கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் !

அரங்கக் கூட்டம்
நவம்பர் – 02, மாலை 5 மணி
சென்னை பத்திரிகையாளர் மன்றம்,
சேப்பாக்கம், சென்னை.

மிழக தொல்லியல் துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்ட கீழடி நான்காம் கட்ட அகழாய்வின் முடிவுகள் இந்திய அளவில் அதிர்வை உருவாக்கியுள்ளது. இம்முடிவுகள் தமிழக மற்றும் இந்திய வரலாற்றை புதிய கோணத்தில் பார்க்க வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளன.  நான்காம் கட்ட அகழாய்வு முடிவுகளின் படி கி.மு. 6-ம் நூற்றாண்டுகளிலேயே மக்களிடம் எழுத்தறிவு பரவலாக இருந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் பிராமி எழுத்துக்கள் அசோக பிராமி எழுத்துக்களுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தையது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கீழடியில்  கிடைத்த பானை ஓடுகளில் உள்ள கிறுக்கல்கள் (Grafiti)  மறைந்து போன சிந்து சமவெளி குறியீடுகளோடு ஒத்துப் போகின்றன. இவை சிந்து சமவெளி எழுத்து வடிவத்திலிருந்து தோன்றிய பிராமி எழுத்து வடிவங்களுக்கு இணைப்பு சங்கிலியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆரிய – வேத நாகரிகமே இந்தியா நாகரிகங்களின் துவக்கம் என இந்திய வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கும் மோடி அரசுக்கோ கீழடி அகழாய்வின் முடிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மையாகவே இருக்கிறது. இராமாயண அருங்காட்சியம் அமைப்பதற்கு 225 கோடி, இல்லாத சரஸ்வதி நதியை கண்டறிய 50 கோடி, சமஸ்கிருதம் – இந்தி வளர்ச்சிக்காக பல நூறு கோடிகள் ஒதுக்கீடு   என புராணக் கதைகளை ஆய்வு செய்ய பல நடவடிக்கைகளை RSS / BJP அரசுகள் மேற்கொண்டுள்ள நிலையில் சமீபத்திய கீழடி அகழாய்வு மற்றும் ராகிகடி மரபணு ஆய்வின் முடிவுகள் வேத காலத்திற்கு முன்பே இங்கே  நாகரிகங்கள் இருந்தன என்பதை அறிவியல் பூர்வமாக நிருபிக்கின்றன.

படிக்க:
அடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி !
நவீன வேதியியலின் கதை | பாகம் 01

இவ்வுண்மைகள் இந்துராஷ்ட்ரா கருத்தியலுக்கு எதிராக அமைவதால் கீழடி அகழ்வாய்வை தடுக்க பல்வேறு வழிகளில் மோடி அரசு முயற்சித்து வருகிறது. மேலும் மத்திய தொல்லியல் துறையோ (ASI) கீழடி அகழாய்வு அறிக்கை வெளிவந்த சில மாதங்களுக்குள்ளேயே மகாபாரதக் காலம் கி.மு 2000 என அனுமானங்களின் அடிப்படையில் அறிக்கை வெளியிடுகிறது. இச்சூழலில்   கீழடி அகழாய்வின்  முடிகள் குறித்தும் அதன்  முக்கியத்துவம் குறித்தும்  அறிந்து கொள்வதும் அதனை  பரப்புவதும் மோடி அரசின்  ஒற்றை கலாச்சார  திணிப்புக்கு  எதிரான  முக்கிய  செயல்பாடாகும்.

நிகழ்ச்சி நிரல் :

தலைமை :

பேராசிரியர் கி. கதிரவன்,
சென்னைப் பல்கலைக் கழகம்,
CCCE, சென்னை.

கருத்துரை :

தமிழக தொல்லியல் அகழாய்வுகளும் கீழடியின் சிறப்பும்

பேராசிரியர் சு. ராசவேலு,
வருகைப் பேராசிரியர்,
வரலாற்றுத் துறை,
அழகப்பா பல்கலைக்கழகம்.

இந்தியாவில் உள்ள செம்மொழிகளும் தொல்லியல் ஆய்வுகளும்

பேராசிரியர் வீ. அரசு,
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்,
சென்னைப் பல்கலைக்கழகம்,
ஒருங்கிணைப்பாளர், CCCE, சென்னை.

நன்றியுரை :

முனைவர் க.ரமேஷ்,
CCCE, சென்னை.

அனைவரும் வாரீர்…!

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, சென்னை.
(Coordination Committee for Common Education)
தொடர்புக்கு : 9444 380211 | 7299 361319

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க