தமிழக அரசு மருத்துவர்கள் அறப்போராட்டம் ! எதற்கு இந்த போராட்டம் ?

கோரிக்கை 1

மிழ்நாட்டில் வேலை செய்யும் மருத்துவர்கள் வாங்கும் ஊதியத்திற்கும் மத்திய அரசாங்க ஊழியர் வாங்கும் ஊதியத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்து வருகிறது. கீழ்கண்ட படத்தை பார்க்கவும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஒரு மத்திய அரசு மருத்துவர் 14 வருட அனுபவம் காணும் போது பெறும் ஊதியத்தை, தமிழகத்தில் பணி செய்யும் மருத்துவர் தனது 20 வருட அனுபவத்தில் தான் பெற முடியும் என்பதை காண முடியும்.

எதற்கு இந்த ஊதிய வித்தியாசம் ?

மத்திய அரசு மருத்துவர் செய்யும் எந்த வேலைக்கும் குறைவானதல்ல தமிழக மருத்துவர்கள் செய்யும் வேலை.

டெங்கு, மலேரியா போன்ற தொற்றும் நோய் தடுப்பு; நீரிழிவு, ரத்த கொதிப்பு போன்ற தொற்றா நோய் தடுப்பு முதல் நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தங்கி சிகிச்சை எடுக்கும் அரசு மருத்துவமனைகள்.

  • வருடம் தோறும் லட்சக்கணக்கில் பிரசவங்கள்.
  • அறுவை சிகிச்சைகள்.
  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்.
  • அவசர கால சிகிச்சைகள்.

என்று நாள்தோறும் நிகழ்த்தும் தமிழக மருத்துவர்கள் கேட்பது, எங்களுக்கும் அதே அளவு சமமான ஊதிய உயர்வைத்தான்.

இது ஒரு நியாயமான கோரிக்கை ஆகும். தமிழக அரசாங்கம் செவிமடுத்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

படிக்க:
அரசு பொது மருத்துவமனை ஊழியர்களும் மனிதர்கள்தான் | ஃபரூக் அப்துல்லா
♦ மகாராட்டிரம் : 483 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் !

***

அரசு மருத்துவர்களின் அறப்போராட்டம் கோரிக்கை இரண்டு

நோயாளிகளின் எண்ணிக்கைப்படி மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அதாவது தமிழகம் என்பது பரந்து விரிந்த நிலப்பகுதியாகும்.

ஒரு மாவட்டம் போல் இன்னொரு மாவட்டம் இல்லை. ஒரு ஊர் போல் இன்னொரு ஊர் இல்லை. அதுபோல, ஒரு அரசு மருத்துவமனை போல மற்றொன்று இருக்காது.
ஒரு மருத்துவமனையில் அதிகபட்சம் புறநோயாளிகளாக தினமும் 300 பேர் வருவார்கள். மற்றொரு அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு தினமும் 3000 பேர் வருவார்கள்.

ஆனால் இந்த இரு மருத்துவமனைகளிலும் ஒரே மாதிரி எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிப்பது முறையன்று.

ஆகவே நோயாளிகளின் வருகை மற்றும் உள்நோயாளிகளாக எத்தனை பேர் தங்கி இருக்கிறார்கள் ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் எத்தனை செய்யப்படுகின்றன?, அவசர சிகிச்சைகள் எவ்வளவு ?, அந்த மருத்துவமனையின் பிடிமானப்பகுதி (catchment area) எவ்வளவு ?, பிரசவங்கள் எத்தனை நடக்கின்றன?
சிசேரியன்கள் எத்தனை?, பரிந்துரைக்கப்படும் மருத்துவமனையா?, பரிந்துரைக்கும் மருத்துவமனையா? என்று ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு மருத்துவ நியமணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை.

இது மருத்துவர்கள் மீது விழும் அதிகமான பாரத்தை குறைக்கும். ஒரு நோயாளிக்கு செலவழிக்கப்படும் நேரம் அதிகமாகும். இதனால் மருத்துவத்தில் தரம் கூடும்.

இதனால் நேரடியாக பயன்பெறப்போவது அரசு மருத்துவமனைகளில் பயன் பெறும் நோயாளிகள் தான். இந்த நியாயமான கோரிக்கையை அரசு ஏற்று உடனே ஆவண செய்ய வேண்டும்.

***

அரசு மருத்துவர்கள் அறப்போராட்டம் கோரிக்கை மூன்று

றிக்கப்பட்ட உரிமையான முதுநிலைப்படிப்புக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை அரசு மருத்துவர்களுக்கு மீண்டும் வழங்குக.

2016 -ஆம் ஆண்டு வரை அதாவது நீட்டின் வருகைக்கு முன்பு வரை தமிழகத்தில் அரசு சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலைப்படிப்பில் சேர 50 சதவிகித இட ஒதுக்கீடு இருந்தது.

இதன் வாயிலாக ஒரு ஊரில் இருந்து படித்து மருத்துவரான ஒருவர், அந்த ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிவார். பிறகு 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் பயின்று மீண்டும் அதே ஊரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வேலைக்கு வருவார்.

இதனால் அந்த ஊர் மக்கள் பயன் பெற்றனர். தன் ஊரைப்பற்றி அதன் பூலோகவியல் பொருளாதார மற்றும் சமூகவியலை அறிந்த ஒருவர் மருத்துவராக வருவதற்கும், அந்த ஊரைப்பற்றி அறியாத ஒருவர் மருத்துவராக வருவதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு.

படிக்க:
அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து – நேர்காணல்
♦ ஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ !

இந்த 50 சதவிகித இட ஒதுக்கீடைப் பெற கட்டாயம் இரண்டு வருடங்கள் அரசுப்பணியில் இருந்திருக்க வேண்டும் என்று விதி இருந்தது. இதனால் கிராமங்கள் தோறும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் மருத்துவர்கள் முன் எப்போதும் இல்லாத அளவு நிரம்பினர்.

ஆள் அரவமற்ற, ஈ.. காக்கா.. கூட போகாத சாலை வசதிகள் குன்றிய ஊர்களில் எல்லாம் மருத்துவர்கள் பணி புரிகின்றனர்.

மேலும் அந்த இட ஒதுக்கீட்டில் படித்த மருத்துவர்களிடம் இருந்து, முதுமையால் ஏற்படும் பணி மூப்பு வரை அரசுப்பணியில் இருக்க வேண்டும் என்று பத்திர வாக்குமூலம் வாங்கப்படும்.

இதன் மூலம் மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை உறுதி செய்யப்பட்டதன் விளைவாக, தமிழகம் சுகாதாரத்தில் தன்னிறைவு பெற்று ஒரு முன்னோடி எடுத்துக்காட்டு மாநிலமாக இருந்து வந்தது.

ஆனால் நீட் எனும் அரக்கன் வந்த பின், அந்த இட ஒதுக்கீட்டை ஒழித்தபடியால்
இப்போது அரசு மருத்துவர்களுக்கு கிடைத்த முக்கிய அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுவிட்டது.

இது நாளடைவில் அரசு மருத்துவமனை நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.

ஆகவே அரசு எங்களின் மூன்றாவது முக்கிய கோரிக்கையான அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை எங்களுக்கு தர வேண்டும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

2 மறுமொழிகள்

  1. Respected sir,

    Read your above article with three demands.

    1. First demand is unacceptable. If your ultimate aim is higher salary then why are you joining in state government services. Directly join the central government service.

    2. Your second demand is reasonable.

    3. Your third demand is also unacceptable.

    • ஐய்யா ஆல்பர்ட்டு… மருத்துவர்கள் போராட்டத்தின் கோரிக்கையில் நீங்கள் நிராகரித்தவற்றுக்கு காரணம் என்ன என விளக்குங்களேன்… பெரிய லார்டு மாதிரி யூஆர் ரிஜக்டட்… நீ செலக்ட்டட்… என எப்படி சொல்கிறீர்கள்…

Leave a Reply to கண்ணப்பன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க