சென்னை ஐஐடி வளாகத்திற்கு வான் வழியில் வரும் மோடியை எதிர்த்து #gobackmodi இணைய வெளியில் முன்னணிக்கு வந்துவிட்டது. டிவிட்டரில் முன்னணியில் இருக்கும் #gobackmodi குறித்த செய்திகளை தொகுத்திருக்கிறோம்.

தேர்தலுக்கு முன்பு ஆந்திரப் பிரதேசத்திற்கு போலியான வாக்குறுதி. இதனால் ஆந்திராவில் பாஜகவிற்கு கிடைத்த இடங்கள் 0. தற்போது தமிழ்நாட்டிற்கு போலியான வாக்குறுதிகளுடன் மோடி வருகிறார். அங்கேயும் அவர் நிராகரிக்கப்படுவார். திராவிட மக்கள் மிகவும் உணர்வுள்ளவர்கள்

எங்களது கல்வித் துறையை அழித்து, வேலைகளை திருடி, வரிப்பணத்தை பறித்து, செல்வத்தை மூழ்கடித்து, சுற்றுச்சூழலை அழித்து, இந்தியைத் திணித்து, எமது நிறுவனங்களை பறித்து வரும் மோடி இந்தி ஏகாதிபத்தியத்தின் தந்தை. நீங்கள் தமிழ்நாட்டில் வரவேற்கப்படமாட்டீர்கள்.

அழிப்பதையும், பிரிப்பதையும் நேசிக்கும் மோடியே திரும்பிப்போ!

மோடி அரசாங்கத்தில் அனைத்துமே அபாயகரமாக இருக்கிறது.

கட்டணத்தை உயர்த்தாதே! கல்வித்துறையை முன்னேற்றுவதற்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை. எங்களை தற்குறிகளாக்காதே, மோடியே திரும்பிப் போ!

பாஜக தோற்கிறது. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை மாறிவிடுமே என்று அஞ்சுகிறேன். மோடியே திரும்பிப் போ! இது தமிழ்நாடு

தூத்துக்குடி படுகொலையை தமிழகம் ஒருபோதும் மறக்காது, மோடியே திரும்பிப் போ!

இந்தியாவிற்கு பயனற்ற மோடியே திரும்பிப் போ!

பாசிசம் எப்போதும் தோற்கடிக்கப்படவேண்டும். இதை முறியடிக்க போராடிய முன்னோர்களின் வழி நடப்போம். இந்நேரம் வேறுக்கத்தக்க, மனிதாபிமானமற்ற, வன்முறை சார்ந்த இந்துத்துவ சித்தாந்தத்தை முறியடிக்க சரியாண தருணமிது. அனைத்து தமிழர்களும் ஒன்றுபட்டு சொல்வோம், மோடியே திரும்பிப் போ!

பாசிசத்திற்கு எதிரான போரில் நமது குர்தீஸ் சகோதரர்களும், சகோதரிகளும் ஐஎஸ்ஐஎஸ்-ஐ முறியடித்தது போல நாமும் ஆர்.எஸ்.எஸ்-ன் வெறுக்கத்தக்க சித்தாந்தத்தை முறியடிப்போம்!

சென்னை விமானநிலையத்திலிருந்து 8 கீ.மீட்டர் தூரம் இருக்கும் சென்னை ஐஐடி வளாகத்திற்கு செல்ல மோடி இந்த முறையும் பறக்க வேண்டியிருக்கிறது. இதுதான் இந்துத்துவா பாசிஸ்டுகளுக்கு எதிராக தமிழகம் நடத்தும் கெத்து! மோடியே திரும்பிப் போ என்று அடிக்கடி சொல்வது போரடித்தாலும், மீண்டும் சொல்வோம் மோடியே திரும்பிப் போ!

வக்கிரம் பிடித்தவர்களின் கட்சி இது

மோடி – பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு தமிழர்கள் சொல்லும் சேதி என்னவென்றால் சில விசயங்களை மாற்றவே முடியாது! மோடியே திரும்பிப் போ!

ஒரு பிரதமர்னு கூட பார்க்காம விரட்டியா விடுரீங்க… இருங்கடா டெல்லி போனதும் 2000 ரூபாய் நோட்டு கலர மாத்துறேன்!

தூத்துக்குடி படுகொலைக்கு பதில் சொல்! மோடியே திரும்பிப்போ!

செருப்புகளும் சங்கிகளும் வெளியே விடப்படவேண்டும். இது சங்கிகளுக்கு எதிரான பிரதேசம். இதுதாண்டா தமிழ்நாடு!

தமிழகமும், இந்தியாவும் ஒருபோதும் மறக்காது! தூத்துக்குடி படுகொலையை!

இந்திய கல்வித்துறையை அழிக்கும் மோடியே திரும்பிப் போ!

அறிவார்ந்த சமூகத்திற்கு பாசிஸ்டுகள் எப்போதெல்லாம் செல்கிறார்களோ அங்கே அவர்களுக்கு ஜனநாயகம் என்ன என்பது உணர்த்தப்படும்!

சங்கிகளுக்கு ட்ரோல் படை இருக்கிறது. ஆனால் தமிழர்களோ கோபேக் மோடியை உலகளவில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்துவிட்டார்கள். கலக்குங்க மச்சான்!

மன்னியுங்கள் பிரதமரே, உங்களது பாசிச சிந்தாந்தத்தை தமிழகம் நன்கு அறியும். உங்கள் ஆட்டம் இங்கே எடுபடாது!

அதனுடன் காஷ்மீர் மக்களின் ஒடுக்குமுறையையும் நினைவில் கொள்வோம்!

கடந்த இரு மாதங்களில் பெட்ரோல் விலை ஐந்து ரூபாய் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகை! இந்தியா விரைவில் உன்னை உதைத்து துரத்தும்!

யூஜிசி-யையும், ஏஐசிடிஇ-யையும் ஒழித்து விட்டு உயர் கல்வித்துறையில் திணிக்கப்படும் பயனற்ற ஒழுங்குமுறை ஆணையங்களை வரவேற்கமுடியாது! நமது ஐஐடி நடுநிலையாகவும் அறிவியல் பூர்வமாகவும் இருக்கட்டும்.

புதிய கல்விக் கொள்கையை நிறுத்து!

திங்கட்கிழமை காலையில் இருந்து இதுதான் ட்ரெண்டிங்

இது யதார்த்தம். அது விளம்பரம்

பாஜகவை நக்கும் ஊடகங்களை விட நாய்கள் நக்குவது எவ்வளவோ மேல்!

அட்டகாசம்.
பிரதமரை குறிவைத்து தாக்க ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் திட்டம்? உளவுத்துறை தகவல்

எதுக்குயா குறிலாம் வைக்குறீங்க, கேமராவ நீட்டுங்க, அவரே குறுக்கால வந்து நின்னுடுவாரு!

வினவு செய்திப் பிரிவு
தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க