2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியின் தொன்மை தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாடு! கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள்! பாதுகாப்போம்! பரப்புவோம்! என்ற முழக்கத்தின் கீழ் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் கடந்த அக்-25 அன்று தருமபுரியில் உள்ள பெரியார் மன்றத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் தோழர் பாலன், தனது தலைமை உரையில், ”கீழடி அகழாய்வு பற்றிய உண்மைகளை தமிழ் மொழியின் தொன்மை குறித்து இன்றைய மாணவர்கள் இளைஞர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.  கீழடியில் தற்பொழுது தோண்டப்படுவது ஆரியத்தை உயர்த்திப்பிடிக்கும் பேசும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பலுக்கான சவக்குழி” என்றார்.

இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய தமிழ் அறிஞர் தோழர் கிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் மற்றும் பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆகியோர் கீழடி அகழாய்வில் கண்டறிந்த உண்மைகளிலிருந்து கிடைக்கப்பெற்ற தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் அதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்துமான தகவல்களையும்; கீழடி அகழாய்வை முன்னெடுப்பதை பல்வேறு வகைகளில் தடுப்பதோடு, இந்தி – சமஸ்கிருதத்தை திணித்துவரும் மோடி – அமித்ஷா கும்பலின் சதித்தனங்களையும் அம்பலப்படுத்திப் பேசினர்.

படிக்க:
பேராசிரியர் கிலானியின் மனித உரிமைப் பணிகளை முன்னெடுப்போம்! பாசிச சூழலை திடமாக எதிர்கொள்வோம் !
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்

இக்கூட்டத்தில் பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டு சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். நன்றியுரையோடு கூட்டம் நிறைவேறியது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்.
63845 69228.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க