பெரியாரியர்கள் மற்றும் அம்பேத்கரியர்கள் குறித்து அவதூறாகப் பேசிய யோகா சாமியார் பாபா ராம்தேவ்-ஐக் கண்டித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் #arrestRamdev என்ற ஹேஷ்டேக் ஞாயிற்றுக்கிழமை டிரெண்டானது.

கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 11),  ரிபப்ளிக் டிவியின் நேர்காணல் ஒன்றில், சாதி எதிர்ப்பு தலைவர்களான அம்பேத்கர் மற்றும் பெரியாரை பின்பற்றுகிறவர்கள் அறிவுசார் தீவிரவாதத்தை முன்னெடுப்பதாகவும் ‘அறிவுசார் தீவிரவாதம்’ என்ற வார்த்தையை தானே உருவாக்கியதாகவும் கூறினார்.

முன்னதாக, அயோத்தி தீர்ப்பை அடுத்து ரிபப்ளிக் டிவி அர்னாப்பு, ராம்தேவும் குதூகலித்ததைக் (கேமராக்கள் முன் ராம்தேவ், அர்னாப்பை தூக்கி குதூகலித்தார்) கேலி செய்து, சமூக ஊடகங்களில் மீம்கள் உலாவந்தன. இந்த மீம்களை ராம்தேவின் பேட்டிக்கு முன் தொகுப்பாக வெளியிட்டது ரிபப்ளிக் டிவி.

இந்நிலையில், சமூகத்தின் மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்கள் இழிபடுத்திய ராம்தேவை கைது செய்ய வலியுறுத்தியும் அவருடைய பொருட்களை புறக்கணிக்கக்கோரியும் ட்விட்டரில் பலர் கருத்திட்டனர்.

வழக்கமாக பெரியார் – அம்பேத்கரை காவிகள் இழிபடுத்தும்போதெல்லாம் தென்னக மக்களே அதிகமாக கொதிப்படைவார்கள். ஆனால், இம்முறை ராம்தேவுக்கு பதிலடி வடநாட்டவர்களிடமிருந்தே அதிகம் வந்தது.

தலித் பிரச்சினைகள் குறித்து ட்விட்டரில் எழுதிவரும் பத்திரிகையாளர் திலீப் மண்டல்,  ராம்தேவின் தடித்தனம் குறித்து நிறைய ட்விட்டகளைப் பதிவு செய்தார்.

அரசியல் செயல்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, நேர்காணலில் வீடியோ பகிர்வை வெளியிட்டு ‘பெரியார் அம்பேத்கர் இழிபடுத்தி, எங்களை அறிவுசார் தீவிரவாதிகள் என அழைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.

அதுபோல, பலர் ட்விட்டரில் தங்களுடைய எதிர்ப்புக்குரலை பதிவு செய்தனர். “ராம்தேவ் நம்முடைய மரியாதைக்குரிய பெரியார் அம்பேத்கர் பிர்சாவை அவமதித்துவிட்டார். ராம்தேவ்-ஐயும் அவருடைய பொருட்களையும் நாம் புறக்கணிக்க வேண்டும். அவர் மீது வழக்கு தொடர வேண்டும். நாங்கள் ராம்தேவ் கைது செய்யப்பட வேண்டும் என விரும்புகிறோம்” என தெரிவிக்கிறார் சுனில் குமார் மீனா.

கப்பார்: ராம்தேவ் யாதவ் என்ற பெயரிலேயே ஒரு களங்கம் உள்ளது.  அவர் கூட்டமைப்பின் அடிமை. அவர் பகுஜனில் பிறந்த ஒரு துரோகி. அனைத்து பகுஜன்களும் நம்முடைய பெரிய மனிதர்களை அவதூறை செய்ய யாருக்கும் துணிவில்லை என்பதை இவர்களுக்கு நிரூபிக்க வேண்டும். அவர்களுடைய காதுகளை அடையுங்கள்…

தலித் வாய்ஸ் : ராம்தேவின் கூற்றுப்படி, அறிவுசார் தீவிரவாதம் என்பது…

  1. நீங்கள் அம்பேத்கரியர் எனில்
  2. நீங்கள் பெரியாரியர் எனில்
  3. சமூக நீதி நம்புகிறவர் எனில்
  4. பெண்ணியத்தை நம்புகிறவர் எனில்
  5. ஜனநாயகத்தை நம்புகிறவர் எனில்
  6. தாராளவாதத்தை நம்புகிறவர் எனில் நீங்கள் அறிவுசார் தீவிரவாதி.

நீங்கள் நம்பினால், பதஞ்சலி பொருட்களை புறக்கணியுங்கள்.

தீபா பஷீர் : பாபா ஒரு கருப்பு ஆடு, தன்னுடைய நண்பனான அரசாங்கத்தைப் பயன்படுத்தி இந்தியாவை முட்டாளாக்கப் பார்க்கிறார். ஊழல்வாதி பாபா ராம்தேவ்!

கவுதம் பாரதி : இப்போது ராம்தேவ் ஒத்துழைப்பின் அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டார். அவர் எப்போதும் தான் சார்ந்திருக்கிற பகுஜன் சமூகத்திற்கு எதிராகவே பேசுகிறார். இப்போது அவர் எங்கள் தலைவர்களை அவமதித்துள்ளார். அவர் மீது வழக்கு தொடரப்படவேண்டும்.

#ArrestRamdev, #BoycottPatanjaliProducts போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டான நிலையில், காவி ட்ரோல்படை பதஞ்சலி ராம்தேவுக்கு ஆதரவாக களமாடத்தொடங்கியது.

ஷியாம்: பாஜக ஐடி பிரிவு, எஸ்.ஸி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் சிறுபான்மையினரின் ட்விட்டர் ட்ரெண்டுக்கு பதிலடி தர ஆரம்பித்துள்ளது.

இந்த விவகாரத்தை வைத்து பலர் ராம்தேவை கேலி செய்தும் பதிவிட்டனர்.

‘எதற்காக  #ArrestRamdev என்பதை மக்கள் ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கிறார்? எப்படியென்றாலும், கருப்பு பணம், உள்நாட்டு பொருட்கள் என்ற பெயரில் பொய்யான ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்து மோசடி செய்யும், முட்டாளாக்கும் அவரை கைது செய்யுங்கள் என்கிறார் ரிஸ்வான்.

இப்படி மக்களை கொதிப்படைய வைத்த ராம்தேவ் அந்த நேர்காணலில், பெரியாரை பின்பற்றுகிறவர்கள் எதிர்மறைத்தன்மையை அதிகரித்துவிட்டதாக கூறினார்.

“பெரியாரை ஆதரிப்பவர்கள் கடவுளை பின்பற்றுகிறவர்களை முட்டாள்கள் என்கிறார்கள். அவரை வணங்குகிறவர்களை குற்றவாளி ஆக்குகின்றனர். கடவுளை தீயசக்தி என்பதுபோன்ற முட்டாள்தனமான கருத்துக்களை சொல்கிறார்கள்” என பிதற்றிய ராம்தேவ்.

’நமக்கு லெனின், மார்க்ஸ், மாவோ தேவையில்லை. இந்திய கலாச்சாரத்துக்கு எதிரான பார்வை அவர்களுடையது. இவர்களை பின்பற்றுகிறவர்கள் மோசமானவர்கள்’ எனவும் கூறினார்.

படிக்க :
மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !
வாரனாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !

மேலும், இவர்களைப் போன்ற தலைவர்களைப் பின்பற்றுகிறவர்கள் நாட்டை பிரிப்பதாகவும் இவர்களை குறிக்க அறிவுசார் தீவிரவாதிகள் என்ற சொல்லை உருவாக்கியதாகவும் கூறினார்.

‘அர்பன் நக்ஸல்கள்’ என தங்களை எதிர்ப்போரை அழைத்து வந்த காவிகும்பல், இப்போது ‘அறிவுசார் தீவிரவாதிகள்’ என்பதையும் அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது. நகர்ப்புற நக்ஸல்கள் என்றாலும் அறிவுசாரி தீவிரவாதிகள் என்றாலும் காவிகளுக்கு எதிராக மக்களே திரண்டு வந்து பதிலடி கொடுக்கிறார்கள். இதற்கு காவி ஆட்சியாளர்களின் பின் ஓடி ஓளிந்துகொண்டிருக்கும் ராம்தேவே சாட்சி.


தமிழாக்கம் : அனிதா
நன்றி : டெலிகிராப் இந்தியா

2 மறுமொழிகள்

  1. நடைமுறையில் தேசபிரிவினையை தூண்டுபவர்கள், வன்முறை மற்றும் வெறுப்புணர்வை தூண்டி விடுபவர்கள் இந்த லெனின் மாவோ இயக்கத்தை சேர்ந்தவர்களாக தானே இருக்கிறார்கள்… இதை தானே புரட்சி என்று சொல்லி கொண்டு சாதாரண மக்களின் வாழக்கையை நாசம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    • மணிகண்டன் சாரே… எங்க தேசபிரிவினையை தூண்டினார்கள் என சொல்லவும்? மொட்டை கமெண்ட் போட வேண்டாம். நீங்கள் பேசுவது எல்லாம் “தங்கத் தட்டில்” மலம் என சொன்னார் என்ற கதையாக உள்ளது. தெளிவாக சொல்லவும் எங்கே தேச பிரிவினையை தூண்டினார்கள்…? ஆதாரம் தரவும்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க