகத்தின் மூலமாகப் பொருட்கள் மட்டுமன்றி, தொழில்நுட்ப இறக்குமதியும் நடைபெற்றுள்ளமை வியப்பிற்குரியது. இங்கு கிடைத்த ரௌலட்டட் பானை ஓடுகள்  முன்னர் உரோம நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பானை ஓடுகள் என்றே கருதப்பட்டன. ஆனால், பிந்திய முடிவுகள் உரோமன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டவை என மண்ணின் மாதிரி ஆய்வுகள் மூலம் கண்டுகொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருட்களை மட்டுமல்லாமல் தொழில்நுட்பத்தினையும் இறக்குமதி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

கலையுணர்வும், அழகுணர்வும் – அக் கால மக்கள் அணிகலன்களாக தங்கத்திலான அணிகலன்கள், செப்பு அணிகலன்கள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், பளிங்கு கற்களிலான மணிகள், சங்கு வளையல்கள், தந்தத்திலான வளையல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தியமையும் தந்தத்திலான சீப்பினைப் பயன்படுத்தியமையும் தொல்லியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. சுடுமண் உருவங்களை உருவாக்கியமை பழங்காலத் தமிழர்களின் கலைக்குச் சான்றாகவுள்ளன. கீழடி அகழ்வாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட 13 மனித உருவங்களும், 3 விலங்கு உருவங்களும் கிடைத்துள்ளன.

விளையாட்டுகள் – தாயத்தில் பயன்படுத்தப்படும் பகடைக் கட்டைகள் , வட்டச்சில்லுகள் போன்ற விளையாட்டுப் பொருட்கள் 600-ற்கும் கூடுதலான பொருட்கள் கிடைத்துள்ளன. இங்கு விளையாடப்பட்ட ஒரு வகையான விளையாட்டே இன்றும் ‘பாண்டி’ என்ற பெயரில் 2600 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகின்றது.   சிறுவர்கள் இழுத்து விளையாடும் வண்டிகளின் சில்லுகளும் கிடைத்துள்ளன.

இவ்வாறு கீழடி அகழ்வாய்வு 4 -இன் முடிவானது பல்வேறு வழிகளில் வியப்பினை ஏற்படுத்துகின்றது. {மேலும் வியப்படைய கட்டுரையின் கீழுள்ள இணைப்பினைப் பார்க்க}.

படிக்க:
சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !
♦ கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

சங்க இலக்கியங்களை மெய்ப்பிக்கும் கீழடி ஆய்வு :

சங்க இலக்கியங்கள் என்பன வெறும் கற்பனையல்ல, அவை அக் கால மக்களின் வாழ்க்கையினை வெளிக்காட்டும் கலைப் படைப்புக்களே என்பதற்கான சான்றுகளும் கீழடி ஆய்வில் கிடைத்துள்ளன. சங்ககாலப் பாடல்களில் உயர்வு நவிற்சி, உவமை போன்றவை இடம்பெற்றிருந்தாலும், அவற்றினை அணுகிப் பார்ப்பதன் மூலம் அக் கால மக்களின் வாழ்வியலினையும் அறிந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாகப் பின்வரும் சங்ககாலப் பாடலைப் பாருங்கள்.

`அற நெறி பிழையாது, ஆற்றின் ஒழுகி,
குறும் பல் குழுவின் குன்று கண்டன்ன
பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல்,
பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி,
மலையவும், நிலத்தவும், நீரவும், பிறவும்,
பல் வேறு திரு மணி, முத்தமொடு, பொன் கொண்டு,
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்`  –   { மதுரைக் காஞ்சி 500-505}

பொருள் –  பயிர்செய்து பெற்ற பொருள்களைப் ‘பண்டம்’ என்றும், கைவினைப் பொருள்களைப் ‘பண்ணியம்’ என்றும் இப் பாடற்பகுதி தெளிவுபடுத்துகிறது.  பண்டங்களையும் , பண்ணியங்களையும் விற்பனை செய்வோர் அறநெறி பிழையாமல் நன்னடத்தை கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களது வீடுகள் குன்றுகள் போன்றவை. பருந்துகள் அமர்ந்து இரை தேடும் அளவுக்கு உயரமான அடுக்கு மாடிகளைக் கொண்டவை.

இங்கு வேளாண்மைத் திறன், கைவினைத் திறன், வணிகம் என்பனவற்றின் சிறப்புகள் பேசப்படுகின்றன. இவற்றுக்கான சான்றுகளை ஏற்கனவே இக் கட்டுரையில் ஏற்கனவே பார்த்துள்ளன. மேலும் உயர்ந்த கட்டிடக்கலை பற்றியும் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

இன்னொரு பாடலையும் பாருங்கள் :

மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொருது இரங்கு முந்நீர் போலக்
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் நாளங்காடி’  -(மதுரைக்காஞ்சி 425)

பொருள் – வேற்று நாட்டிலிருந்து எவ்வளவுதான் கப்பல் கப்பலாகப் பொருள்களைக் கொண்டுவந்து குவித்தாலும், அல்லது கப்பல் கப்பலாக இங்குள்ள பொருள்களை அள்ளிச் சென்றாலும், அவற்றால் மதுரை நகர நாளங்காடி  (பகற்கடை) நிலை மாறுபடவில்லையாம்.

இதுவும் வெறும் வெற்றுப்பெருமையல்ல என கீழடி ஆய்வுகளை அணுகிப் பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவை மட்டுமன்றி மதுரை நகர் பற்றிய பல சங்ககாலப் பாடல்களை உண்மை என மெய்ப்பிக்கும் வகையில் கீழடி ஆய்வு அமைந்துள்ளது.

விளையாட்டுக்கள் பற்றிய சங்ககாலப் பாடல்களைப் பார்ப்போமா!

`முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம்
பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள்` –  (கலித்தொகை136)

இங்கு இடம்பெறும் வரிகளின் பொருள் – முத்துப் போன்ற மணலில் நீ என் தலைவிக்கு அருள் செய்தாய். அப்போது அவள் கவறு விளையாட்டில் “பத்து” எண்ணிக்கை உருவம் பெற்றவள் போல மகிழ்ந்தாள்.

இன்னொரு கலித்தொகைப் பாடலையும் பாருங்கள் :

முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால், வித்தாயம்
இடைத் தங்கக் கண்டவன் மனம் போல, நந்தியாள்`

பொருள் – முடம் பட்டிருந்த தாழை மர முடுக்கில் நீ இவளுக்கு அளி செய்தாய். அப்போது அவள் வித்தாயம் பெற்றவள் போல மகிழ்ந்தாள். {ஒன்று தெரிந்தால் அதனைத் தாயம் (வித்தாயம்) என்று குறிப்பிடுவர்}.

மேற்கூறிய இரு பாடல்களிலும் குறிப்பிடப்படும் தாயக் கட்டைகள் கீழடி-4  ஆய்வில் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாம் செய்யவேண்டியவை :

இவை எல்லாம் எமது முன்னோர்களின் பெருமையே. இப்போது நாம் என்ன செய்யலாம். முதலில் சங்ககால எழுத்துகளை இனி ‘தமிழி’ என்றே (தமிழ் பிராமி அல்ல) அழைப்போம்.

♦ கீழடிப் பெயர்களை { ஆதன் , சேந்தன், உதிரன், திசன், இயனன், குவிரன், கோதை…..} நாளாந்தப் பயன்பாட்டிற்குக் (குழந்தைகளின் பெயர் + நிறுவனப் பெயர்கள் + புனை கதை மாந்தர்களின் பெயர்கள்… என)  கொண்டு வருதல் வேண்டும்.

♦ மேலதிக ஆய்வுகளிற்காகக் குரல்கொடுப்பதுடன், அது தொடர்பான தேடல்களில் ஈடுபடுதலும், அவற்றினை ஏனையோரிற்குக் கொண்டு செல்லவும் வேண்டும்.

♦ இற்றைக்கு 2600 ஆண்டுகளிற்கு முன்னரே சாதி மதமற்ற மனிதர்களாகத் தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்ற செய்தி மூலம் சாதி-மத இடைச்செருகல்களைத் தவிர்த்து மனிதர்களாக வாழவேண்டும்.

♦ இறுதியாக, எல்லாவற்றையும் விட ஒரு மொழியின் தொன்மையினை விடத் தொடர்ச்சியே முதன்மையானது. எனவே முடிந்தளவிற்குத் தமிழை வாழ்க்கையில் பயன்படுத்துவதுடன், இதனை வருங்காலத் தலைமுறைகளிற்கும் கடத்தவும் வேண்டும்.

குறிப்பு – நான்காம் கட்ட ஆய்வு முடிவுகளை தமிழக அரசின் தொல்லியல் துறையானது ‘கீழடி -தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி’ என்ற தலைப்பிலான ஒரு நூலை வெளியிட்டிருந்தது, அதன் PDF  வடிவம் தமிழிலும் ஆங்கிலத்திலும் கீழுள்ள இணைப்பில் உள்ளது.

கீழடி -தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி தமிழ் நூலை தரவிரக்கம் செய்ய அழுத்தவும்.

KEELADI – An Urban Settlement Of Sangam Age On the Banks Of River Vaigai ஆங்கில நூலை தரவிரக்கம் செய்ய அழுத்தவும்.

வி.இ.  குகநாதன்

31 மறுமொழிகள்

 1. மிக சிறந்த கட்டுரை .. கட்டுரையில் பாராட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், கட்டுரையில் எங்குமே கீழடி நாகரீகத்தை,திராவிட நாகரீகம் என்று பூசி மழுப்பாமல் “தமிழ் நாகரீகம்” என்று கூறியமை மிக நேர்மையான ஒன்றே.. ஆரியம் ஒரு பக்கம் தமிழரின் பண்பாட்டை சிதைத்து தனதாக்கி கொள்ள நினைத்தது என்றால், திராவிடம் இன்னொருபுறம் தமிழ் பண்பாடுகளை இருட்டடிப்பு செய்தது. ஆக, இரண்டு இடிபாடுகளிலும் இருந்து தமிழை மீட்டெடுக்க வேண்டியது மிக தமிழர்களின் முக்கியமான ஒரு வேலை..

  ஏற்கனவே மேற்படி ஆசிரியரின் “தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை” என்னும் கட்டுரையில், சிந்து வெளி எழுத்துக்களோடு ஒத்த எழுத்துரு கொண்ட மொழி தமிழ்தான் என்று நான் கூறியது அறிவியல் பூர்வமாக இன்று கீழடியில் மெய்ப்பிக்க பட்டுள்ளது. ஆக, சிந்துவெளியில் பேசியது சற்றேற குறைய “பழந்தமிழி” மொழி தான் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. இன்னும் ஆய்வுகள் முழுமையாக நடந்தால் பல உண்மைகள் வெளிப்படலாம்.

  வேத பண்பாடு தான் மிக பழமையானது என்கிற பார்ப்பன புளுகுகள் செவிட்டில் அடித்து விரட்டப்பட்டிருப்பது ஆய்வின் தனித்துவமான உச்சம் .. முகநூலிலும் சமூக வலைதளங்களிலும் பார்ப்பன குளுவான்கள் கீழடிக்கு எதிராக கருத்து பதிவிட்டதிலேயே, பார்ப்பன வேத சாயம் வெளுத்துவிட்டது மிக பெரிய வெற்றி. மேலும் பல தமிழரின் தனித்துவங்களை காண பொறுத்திருப்போம்..

 2. ஒரு விடயத்தில் அரசியல் செய்தால் அதற்கு பதிலடியாக அரசியல்தான் விளையும். கீழடி அகழ்வாராய்ச்சி விடயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. பத்து சதவிகித அகழ்வாராய்ச்சி கூட முடியவில்லை. அதற்குள் கீழடியில் மதச்சார்பின்மை கலாச்சாரம் இருந்தது என்று திராவிட பதர்களும் கம்யூனிஸ்ட் கோமாளிகளும் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டார்கள். மத்தியில் இருக்கும் இந்துத்துவ அரசு இதையே சாக்காக வைத்து ஆய்வுகளை ஊத்தி மூடிவிட்டது. பண்டைய மக்கள் சமூகங்கள் அனைத்தும் இறையச்சம் கொண்ட சமூகங்களாவே இருந்து வந்திருக்கின்றன. இதற்கு கீழடி மக்களும் விதிவிலக்கு அல்ல. அவர்கள் பெரியார் கருணாநிதி வீரமணி மாதிரி பகுத்தறிவு பேசக் கூடியவர்களாக நிச்சயம் இருந்திருக்க முடியாது. மதச்சார்பின்மையை கடைப்பிடிப்பதற்கு இன்று இருப்பது மாதிரி நிறைய மதங்களும் அன்று அவர்களிடம் இருந்திருக்க முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கங்கைக்கரையில் கூட சிலை வழிபாடுகள் மிக குறைவு. கீழடியில் வாழ்ந்த மக்கள் காலஞ்சென்ற தங்கள் மூதாதையர்களை தெய்வங்களாக வணங்கி இருக்கலாம். அல்லது வேறு வகையான இறைவணக்கம் அவர்களிடம் நிச்சயம் இருந்திருக்கும். கடந்த 2500 ஆண்டுகாலமாக இந்தியத் துணைக்கண்டத்தின் அனைத்து குழுக்களின் கலாச்சாரங்களையும் தனக்குள் உள்ளிழுத்துக் கொண்ட சமஸ்கிருதத்தின் ஆக்கங்களில் ஏதோ ஒரு இடத்தில் இது குறித்த தகவல் நிச்சயம் பதிவாகி இருக்கக்கூடும். சமஸ்கிருதத்தின் வேர் மத்திய ஆசியாவில் இருந்தாலும் ரிக் வேதம் இந்தியாவுக்கு வெளியே புனையப்பட்டு இருந்தாலும் கடந்த 2500 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் சமஸ்கிருதம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது. இங்கிருக்கும் எல்லா இனக்குழுக்களின் கலாச்சாரங்களையும் வழிபாட்டு முறைகளையும் அது உள்ளே இழுத்துக் கொண்டது. கீழடியில் வாழ்ந்த மக்கள் மதச்சார்பின்மையை கடைபிடித்தார்கள். அவர்கள் பகுத்தறிவு கொண்டவர்கள் என்று சொல்வதே கோமாளித்தனம். இந்த உண்மையை சொல்வதால் என்னை சிலர் சங்கி என வசை பாடலாம். பரவாயில்லை.

 3. மத்திய அரசு அகழ்வாராய்ச்சி செய்து வெளிக்கொணரும் உண்மைகளுக்கு அகில இந்திய மற்றும் சர்வதேச அளவில் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் மாநில அரசின் அகழ்வாராய்ச்சிக்கு நிச்சயம் கிடைக்காது. கீழடி அகழ்வாராய்ச்சி விடயத்தில் மத்தியில் இருக்கும் இந்துத்துவ அரசு நேர்மையோடு நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில் உண்மையை சிலகாலம் நிறுத்தி வைக்கலாம் மறைத்தும் வைக்கலாம். எக்காலத்திலும் அதை செய்யமுடியாது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சர்வதேச அளவிலான அறிவியல் ஆய்வு இதழ்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அரசியல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்திய மக்கள் தோற்றம் குறித்து விளக்கும் இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவை வட இந்திய மக்கள் (குறிப்பாக உயர் சாதியினர்) உருவாக்கம் குறித்த அசிங்கமான உண்மை ஒன்றை இலை மறை காயாக உரத்து வெளிப்படுத்தியுள்ளன. தலைகீழாக நின்றாலும் உண்மைகளை யாராலும் தடுக்கமுடியாது. இந்த அரசு செய்யவில்லை எனில் எதிர்காலத்தில் வேறு யாராவது வந்து செய்வார்கள். அல்லது வேறு நாட்டினர் வேறு துறை ஆராய்ச்சிகள் மூலம் கூட இந்த உண்மைகளை வெளியிடலாம்.

 4. 100 அகழ்வாராய்ச்சி முடிந்த சிந்து சமவெளியில் எந்த பார்ப்பன வேத பண்பாடுமில்லை. 10 சதம் தான் முடிந்திருக்கிறது என்பதாலேயே மீதம் உள்ளதில் பார்ப்பன ஆதிக்கம் இருக்கும் என்று அர்த்தமில்லை, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், நிற்க..

  கீழடி மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதிகளாக இருந்தார்கள் என்று யாரும் இது வரை சொன்னதில்லை, வினவிலும் அவ்வாறு வந்ததில்லை என்றே நினைக்கிறன். அவர்கள் சொன்னது, கீழடி மக்களிடம் நடுகல் வழிபாடு முன்னோர் வழிபாடு, இயற்க்கை வழிபடு போன்றவை இருந்திருக்கலாம் என்பது மட்டும் தான். குறிப்பாக பார்ப்பன வேத புரோகித குப்பைகள் அங்கு கிடையாது, சாதி ரீதியிலான ஏற்ற தாழ்வுகளும் இருந்ததில்லை. இவைகள் தான் முக்கியமான ஒன்று. இன்று இந்தியா முழுவதும் கீழடி பேசு பொருளாக இருப்பதும் இதனால் தான். அதனால் தானோ என்னவோ இதனை எப்படியாவது ஆரியமயமாக்கிட காவி ஓநாய்கள் வாயில் எச்சில் சொட்ட காத்து நிற்கின்றன . தமிழர்கள் இதில் ஏமாந்து விட கூடாது, விழிப்புடன் இருக்க வேண்டும் …

 5. தமிழ் மற்றும் இந்திய ஆராய்ச்சியாளர்களின் அறிவு நாணயத்தை இழிவு செய்து வெளிநாட்டு ஆய்வாளர்கள் மீது நம்பிக்கை வைக்கும் பெரியசாமி தமிழக தொல்பொருள் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை வரவேற்கிறார்…!!! சிந்துவெளி நாகரிகத்தில் பேசப்பட்ட மொழி திராவிடமொழி ஆனால் தமிழ் அல்ல என்று வாதிட்டவர் இன்று கீழடியில் சிந்து சமவெளியை ஒத்த தமிழி எழுத்துக்கள் கிடைத்தது பற்றி மவுனம் காக்கிறார்…!!! மேலும் தன்னை ‘சங்கி’ என்று வைவார்கள் என்று தற்காத்துக் கொள்கிறார்..!

  நிற்க!
  ரெபெக்கா மேரி திராவிட இயக்கங்கள் ஆண்டாளின் வரலாற்றை விமர்சனம் செய்ததை இருட்டடிப்பு என்று கொள்கிறாரா..?

 6. கீழடியின் உண்மை நிலவரத்தை வெளி உலகுக்கு எடுத்து சொல்ல உலக நாடுகளிலுள்ள தமிழ் தலைவர்களை அழைத்து மக்கள் அதிகாரம் ஒரு மாநாடு நடத்தினால் நல்லது ஊழல் அரசியல் வாதிகளிடம் இதை எதிர்பார்க்க முடியாது

 7. நான் எழுதிய முக்கியமான பின்னூட்டத்தை இந்த தளத்தினர் வெளியிடவே இல்லை.

 8. the federal.com என்னும் தளத்தில் பிரதீப் ஜான் என்பவர் எழுதி இன்று வெளியான கீழடி ஆய்வு முடிவுகள் குறித்த கட்டுரையைப் படித்துவிட்டு உங்கள் உளறலை தொடரலாம். குகநாதன் என்னும் கோமாளிக்கும் சேர்த்துதான். தமிழ்நாட்டு மக்களை அரசியல்வாதிகள் ஊடகத்துறையினர் மற்றும் தமிழறிஞர்கள் என்னும் கோமாளிகள் எந்த அளவுக்கு கெடுத்து இனவெறி ஏற்றி வைத்திருக்கிறார்கள்!.

 9. pakrishnan.com தளத்தில் போய் தமிழ் வடிவ கட்டுரையை படிக்கவும். எழுதியவர் பெயரை தவறாக குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்.

 10. பி.ஏ .கிருஷ்ணன் போன்றோரின் உளறல்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பி.ஏ. கிருஷ்ணனை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் தன்னை ஒரு இந்திய தேசியவாதியாக காட்டி கொள்ளும் ஒரு போலித்தனமான லிபரல் பார்ப்பான் அவ்வளவே.. இப்போது கீழடியை பற்றி இவர் கட்டுரையின் துவக்கத்திலேயே அதனை பார்க்கலாம் ” Keeladi, though it may sound surprising to many Tamil zealots,” தமிழ் வெறியர்களுக்கு(Zealots என்றால் வெறியர்கள்) இது வியப்பை தரலாம் என்று பார்ப்பன வக்கிரத்துடனேயே தான் துவக்குகின்றார். இதே இந்நேரம் கீழடியில் இருந்து ஒரு நடராஜர் சிலையோ அல்லது தசாவதார சிலையோ கிடைத்திருந்தால் கீழடி நாகரீகம் 10000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறி இருந்தாலும்,இதை பற்றி எதுவும் பேசி இருக்கமாட்டார்.

  Carbon dating இந்த நம்ப தன்மையை பற்றி பேசும் இந்த பார்ப்பான், இது வரை பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோவில் இருந்தது அதற்க்கு உள்ளது என்று காவி வானரங்கள் போலியாக பொய்களை அடுக்கிய போது அதை எதிர்த்து மயிரளவும் பேசாத இந்த மனிதர் இப்போது கீழடிக்காக நாயை குறைப்பதன் நோக்கம் என்னவென்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். தமிழ்ப்பெருமை பேசும்போதெல்லாம் இந்த பார்ப்பனர் தேசியம் என்கிற பெயரில் எப்போதும் அதற்க்கு எதிர் வினையாற்றுவார்.

  கரிம பகுப்பாய்வு என்பது எடுத்துக் கொள்ளமுடியாத ஒரு ஆதாரமென்றால், கீழடி மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல் உலகின் எந்த ஒரு நாகரிகமும் பழமையானதல்ல என்று கூறிவிடலாம். இந்தியாவிலுள்ள அனைத்து நாகரீகங்களின் தொன்மங்களும் கார்பன் பகுப்பாய்வின் மூலமாக தான் உறுதி செய்ய படுகின்றது. கரிம பகுப்பாய்வை பற்றி பேசும் இந்த பார்ப்பனர், இதுவரை வேதம் என்பது 7000 ஆண்டுகள் பழமையானது என்று எந்த ஆதாரமுமில்லாமல் பேசி திரியும் அடித்துவிடும் பார்ப்பன கூட்டத்தை கண்டித்து ஒரு அறிக்கை கூட விட்டது கிடையாது. இது தான் இவரின் யோக்கியதை.

  இவருடைய இன்னொரு உளறல் சங்க பாடல்கள் பற்றி, சங்கப்பாடல்களில் காலம் கி.மு 2 முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டுவரை தான். இன்னும் தள்ளி போனால் கி.மு 4 வரை வேண்டுமானால் கூறலாம், ஆனால் 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாகரீகத்தை அதனோடு ஒப்பிடுவதே தவறான ஒன்று. உண்மையில் அசோகன் பிராமியை விட தமிழ் பிராமி பழமையான ஒன்று தான் .

  முடிவாக, பார்ப்பனர்களிடம் குறிப்பாக தன்னை இந்திய தேசியவாதியாக, லிபரலாக காட்டிக் கொள்ளும் பார்பான்களிடம் தமிழர்கள் மிக விழிப்பாக இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். பாரதியார் தொடங்கி கூத்தாடி கமலஹாசன் பி.ஏ கிருஷ்ணன் போன்ற வகையறாக்கள் வரை தமிழனை நயமாக பேசி அழித்தொழிக்கும் வேலையை தான் இவர்கள் செய்து கொண்டிருப்பது. இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்திருங்கள், தொல்லியல் ஆய்வாளர் என்கிற பெயரில் உலவும் நாகசாமி என்கிற பார்ப்பன விஷ பூச்சி இதை விட இன்னும் அதிகமாக கீழடியை பற்றி பார்ப்பன கொண்டையை அவிழ்த்து போட்டு கொண்டு விஷத்தை கக்குவதையும் நாம் பார்க்கலாம். தனக்கு பயனில்லாத ஒன்றை பார்ப்பான் விட்டு வைக்க மாட்டான் என்பது தான் வரலாறும் கூட ..கீழடியில் கிடைத்த பெயர்கள் மட்டுமல்ல, விட்டால் தமிழ் கூட தமிழ் பெயர் கிடையாது என்று சொல்ல நாகூசாத நபர்கள் தான் இந்த பார்பான்கள் அனைவரும், இன்று வரை பார்பான்களும், பார்ப்பனர்களின் ஏவல் நாய்களாக இருக்கும் சூத்திர அடிவருடிகளும் தான் இந்த கீழடிக்கு எதிராக தினமும் அறிக்கைகள் கொடுத்த கண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் இருந்து தான் இந்த சூழ்ச்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டும் . நன்றி

  • பார்ப்பனர்களிடம் இருந்து அல்ல.

   கிறிஸ்துவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்களிடம் இருந்து தமிழர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்… கிறிஸ்துவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்களை போல் “Cultural genocide” ல் ஈடுபடுபவர்கள் உலகத்தில் வேறு யாருமே இருக்க முடியாது… மனசாட்சியற்றவர்கள், உலகளவில் பெரும் மனித இன (மற்றும் காலாச்சார) அழிவிற்கு காரணமானவர்கள் இவர்கள்.

  • ரொம்ப சிம்பிள் மேடம்… தமிழகத்தில் உள்ள சிவன், முருகன் அல்லது விநாயகர் கோவில்களில் உள்ள லிங்கங்களை கார்பன் டேட்டிங் செய்து பார்த்தாலே போதும் பல கோவில்கள் கீழடியை விட மிக பழமையானதாக இருக்கும்.

   ஒரு சின்ன ஆதாரம் மஹாபலிபுரம் அருகில், சாளுவன்குப்பம் என்று ஊரில் உள்ள சுப்பிரமணிய கோவில் கீழாடையை போல் மிக மிக பழமையான கோவில், சுனாமி நீர் வடிந்த பிறகு கண்டெடுக்கப்பட்ட கோவில் இது, இதன் கார்பன் டேட்டிங் சங்க காலத்திற்கு இணையானது… ஆனால் இது பற்றி பத்திரிகைகள் அதிகமாக பேசாதற்கு காரணம் இந்த கோவிலின் சுவர்களில் பல்லவ-கிரந்த மற்றும் நகரி (சமஸ்கிரத) எழுத்துக்கள் இருந்தது.

   கீழடி மட்டும் அல்ல, தமிழகத்தில் பல மிக மிக பழமையான இடங்கள் உள்ளது ஆனால் கீழடியை மட்டுமே எல்லோரும் (முக்கியமாக கிறிஸ்துவர்கள், ஹிந்து விரோத இயக்கங்கள்) பேசுவதற்கு காரணம் அங்கே ஹிந்து மத சின்னங்கள் இல்லை என்பது தான்.

   என்னை பொறுத்தவரையில் தமிழகத்தில் கீழடியை விட மிக பழமையான இடங்கள் கோவில்கள் உள்ளது. அவைகளை கிறிஸ்துவ வெறியர்களிடம் இருந்து காப்பாற்றபட வேண்டும்.

  • //பார்ப்பனர்களின் ஏவல் நாய்களாக இருக்கும் சூத்திர அடிவருடிகளும்// அப்ப நீங்க யார் ? வாடிகன் ஏவல் நாயா அல்லது வெளிநாட்டு கிறிஸ்துவ அடிவருடியா ?

 11. என்னை பொறுத்தவரையில் கீழடி தமிழக வரலாற்றின் தொன்மைக்கு ஒரு “Bench mark” கிடையாது, கீழடியை விடவும் தமிழகம் முழுவதுமே பல பழமையான இடங்கள் இருக்கும் (இருக்கலாம்) ஆனால் பழமையை தோண்டி எடுப்பதால் ஏற்பட கூடிய நன்மை என்ன ?

  என் பார்வையில் வாழ்ந்து முடிந்தவர்களை பற்றி பேசுவதை விட வாழ்பவர்கள் இனி வாழ போகிறவர்களை பற்றி பேசுவது தான் சரியாக இருக்கும்.

  தமிழ் தமிழ் என்று பேசும் போலிகளில் எத்தனை பேர் தமிழகத்தில் தமிழ் வழி கல்வி அழிந்து கொண்டு இருப்பது பற்றி கவலைப்பட்டு இருப்பார்கள் ??? தமிழ் என் மூச்சு என்று சொன்ன கருணாநிதி தனது பேரனுக்கு ஹிந்தி தெரியும் அதனால் அவனை டெல்லிக்கு அனுப்புகிறேன் என்று சொன்ன போலிகளை தான் நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம்.

  தமிழ் அழிந்த பிறகு தமிழனின் பெருமையை பேசி என்ன பயன் ???

 12. //ரொம்ப சிம்பிள் மேடம்… தமிழகத்தில் உள்ள சிவன், முருகன் அல்லது விநாயகர் கோவில்களில் உள்ள லிங்கங்களை கார்பன் டேட்டிங் செய்து பார்த்தாலே போதும் பல கோவில்கள் கீழடியை விட மிக பழமையானதாக இருக்கும்…//

  போய் செய்யுங்கள் யாரு உங்களை தடுத்தது, காவி தானே நாட்டை ஆள்கிறது உடனே சென்று செய்ய சொல்லுங்கள்.. சிவனும் முருகனும் அல்ல எங்களுக்கு பிரச்சனை, இங்கு நாங்கள் வரவேற்று கொண்டாடுவதே, மிருகங்களை வதைத்து செய்யபட்ட உங்களின் யாகம் ஹோமம் போன்ற பார்ப்பன புரட்டுகள் குப்பைகள் எங்கும் கிடையாது, கிடைக்காது என்பதை தான்..

  //ஒரு சின்ன ஆதாரம் மஹாபலிபுரம் அருகில், சாளுவன்குப்பம் என்று ஊரில் உள்ள சுப்பிரமணிய கோவில் கீழாடையை போல் மிக மிக பழமையான கோவில், //

  முதலில் பல்லவர்களின் காலமே சங்க காலத்திற்கு பிறகு தான் வருகிறது .. பல்லவர்களின் காலம் கி.பி 5 ஆம் நூற்றாண்டு, கிரந்த எழுத்தின் காலமும் அதே தான், பிறகு எப்படி அது சங்ககாலமாகும். இன்னும் காவிகள் ஊரை ஏமாற்றுவதிலும் வரலாற்று மோசடி செய்வதிலிருந்தும் திருந்தவில்லை என்பதை தான் இது காட்டுகிறது. திருத்தி கொள்ளுங்கள். இல்லையென்றால் மேலும் அசிங்கப்படுவீர்கள்.

  //கீழடியை விடவும் தமிழகம் முழுவதுமே பல பழமையான இடங்கள் இருக்கும் (இருக்கலாம்) ஆனால் பழமையை தோண்டி எடுப்பதால் ஏற்பட கூடிய நன்மை என்ன ?//

  உங்களின் பார்ப்பன பொய் புரட்டுகளை கிழித்து எறியலாம், இதை விட வேறு நன்மை வேண்டுமா . வேத பண்பாடு தான் தமிழரின் பண்பாடு என்று உளறுவது, தமிழ்நாட்டை வேத பூமி என்று கூறி நிந்தனை செய்வது , இந்துவாக இருப்பவன் தான் உண்மையான தமிழனாக இருப்பான் போன்ற ஈன கருத்துக்கள் ஒழியும்..

  இறுதியாக, இறைவா .. எங்கள் தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பண்பாட்டையும் பார்பான்களிடம் இருந்தும், பார்ப்பன ஏவல் நாய்களிடமிருந்தும் நீ தான் காக்க வேண்டும்

  • இறுதியாக, இறைவா .. எங்கள் தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பண்பாட்டையும் கிறிஸ்துவர்களிடம் இருந்தும், வாடிகன் ஏவல் நாய்களிடமிருந்தும் நீ தான் காக்க வேண்டும் — இப்படி சொல்வது தான் சரியாக இருக்கும்…

   ஒரு கேள்வி உங்களால் முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுங்கள். இவ்வுளவு பேசும் நீங்கள் உண்மையான தமிழரா ?

  • //முதலில் பல்லவர்களின் காலமே சங்க காலத்திற்கு பிறகு தான் வருகிறது .. பல்லவர்களின் காலம் கி.பி 5 ஆம் நூற்றாண்டு, கிரந்த எழுத்தின் காலமும் அதே தான்// கார்பன் டேட்டிங் மூலம் ASI செய்த ஆராய்ச்சியில் இந்த கோவில் கிமு காலத்திய கோவில் (கிபி அல்ல), கிழடிக்கு இணையான பழமையான கோவில்.

  • ///மிருகங்களை வதைத்து செய்யபட்ட உங்களின் யாகம் ஹோமம் போன்ற பார்ப்பன புரட்டுகள் குப்பைகள் எங்கும் கிடையாது, கிடைக்காது என்பதை தான்/// அவ்வுளவு தூரம் நீங்கள் மிருகங்கள் மீது அன்பு வைத்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது… பாராட்டுக்கள்.

   உங்களின் வார்த்தைபடி பார்த்தால் நீங்கள் வெறுக்க வேண்டியது கிறிஸ்துவத்தை தான் ஹிந்து மதத்தை அல்ல. ஹிந்து மதத்தை பொறுத்தவரையில் அனைத்து உயிர்களும் ஒன்றே மரம் செடி கொடிகளுக்கும் உயிர் உணர்வு உண்டு அவைகளை வெட்டுவது கூட பாவம் என்று ஹிந்து மதம் சொல்கிறது. இதன் அடிப்படையில் தான் ஏறக்குறைய அனைத்து ஹிந்து கோவில்களிலும் தலவிருட்சம் என்று சொல்லி ஒரு மரம் இருக்கும் அதை சுற்றி வருவது புண்ணியம் என்று சொல்வார்கள். அனைத்து உயிர்களையும் ஒன்றாக பார்க்கும் ஹிந்து மதத்தை பற்றிய பொய்களை தான் கிறிஸ்துவர்கள் திட்டமிட்டு பரப்பி வைத்து இருக்கிறார்கள், அதன் வெளிப்பாடு தான் இது போன்ற வெறுப்பு பேச்சுக்கள்.

   ஆனால் கிறிஸ்துவம் மனிதர்கள் மிருகங்கள் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது தங்களுக்கு ஏற்பு இல்லாத அனைவரையும் அனைத்தையும் அழித்து விட்டு தான் மறுவேளையே பார்க்கும்.

 13. சாளுவன்குப்பத்தில் சங்ககாலத்தில் சுப்பிரமணியன் கோயிலா? சங்ககாலத்தில் ஏது சுப்பிரமணியன்? ஸு (உயர்) + ப்ராமணியன் = சுப்பிரமணியன். பார்ப்பான் ஆட்டம் எல்லாம் பல்லவர் காலத்திற்குப் பிறகே. பார்ப்பான் குடுமியினைக் கேலி பேசும் சங்கப்பாடல்கள் வேண்டுமா!

  • நீங்க கிறிஸ்துவர்கள் (மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற ஹிந்து விரோதிகள்) பரப்பி வைத்து இருக்கும் பொய்களை மட்டுமே நம்பி கொண்டு இருக்கிறீர்கள், உண்மை என்ன என்று தேடி பாருங்கள் சார்.

   கிறிஸ்துவர்கள் மற்றும் ஹிந்து விரோதிகளிடம் எப்படி ஹிந்து மதத்தை பற்றிய உண்மையை நீங்கள் எதிர் பார்க்கலாம் ?

   சாளுவன்குப்பம் மட்டும் அல்ல, சில வருடங்களுக்கு முன்பு திண்டிவனத்திற்கு அருகில் ஒரு மிக பழமையான விநாயகர் கோவிலை கண்டெடுத்து இருக்கிறார்கள் அது கீழடி மற்றும் சாளுவன்குப்பம் கோவிலை விட இன்னும் பழமையானது. தமிழகத்தில் அது பற்றி செய்தி வந்த ஒரே பத்திரிகை “The Hindu” ஆங்கிலம் மட்டுமே.

   கிறிஸ்துவ அமைப்புகள், ஹிந்து விரோத கூட்டங்கள் பரப்பி வைத்து இருக்கும் பொய் என்ன ? விநாயகர் ஒரு வந்தேறி அவருக்கும் தமிழகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற பொய்யை…

   கிறிஸ்துவம் தமிழகத்தில் என்றோ கலாச்சார அழிவை ஆரம்பித்து விட்டது, கனடா பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகளில் செய்தது போல் தமிழகத்திலும் அழிவு செயலை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறது.

    • நிச்சயம் கீழடி மட்டுமே தமிழர்களின் அடையாளம் அல்ல… கீழடியை விட பல பழமையான இடங்கள் தமிழகத்தில் உள்ளது… சென்னை அருகில் இருக்கும் ஆத்திரம்பாக்கம் என்ற ஊரில் கிடைத்த கல் ஆயுதங்கள் கிட்டத்தட்ட 3 லட்சம் வருடங்களுக்கும் மேல் மிக பழமையானது. மனிதர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து தான் மற்ற பகுதிக்கு சென்றார்கள் என்று நம்பப்படும் விஷயத்தை கூட மாற்றி அமைக்க கூடிய கண்டுபிடிப்பு இது.

     ஆனால் ஒருவருமே இது பற்றி எல்லாம் பேசுவதில்லை காரணம் கீழடியில் ஹிந்து மத சம்பந்தப்பட்ட அடையாளங்கள் கிடைக்கவில்லை என்று இவர்களே ஒரு முடிவிற்கு வந்து அதையே தமிழர்களின் அடையாளமாக மாற்ற பார்க்கிறார்கள். ஏற்கனவே பல கிறிஸ்துவ அமைப்புகள் கீழடியில் கிடைத்த ஆதாரம் பைபிளோடு ஒத்து போகிறது தமிழர்கள் ஆபிரகாம் வழி வந்தவர்கள் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

     தமிழகத்தை பொறுத்தவரையில் கிறிஸ்துவ மதவெறியர்களின் தமிழக வரலாறும் கலாச்சாரமும் காப்பாற்றபட வேண்டும்.

    • நிச்சயம் கீழடி மட்டுமே தமிழர்களின் அடையாளம் அல்ல… கீழடியை விட பல பழமையான இடங்கள் தமிழகத்தில் உள்ளது… சென்னை அருகில் இருக்கும் அதிரம்பாக்கம் என்ற ஊரில் கிடைத்த கல் கருவிகள் கிட்டத்தட்ட 3 லட்சம் வருடங்களுக்கும் மேல் மிக பழமையானது. மனிதர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து தான் மற்ற பகுதிக்கு சென்றார்கள் என்று நம்பப்படும் விஷயத்தை கூட மாற்றி அமைக்க கூடிய கண்டுபிடிப்பு இது.

     ஆனால் ஒருவருமே இது பற்றி எல்லாம் பேசுவதில்லை காரணம் ஹிந்து மதம்.

     கீழடியில் ஹிந்து மத சம்பந்தப்பட்ட அடையாளங்கள் கிடைக்கவில்லை என்று இவர்களே ஒரு முடிவிற்கு வந்து அதையே தமிழர்களின் அடையாளமாக மாற்ற பார்க்கிறார்கள். ஏற்கனவே பல கிறிஸ்துவ அமைப்புகள் கீழடியில் கிடைத்த ஆதாரம் பைபிளோடு ஒத்து போகிறது தமிழர்கள் ஆபிரகாம் வழி வந்தவர்கள் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

     தமிழகத்தை பொறுத்தவரையில் கிறிஸ்துவ மதவெறியர்களிடம் இருந்து தமிழக வரலாறும் கலாச்சாரமும் காப்பாற்றபட வேண்டும்.

     • வினவு என் கருத்தை delete செய்யாமல் வெளியிட்டு இருக்க வேண்டும், என் கருத்தில் இருக்கும் நேர்மை வினவை சுடுகிறது என்று நினைக்கிறேன் அதனால் தான் delete செய்து இருக்கிறார்கள்.

      கம்யூனிஸ்ட்களுக்கும் உண்மைக்கும் நேர்மைக்கும் சம்பந்தம் கிடையாது என்பதை உங்களின் செயல் மூலம் நிரூபித்து இருக்கிறீர்கள்.

    • வினவு என் கருத்தை delete செய்யாமல் வெளியிட்டு இருக்க வேண்டும், என் கருத்தில் இருக்கும் நேர்மை வினவை சுடுகிறது என்று நினைக்கிறேன் அதனால் தான் delete செய்து இருக்கிறார்கள்.

     கம்யூனிஸ்ட்களுக்கும் உண்மைக்கும் நேர்மைக்கும் சம்பந்தம் கிடையாது என்பதை உங்களின் செயல் மூலம் நிரூபித்து இருக்கிறீர்கள்.

 14. கீழடி அகழ்வாராய்ச்சியில் சத்திய சாய்பாபாவின் படம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வந்து இருக்கிறது. லிங்க வழிபாடு நடத்திக் கொண்டிருக்கும் படமாம். யாராவது இது குறித்து ஆராய்ச்சி செய்து கட்டுரை வெளியிட்டால் பரவாயில்லை.

  • இது போன்ற பல முட்டாள்தனமான செய்திகள் இணையதளங்களில் உலவி கொண்டு இருக்கின்றன, கீழடியில் ஜீசஸ் உருவ சிலை கிடைத்து இருக்கிறது என்று ஆரம்பித்து அனைத்து பொய்களையும் அனைத்து மதவாத அமைப்புகளும் செய்து கொண்டு இருக்கின்றன.

   என்னை பொறுத்தவரையில் இது எல்லாம் தேவையில்லாத வேலை… தமிழகம் மட்டும் அல்ல இந்தியா முழுவதுமே கீழடி போல் பல இடங்கள் இருக்கும் ஆனால் அதனால் ஏற்பட கூடிய பலன் ஒன்றுமே கிடையாது… வேண்டுமானால் கிறிஸ்துவ மதவாத பிரிவினைவாத அமைப்புகளுக்கு மக்களிடம் பிரிவினையை தூண்ட இது பயன்படலாம்…

 15. //கீழடி அகழ்வாராய்ச்சியில் சத்திய சாய்பாபாவின் படம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக//

  இது என்ன ஆச்சரியம் .. விரைவில் காஞ்சி ஜெயேந்திரன் இமயமலையை அலேக்காக தூக்கி கொண்டு வருவது போல , ஜக்கி வாசுதேவ் காவிரியை பைக்கில் சுமந்து கொண்டு வருவது போலெல்லாம் படம் கண்டெடுக்கப்படும் பாருங்களேன்

 16. கீழடியில் கிடைத்திருப்பவை எல்லாம் இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கீழடியில் கிடைத்த கலாச்சாரப் பொருள்களின் காலகட்டம் இன்றைக்கு 2300 ஆண்டுகளிலிருந்து 1900 ஆண்டுகள் வரை என்று அரசு எழுதிய புத்தகமே சொல்கிறது. எனவே கிடைத்தவற்றைக் கால வரிசைப்படுத்தி அவற்றின் காலங்கள் என்ன என்பதை விளக்குவது தொல்லியல் துறையின் கடமை. அதை அவர்கள் விரைவில் நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

  மேலும் கீழடி நகர நாகரிகத்தை குறிக்கிறது என்பதை நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்ற கேள்வியை பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இன்னும் ஆதாரங்கள் வேண்டும். கீழடியில் இதுவரை கிடைத்திருப்பவை எவையும் வரலாற்றைப் புரட்டிப் போடுபவை அல்ல என்றுதான் சொல்கிறேன். அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படும் பித்தலாட்டங்களுக்கு நான் ஆமாம் சாமி போட முடியாது.

  சரி, அகழ்வாய்வாளர்கள் நகர நாகரிகங்களை எவ்வாறு அடையாளம் காண்கிறார்கள்? கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக வெளியீடான Eurasia at the Dawn of History -Urbanization and Social Change என்ற புத்தகத்தில் பத்தாவது அத்தியாயத்தின் தலைப்பு இது: How Can Arch aeologists Identify Early Cities? Definitions, Types, and Attributes? மைக்கேல் ஸ்மித் எழுதியது. அதில் அவர் நகர நாகரிகத்திற்கு 21 அடையாளங்கள் அல்லது தடையங்கள் இருக்க வேண்டும் என்கிறார்:
  அவை
  1.மக்கள் தொகை
  2. நகரப்பரப்பு
  3. மக்களடர்த்தி
  4. அரண்மணைகள்
  5. அரசர்கள் மற்றும் சமூகத்தில் உச்சநிலையில் உள்ளவர்களை புதைத்த இடங்கள்
  6. பெரிய வழிபாட்டுத்தலங்கள்
  7. பொதுக் கட்டிடங்கள்
  8. கைவினைக் கூடங்கள்
  9. சந்தைகள், கடைகள்
  10. மதில்கள், கோட்டைகள்
  11. நுழைவாயில்கள்
  12. இவற்றை ஒன்று சேர்க்கும் தடையங்கள்- தெருக்கள், குளங்கள், ஓடைகள், முதலியவை
  13. சிறிய வழிபாட்டுத்தலங்கள்
  14. வீடுகள்
  15. மக்கள் கூடுவதற்கான இடங்கள்
  16. நகரின் நடுப்புற அமைப்பு
  17. சமூகத்தில் உயர்ந்த ஆனால் உச்சநிலையில் இல்லாதவர்களைப் புதைத்த இடங்கள்
  18. சமூகத்தின் பல தட்டுக்களுக்கான அடையாளங்கள்
  19. அருகில் இருந்த நகரங்கள், கிராமங்கள்
  20. நகரித்தின் உள்ளே அல்லது அருகில் நடக்கும் விவசாயம்
  21. இறக்குமதிப் பொருள்கள்

  நமக்கு இதே தடையங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நமக்குக் கிடைத்திருக்கும் இலக்கிய, தொல்லியல் சான்றுகளை வைத்துக் கொண்டு, நமது அகழ்வாய்வாளர்களும் இது போன்ற பட்டியலைத் தயாரிக்கலாம்.
  இப்போது கீழடிக்கு வருவோம். அங்கு வண்டி வண்டியாக பானைச் சிதறல்கள் கிடைத்திருக்கின்றன. குறிப்பிடத்தக்க பெரிய அடையாளங்கள் வேறு ஏதும் கிடைக்கவில்லை. நான் ஒரு அனுபவமிக்க, ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்த ஒரு தொல்லியளாளரிடம் கேட்டேன். அவர் சொன்னது இது: They are all fragmentary and not found in one structural phase. No evidence of any fortification, dwelling or contiguous structure. The habitation may be fairly large. But structural and artefactual remains are poor. அதாவது மக்கள் வாழ்ந்திருக்கும் தடையங்கள் இருந்திருக்கலாம், ஆனால் நகரக் குடியிருப்புகள் என்று நிரூபிக்க கிடைத்திருக்கும் சான்றுகள் போதாது என்கிறார்.

  கீழடியில் இதுவரை நடந்திருக்கும் அகழ்வாராய்ச்சிகளில் (மத்திய மாநில அகழ்வாராய்ச்சிகள்)கிடைத்திருக்கும் எல்லாத் தடையங்களை வைத்துக் கொண்டுதான சரியான முடிவிற்கு வர வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு இடத்தில் கிடைத்ததை மட்டும் வைத்துக் கொண்டு மேலும் கீழும் குதிப்பதை அரசியல்வாதிகளும் அவர்களுக்கு கொடி பிடிப்பவர்களும் செய்யலாம். அறிவியல் அணுகுமுறையில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் செய்யத் தயங்குவார்கள்.
  (திரு. கிருஷ்ணன் வெளியிட்ட சந்தேகங்கள் மேலே.)

 17. நகர நாகரீகத்தின் அடையாளங்களை பற்றியெல்லாம் எங்களுக்கு தெரியும். ஏற்கனவே நான் சொன்னது போல , இங்கு செருப்படி வாங்கியது இல்லாத பொய்யான வேதநாகரீகம் தான் . அதற்க்கு செருப்படி கிடைத்தவரை சந்தோஷமே. மற்றபடி இன்னும் 90 %ஆய்வுகள் மீதம் இருக்கின்றன அவை தொடரட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் . அதுவரை இந்த பி.ஏ கிருஷ்ணன் போன்ற பார்ப்பன மற்றும் அவர்களின் சூத்திர எடுபிடி ஏவல் நாய்களின் குரைப்புகள் தொடரட்டும், கேட்கவே ஆனந்தமாக இருக்கின்றது ..

 18. தமிழ்நாட்டில் இருப்பது ஒருவகையான பில்டப் கலாச்சாரம். முன்பே இருந்தது. திராவிட கட்சிகளால் மேலும் பெருகிவிட்டது. ஒரு சிறிய அல்லது சாதாரண விடயத்தை ஊதிப் பெருக்கி பில்டப் பண்ணி அலப்பறை செய்வது தான் அது. கீழடியில் தொழிற்கூடம் இருந்ததற்கான பல தடயங்கள் கிடைத்துள்ளன. சில கட்டடங்களை கண்டுபிடித்துள்ளனர். அதற்குள் அது நகர நாகரிகம் என்றும் கி-மு எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் பில்டப் கொடுக்கத் தொடங்கி விட்டனர். நகர நாகரிகம் என்னவென்று தெரிந்து கொள்ள ஹரப்பாவுக்கும் மொகன்ஜதாரோவுக்கும் ஒரு நடை போய் பார்த்து வருவது நல்லது. தமிழர் வரலாற்றை வெளிக் கொண்டுவர வேண்டும் என்னும் உண்மையான ஆர்வம் இருப்பவர்கள் இப்படி எல்லாம் பில்டப் கொடுத்து கூத்தடிக்க மாட்டார்கள். இந்த ஆய்வு தொடர்ந்து நடப்பதற்கு அகில இந்திய அளவிலான அரசியல் ஆதரவு, சர்வதேச அளவிலான வல்லுநர் பங்கெடுப்பு, நிதி உதவி ஆகியவற்றையே பெறுவதற்கு முயற்சி செய்வார்கள். ஆனால் இங்கோ இது திராவிட நாகரிகமா தமிழர் நாகரிகமா என்றும் மதச்சார்பின்மை கொண்டதா இல்லையா என்றும் அரசியல் சுயநலத்துக்காக அடிதடி நடக்கிறது. இப்போது பார்க்க வருவோரிடம் ஒரு கூட்டம் காசு பிடுங்க ஆரம்பித்து இருப்பதாக கேள்வி. நான்கு வரி அடுக்கு மொழி அலங்கார வசனத்தை கருணாநிதி உளறி அல்லது கிறுக்கி வைத்தால் அதற்கு கவிதை என பில்டப் கொடுத்து பாராட்டு விழா நடத்துவார்கள். ஜெயலலிதா வருகிறார் என்றால் பல காத தூரம் கட்அவுட், கொடி கம்பங்கள், பெரிய கூட்டம், காசு, தண்ணி, பிரியாணி என பெரிய பில்டப். ஒன்றுக்கும் லாயக்கில்லாத சமச்சீர் கல்விக்கு ஆகா ஓகோ என பில்டப். ஒரு குப்பையான சினிமா படத்துக்கு அல்லது நடிகனுக்கு பெரிய பில்டப். குடும்ப தொலைக்காட்சிகளில் பெரிய பில்டப் கொடுத்து ஓட்டி விடுகிறார்கள். பெண்கள் வயதுக்கு வருவது உலகம் பூராவும் சாதாரண விடயம். இங்கே அதற்கு நீராட்டு விழா என்னும் பெயரில் ஸ்பீக்கர் செட், மாமன் மச்சான் அடிதடி என பில்டப். உலகம் பூராவும் ஆடு மாடுகளை அடக்கினார்கள். அடக்குகிறார்கள். இங்கோ அதற்கு ஜல்லிக்கட்டு என்னும் பெயர் கொடுத்து சாதி ஆணவத்தை காட்டி பெரிய பில்டப். இந்த பில்டப் கலாச்சாரம் என்றைக்கு ஒழிகிறதோ அன்றைக்கு தான் தமிழ்நாடு உருப்படும்.

Leave a Reply to Rebecca mary பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க