நீட் – தேசிய மயமாக்கப்படும் வியாபம் ஊழல் ! கருத்தரங்கம்

நாள் : 23-10-2019 புதன்கிழமை
நேரம் : மாலை 5-00 மணி
இடம் : ஆறுமுக நாவலர் அரங்கம், மாலைக்கட்டித்தெரு, சிதம்பரம்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

நீட் ஆள்மாறாட்ட பிரச்சனை கடந்த ஒரு மாதமாக தமிழகத்தை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. சென்னையை சார்ந்த உதித் சூர்யா என்ற ஒரு மாணவர் தனக்கு பதிலாக வேறு ஒரு மாணவரை நீட் தேர்வு எழுத வைத்து அதில் வெற்றி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ளார். இவர் மட்டுமல்ல அவருடைய நண்பர்கள் 3 பேரும் இதே போல் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்று சேர்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட 2 பேர் உள்ளிட்டு ஏறக்குறைய 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு மாணவன், அவனுடைய பெற்றோர் அவனுக்கு மாறாக தேர்வு எழுதிய அந்த ஆள்மாறாட்ட மாணவர்கள், தரகர்கள் என்ற வகையில் தான் இப்பொழுது சிபிசிஐடி விசாரணையும், கைதும் நடந்து வருகிறது. இவர்கள் மட்டுமே இந்த முறைகேட்டை செய்துவிடமுடியுமா?

படிக்க :
♦ வியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம் !
♦ ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க வழங்கும் வியாபம் – ஒரு மெகா ஊழலின் கதை

நீட் தேர்வை நடத்துகிற அதிகாரிகள் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர், மருத்துவக்கல்லூரி முதல்வர், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் என கிணறு வெட்ட பூதம் தோன்றிய கதையைப் போல் இந்த கிரிமினல் நெட்வொர்க் இந்தியா முழுவதும் விரிவடைந்திருக்கிறது. இது குறித்த ஒரு விரிவான விசாரணை நடத்தினால் இது மத்திய பிரதேசத்தில் பிஜேபி அரசால் நடத்தப்பட்ட வியாபம் ஊழலையே மிஞ்சிவிடும்.

ஆள்மாறாட்டம் மட்டுமல்ல, நீட் தேர்வே ஒரு மோசடி. அது ஒரு பிஃராடு. 24 அரசு மருத்துவக்கல்லூரிகள், 2500-க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரி இடங்கள் என மிகப்பெரிய மருத்துவக்கல்வி கட்டமைப்பைக் கொண்டது தமிழகம். இதனை பிற மாநில மாணவர்கள் ஆக்கிரமிக்கும் வகையில் மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள நீட்தேர்வு மிகப்பெரிய மோசடி இல்லையா?

இந்த முறைகேடுகளை தவிர்ப்பதற்கு பயோமெட்ரிக் முறையைக் கொண்டுவரப்போவதாக மத்திய அரசும், மத்திய தேர்வு முகமை அதிகாரிகளும் சொல்கிறார்கள். ஆனால், இந்த முறைகேட்டைத் தடுக்க முடியமா ? கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் கொலை, கொள்ளை, குற்றங்களை தடுத்துவிடலாம் என்பது எவ்வளவு கேலிக்கூத்தானதோ அதைப் போன்றதுதான் இவர்கள் சொல்லும் தீர்வும்.

கல்வியில் தனியார்மயம் தீவிரமாகி வரும் இன்றைய சூழலில் முறைகேடுகளை தடுப்பதாக சொல்வதே அயோக்கியத்தனம், லாப வெறிகொண்டு அலையும் தனியார் பள்ளி, கல்லூரிகள், நீட் தேர்வு பயிற்சி மையங்கள், மத்திய – மாநில அரசு அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து நடத்தியது நீட் தேர்வு முறைகேடு. இதை சிபிசிஜடி இல்லை, சிபிஐ விசாரணை நடத்தினாலும் இதை தடுக்க முடியாது. ஒட்டுமொத்த மருத்துவக்கல்வியும் கிரிமினல் மாஃபியாக்கள் பிடியில் சிக்கி சீரழிக்கப்பட்டு வருகிறது. நமது மருத்துவக்கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வையே முழுமையாக ஒழித்துக் கட்ட வேண்டும். அதுதான் ஒரே தீர்வு. நிரந்தர தீர்வு!

நீட் தேர்வுக்காக அனிதா தொடங்கி பல மாணவர்களை பலி கொடுத்திருக்கிறோம். நீட் தமிழகத்தின் மருத்துவ இடங்களை பறித்துக்கொண்டது. இன்னமும் இந்த அரசிடம் நீட்டில் இருந்து விலக்கு பெற்றுக்கொடு என முறையிடுவதும், கெஞ்சுவதும் முட்டாள்தனமானது. ஒட்டுமொத்த தமிழக மாணவர்களும் பெற்றோர்களும் கொதித்தெழுவோம். நீட் தேர்வை ஒழித்துக்கட்டுவோம்!.

நிகழ்ச்சி நிரல்

தலைமை :
தோழர் மணியரசன், மாவட்ட செயலாளர்,புமாஇமு, கடலூர்.

உரை:
தோழர் மதுரைவீரன், விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்.
தோழர் பால்ராஜ், கடலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்.

சிறப்புரை :
தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,புமாஇமு, தமிழ்நாடு.
டாக்டர் ஜி.ஆர்.ரவிந்திரநாத், மாநில பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு.
வழக்கறிஞர் ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்,மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

நன்றியுரை :
தோழர் மோகன், அமைப்பாளர் புமாஇமு, புதுச்சேரி


தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி.
தொடர்பு : 97888 08110, 91593 51158, 81244 12013

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க