2600 ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழியின் தொன்மை,
தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாடு !
கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் ! பாதுகாப்போம் ! பரப்புவோம் !

அரங்கக் கூட்டம்
03.11.2019 – ஞாயிறு, காலை 10.00 மணி,
ராகவேந்திரா திரை அரங்கு அருகில்,
சாந்தி நகர், ஓசூர்.

நிகழ்ச்சி நிரல் :

தலைமை :

தோழர் பரசுராமன்,
மாவட்ட செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்.

உரையாற்றுவோர் :

தோழர் சொ.சாந்தலிங்கம்,
தொல்லியல் ஆய்வாளர் (ஓய்வு), மதுரை.

திரு சத்யா,
சட்டமன்ற உறுப்பினர்,
தி.மு.க., ஓசூர்.

தோழர் ராமச்சந்திரன்,
மாவட்ட துணை செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் ரகுவரன்,
சமூக விஞ்ஞான ஆய்வரங்கம்.

நன்றியுரை :

தோழர் கோ. வெங்கடேசன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர்.

அனைவரும் வாரீர்…!

ன்பார்ந்த தமிழ் சமூகமே !

“தொட்டணைத்தூறும் மணற்கேணி” என்பது போல் கீழடியை தோண்டத் தோண்ட தமிழரின் பெருமை உலகெங்கும் பரவி வருகிறது. மத்திய பாஜக அரசின் பல தடைகளை உடைத்துக் கொண்டு “தமிழன்டா” என கீழடி நெஞ்சை நிமிர்த்தி வீறுகொண்டு நடைபோடுகிறது. உலகின் தொன்மைக் குடியிலேயே தமிழ்தான் முதன்மையானது என பறைசாற்றியுள்ளது.

19.09.2019 அன்று தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட கீழடியின் நான்காம் கட்ட ஆய்வு முடிவுகள், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களை தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ள வைக்கிறது. இதுவரை சங்க இலக்கியங்களையே நமது வரலாற்றுக்கும் தொன்மைக்கும் சான்றுகளாக பகர்ந்து வந்தோம். வேறு எந்தத் தொல்லியல், கல்வெட்டு சான்றுகளும் போதுமான அளவிற்கு கண்டறியப்படாமல் இருந்த நிலையில் கீழடியில் கிடைத்த தொல்பொருள் சான்றுகள் சங்ககாலத்தில் தமிழன் நகரநாகரிகத்தோடு வாழ்ந்தான் என்பதை உறுதி செய்கிறது. மேலும் சங்க காலம் என்பது 2,600 ஆண்டுகள் தொன்மையானது என்று நிர்ணயம் செய்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.

இங்குக் கிடைத்துள்ள பானை ஓடுகளில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்யும் போது, அசோகரின் பிராமி எழுத்துக்களை விட தமிழ் 300 ஆண்டுகள் தொன்மையானது என்று சான்று படுத்தப்பட்டுள்ளது. எழுத்துக்கள் சிலரால் மட்டுமல்ல பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த அகழாய்வில் 1,001 ஓடுகள் இத்தகைய எழுத்துவரி வடிவங்களுடன் கிடைத்துள்ளன. இது சிந்து சமவெளி நாகரிக எழுத்திற்கும் தமிழிற்கும் இடையே ஒரு தொடர்பையும் காட்டுவதாக உள்ளது.

படிக்க:
காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !
ராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு !

வேளாண்மை, கைத்தொழில், கட்டிடக்கலை, வணிகம், தொழில்நுட்பம், கலையுணர்வு, அழகுணர்வு, விளையாட்டு என்று தமிழர் நாகரிகத்தின் தொன்மை பற்றி சங்ககால இலக்கியங்களின் சொல்லப்பட்டவை எல்லாம் கற்பனை அல்ல, உண்மை என மெய்ப்பிக்கும் வண்ணம் ஆய்வுகள் நிரூபணமாகி வருகிறது.

வேத காலத்தில் குறிப்பிடப்படும் புராணக் குப்பைகள், அதன் அடிப்படையிலான கடவுள், மதம், சாதி இவை இருந்ததற்கான எந்த அறிகுறியும் கீழடியில் கிடைக்கவில்லை. தமிழ் மக்கள் சமத்துவமாக வாழ்ந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

ஆரிய மரபுதான் இந்திய மரபு, ஆரியர்கள்தான் இந்தியாவின் பூர்வ குடிகள் என்று கதைவிட்டு வரும் பார்ப்பனக் கும்பலின் தலைமீது பேரிடியாகக் கீழடி ஆய்வுகள் வந்து இறங்கியுள்ளது. இந்த அகழாய்வானது, தமிழர், இந்தியர் வரலாறு மட்டுமல்ல, தென்னாசியாவின் வரலாறு முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைக்கு தன் பலம் தெரியாது என்பது போல் தமிழர்களாகிய நாம் நம் முன்னோர்களின் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு நம் வரலாறை இருட்டடிப்பு செய்துவந்தனர், தமிழ் மக்களின் எதிரிகள். ஆக, வரலாறு தெரியாதவனால் வரலாற்றை படைக்க முடியாது. எனவே நாம் நம் கீழடி வரலாற்றை பெருமிதத்தோடு கற்போம். அணிதிரண்டு வாரீர் …!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்,
தொடர்புக்கு : 97880 11784.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க