ந்திய மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து வாங்கியுள்ள ரஃபேல் விமானத்தில் ஓம் என எழுதுவது, தேங்காய் உடைப்பது, எலுமிச்சை பழத்தை டயருக்கு அடியில் வைப்பது இந்தியாவை இந்து தேசம் என கூறும் மறைமுக அறிவிப்பு.

இதனை டிவிட்டரில் பலரும் கண்டித்துள்ளனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக…

***

எதுக்குடா ரஃபேலு… ரெண்டு எலுமிச்சை, நாலு மஞ்சா கயிறு போதாதா !
மந்திரிச்சி விட்டா எதிரி நாடுகளும் பஞ்சா பறந்திடுமே !

நாட்டைப் பாதுகாக்க ரஃபேல், ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை !

ஊடகங்களின் வாயைக் கட்டிய இந்துக் குறியீடு !

ராஜ்நாத்தைப் போல, முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஏ.கே. ஆண்டனி சிலுவையை வரைந்திருந்தால், இந்ந்தியாவும் ஊடகங்களும் கொலைவெறியோடு கதறியிருக்கும் !

கருத்துப்படம் : வேலன்

ஷாலினி :

இது நமது பாரம்பரியம், மதச் சடங்கு என்றெல்லாம் கூறுபவர்களுக்கு, இந்தியா என்பது முசுலீம்கள், கிறித்தவர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் பல்வேறு மக்கள் இந்த நாட்டைஉயர்த்த தங்களது வரியை செலுத்துகிறார்கள். மத்திய அரசாங்கம் ஏன் இந்துக்களின் சடங்குகளை மட்டும் பின்பற்றுகிறது?

சமீர் ஹூடா :

பல்லாயிரக்கணக்கான கோடி செலவழித்து நாட்டைப் பாதுகாக்க ஜெட் விமானம் வாங்கவும். அதனைப் பாதுகாக்க எலுமிச்சையை வாங்கவும். அதற்கு பதிலாக நாட்டைப் பாதுகாக்க ஏன் முதலிலேயே எலுமிச்சையை வாங்கி அனைத்து பணத்தையும் சேமிக்கக் கூடாது ?

ரஹ்மது :

டஸ்ஸால்ட் மற்றும் ஏவியேசன் குழுவினரே, நாங்கள் இப்போதுதான் ரஃபேல் பூஜையைத் துவக்கியுள்ளோம். நாங்கள் கேடு விளைவிக்கும் பார்வைகளின் எதிர்ப்பை நசுக்க, எலுமிச்சையின் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். இந்த வகையான பாதுகாப்பு அமைப்பை ஏன் ரஃபேல் விமானத்தில் நீங்கள் பொறுத்தவில்லை ?

இந்திய மின்னணுப் படை :

ஒருவழியாக ரஃபேல் தயாராகிவிட்டது !

சத்தூட்டி :

மொத்த ரஃபேல் ஒப்பந்தமும் அவரது சமூகத்திற்கு மட்டுமானது என்பதை உறுதி செய்யும் வகையில் வரிப்பணத்தை எடுத்து இந்துத்துவாவை பரப்ப முயற்சிக்கிறார் இந்த அமைதி விரும்பி !

#பாஜகதோற்றது :

இதற்காகத்தான் இந்தியா வேண்டிக் கிடந்தது.

சுஷில் யதி :

இந்த உலகிற்கு நமது பங்களிப்பு! #RafalePujaPolitics

இஷ்ரத் வளி :

மாட்டுக்கறி உண்பவர்களால் செய்துமுடிக்கப்பட்ட விமானத்தை இப்படித்தான் நீங்கள் சுத்திகரிக்க முடியும்
#RafalePujaPolitics

முகமது சமி :

என்ன இது ? தனது மதத்தின் குறியீட்டை ஏன் இவர் வரைகிறார் ? முசுலீம்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு இந்தியனின் வரிப்பணத்தில் இருந்துதான் ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒருவேளை, முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே அந்தோணி, இவரைப் போல சிலுவைக் குறியீட்டை வரைந்திருந்தால், மொத்த இந்தியாவும், அதன் ஊடகங்களும் பெரும் கொலை நடந்ததாகக் கதறியிருக்குமே ? #RafalePujaPolitics

மிதுன் கே மது :

நமது அரசியல் சாசன சட்டப் பிரிவு 51A (h) “ அறிவியல் வேட்கை, மனிதம் மற்றும் அறிந்து கொள்வதற்கும், சீர்திருத்துவதற்குமான உத்வேகம் ஆகியவற்றை வளர்ப்பதுவும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்” என்று குறிப்பிடுகிறது

சந்தீப் வர்ரி :

இந்தியா தனது முதல் ரஃபேல் விமானத்தைப் பெற்றிருக்கிறது. ஒருவேளை, பிரான்ஸ் “விமானத்தின் மீது தேங்காய் உடைத்து விட்டதால் வாரண்டி கிடையாது” என்று கூறிவிட்டது என்றால் என்ன நிலைமை என்பதை கற்பனைச் செய்து பாருங்கள் #RafalePujaPolitics #RafaleDeal

டி.ஆர்.பி.ராஜா :

ரஃபேல் விமானத்தின் சக்கரங்கள் மிகவும் சிறியதாக இருக்கின்றனவா ? அல்லது அந்த எலுமிச்சம்பழங்கள் மிகவும் பெரியதாக இருக்கின்றனவா ? ரஃபேல் பூஜை தொடர்பான அரசியலை மறந்துவிடுங்கள். நான் பெரிய எலுமிச்சைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொள்கிறேன்.

நயீம் :

இந்தியா அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வகை நிறுத்துவான்.
#RafalePujaPolitics

மணீஷ் குப்தா :

#RafalePujaPolitics Is it necessary
இது அவசியமா ?

ஸ்ரீகாந்த் :

அவை சாதாரண எலுமிச்சைகள் அல்ல. அவை மேகமூட்டமான சூழலிலும் எதிரியின் விமானங்களைக் கண்டுபிடிக்கவல்ல ரேடார்கள்.
#RafalePujaPolitics #RajnathSingh #RafaleDeal

பீர் சடாஷா:

என்னத்த சொல்ல ? #RafalePujaPolitics

சுரேஷ் திக்வால்:

“120 மில்லியன் டாலர் பாதுகாப்பு” எதிர் “5 ரூபாய் எலுமிச்சை”. இந்தியா இப்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளது.
#RafalePujaPolitics #RafaleOurPride

வொய்ட் ப்ளேஸ்:

மொத்த உலகும் இந்தியாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது! ஒன்னுத்துக்கும் ஆகாத பசங்க ! என்ன செய்கிறார்கள்? இவர்கள் என்ன பைத்தியமா ?

ஷோஹில் ரெய்னா :

மன்னிக்கவும், 56” இன்ச்சைக் காணவில்லை.
#RafalePujaPolitics

ரேட்டோபஸ் :

நம்ம பாதுகாப்பு அமைச்சரையே புரிந்துகொள்ளாத முட்டாள்களாக இருக்கிறார்கள். சக்கரத்திற்கு அடியில் வைக்கப்படும் எலுமிச்சை, நிம்பஸ் எனும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளும். ரேடார்களில் இருந்து மறைந்து கொள்ள உதவும். இது பழைய பாதுகாப்புத் தொழில்நுட்பம். எதிரி விமானம் நம்மைத் துறத்தி வந்தால் “முந்திச் செல்லாதே, பொறுத்துவா” என வரைந்து வைப்போம்.

க்ருஷிகா :

உங்கள் தலைவர் அவரது நண்பருக்கு உதவுவதற்காக அதிக விலை கொடுத்து வாங்கியதால் மட்டுமே இது பெருமைக்குரியதாகி விடுவதில்லை. அது ரஃபேல் ஊழல் என்றாகிவிடுகிறது. பிரான்சில் அமைச்சர் மூலமாக அமானுஷ்ய பூஜைகள் நடத்துவது ஊழலை இல்லாமல் செய்துவிடாது.

க்ருஷிகா :

ரஃபேல் எங்கள் பெருமை என டிவிட் செய்யும் பக்தாள்களுக்கு,
அருமை முட்டாள்களே, இவை ஃபிரெஞ்சு பொறியியலாளர்களால் கட்டப்பட்டது. பிரெஞ்சு அரசுக்கும் திப்பு சுல்தானுக்கும் 18-ம் நூற்றாண்டில் நல்ல உறவு இருந்தது. அவர் பிரெஞ்சுடன் கூட்டணி வைத்திருந்தார். இங்கு ஏதாவது பெருமைக்குரியது என்று சொல்லப்படவேண்டுமெனில், தேஜாஸ் மட்டுமே பெருமைக்குரியதாக இருக்க முடியும். ஏனெனில் அதுமட்டுமே இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

சைது முகமது கான் :

ரஃபேல் டெலிவரிக்கு முன் / டெலிவரிக்குப் பின்

ஸ்நேகா அரோரா :

இது இந்தியப் பாரம்பரியம் #RafalePujaPolitics

ஆர்.கே தகர்வால் :

#RafalePujaPolitics
வெறும் 20 நாள் இடைவெளி மட்டுமே இருந்தது. இந்த இடைவெளிக்கு இந்தியா செலவழித்த தொகை ரூ. 58,000 கோடி. பிரான்ஸ் லட்சுமியை அள்ளிக் கொண்டது. “துர்கா பூஜை” எதிர் “லட்சுமி பூஜை”

சுனில் :

நாட்டைப் பாதுகாக்க இந்தியா ரஃபேல் விமானத்தை வாங்கியது. பின்னர் ரஃபேலைப் பாதுகாக்க எலுமிச்சையை வாங்கியது. பின்னர் எலுமிச்சையைப் பாதுகாக்க பூச்சிக் கொல்லியை வாங்கியது.
#RafalePujaPolitics

சயீது அகமது :

பிரெஞ்சு பொறியாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் தொடர்ச்சியாக மாட்டுக்கறியும், பன்றிக்கறியுமே உண்டு வருகின்றனர். அதன் காரணமாகவும், மாட்டுக்கறி தின்னும் பாகிஸ்தானின் கெட்ட பார்வைக்கு எதிராகவும், புனிதப்படுத்துதலும் சுத்திகரிப்பும் இத்தகைய சடங்குகளால் செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது.#RafalePujaPolitics

ராஜேந்திர குமார் :

எலுமிச்சையும் மிளகாயும் கொண்டுவா ! ரஃபேலைப் பாதுகாப்போம் ! #RafalePujaPolitics


தொகுப்பு :  நந்தன்