Tuesday, June 25, 2024
முகப்புசெய்திஉலகம்துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !

துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !

உலகம் முழுவதும் வலதுசாரி கும்பல் கல்வியில் அறிவியலை புறக்கணித்து அடிப்படைவாதத்தை முன் நிறுத்துகிறது. இந்தியாவில் அது இந்துத்துவமாகவும் துருக்கியில் ஜிகாத்-ஆகவும் உள்ளது.

-

துருக்கியில் இந்த கல்வியாண்டு முதல் ஏற்கனவே இருந்த பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை எடுத்துவிட்டு அந்த இடத்தில் சர்ச்சைக்குரிய ஜிகாதி பற்றிய பாடத்திட்டத்தை துருக்கி பள்ளிகள் கொண்டு வருகின்றன. ஆனால் இதை ஒரு புதிய கல்வி கொள்கை என்று இசுலாமிய அடிப்படைவாத துருக்கி அரசாங்கம் கூறுகிறது.

புதிய பாடப்புத்தகங்களை “பெண்களுக்கு எதிரானது” மற்றும் “அறிவியல் எதிர்ப்பு” கொண்டது என்று கண்டித்துள்ளதுடன் மதச்சார்பற்ற கல்விக்கு இது பெரும் அடியாக இருப்பதாக விமர்சகர்கள் புகார் கூறுகின்றனர்.

“ஜிகாதி பற்றிய மதிப்பீடுகளைத் திணிப்பதன் மூலம் எங்களது பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை ஊட்டி மத்திய கிழக்கை ஒரு இரத்தக் களறியாக மாற்ற அவர்கள் முயற்சிக்கின்றனர்” என்று மதச்சார்பற்ற எதிர்க்கட்சியான சி.எச்.பி (CHP) கட்சியின் புலண்ட் டெஸ்கான் (Bulent Tezcan) கூறினார்.

ஆனால் 2019 தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரத்தை உருவாக்கி துருக்கியை பிளவுப்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக துருக்கி அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

“நாங்கள் [ஜிகாதி] மதிப்புகள் என்று சொல்லும்போது, அவர்கள் வேறு ஒன்றைப் புரிந்துகொள்கிறார்கள். எங்கள் பழமைவாத-ஜனநாயக நிலைப்பாட்டைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் எல்லோரும் எங்களைப் போல இருப்பதை நாங்கள் விரும்பவில்லை” என்கிறார் கல்வி அமைச்சர் இஸ்மெட் இல்மாஸ்.

இமாம்-ஹதீப் (Imam-Hatip ) உயர்நிலைப் பள்ளிகள் என்று பரவலாக அறியப்படும் துருக்கியின் மத தொழிற்கல்வி பள்ளிகளில் ஜிகாத் கோட்பாட்டினை விளக்கும் பாடப்புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. பின்னர் அவை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள சிறுவர்களுக்கு ஒரு ஆண்டு காலப்பகுதியில் விருப்ப பாடங்களாக வழங்கப்படும்.

படிக்க :
♦ பாத்திமா படுகொலை : வளாகச் சூழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் !
♦ லெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்

பெண்களுக்கு எதிரான போக்கு மற்றும் ஜிகாதியை பற்றிய அதனுடைய விளக்கம் ஆகிய இரண்டிற்காகவும் “முகமது நபியின் வாழ்க்கை” என்ற தலைப்பிலான ஒரு நூல் குறிப்பாக விமர்ச்சிக்கப்படுகிறது.

பெண்கள் ஆன்களுக்கு கீழ்படிய வேண்டும் என்பது பாடத்திட்டத்திலேயே புகுத்தப்படுகிறது.

ஜிகாதி என்ற சொல் “புனிதப் போர்” என்று “துருக்கிய மொழி நிறுவனத்தின்” அகராதியால் வரையறுக்கப்படுகிறது. ஆனால் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என்று அழைக்கப்படும் ஜிகாதி குழுக்கள் ஜிகாதி என்ற கருத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டுள்ளன என்று கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர்.

“தேசத்தை நேசித்தல்” என்ற பின்னனியில் இஸ்லாத்தின் ஒரு பகுதியாக இந்த கோட்பாட்டை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் கூறுகிறார்.

“ஜிகாதி என்பது எங்களது மதத்தில் ஒரு பகுதி. ஒவ்வொரு கருத்தையும் தகுதியுடன் கற்பிப்பதும், தவறாக உணரப்பட்ட கருத்துக்களை சரிசெய்வதும் எங்கள் கடமை” என்று அவர் மேலும் கூறுகிறார்.

சர்ச்சைக்குரிய அந்த பாடநூல் பெண்கள் ஆண்களுக்கு கீழ்ப்படிதலை “வழிபாட்டின்” ஒரு வடிவமாக வரையறுக்கிறது. ஆனால் அந்த நூல் இஸ்லாத்தைப் பற்றியது, மேலும் குரானின் வசனங்களை மேற்கோள் காட்டுவதால் இந்த பாடம் புரிந்து கொள்ளக்கூடியது தான் என்று அரசாங்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.

படிக்க :
♦ துருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘
♦ துருக்கியில் 4700 ஆண்டு பழமையான லிங்கத்தைக் கண்டெடுத்த ஜக்கி !

“இதை நான் சொல்லவில்லை அல்லா சொல்கிறார். நான் அவரை திருத்த வேண்டுமா என்ன?” என்று கல்வி வாரியத்தின் தலைவராக இருக்கும் அல்பாஸ்லான் டர்மஸ் கூறினார்.

ஆனால் வார இறுதிக்கு முன்பாகவே இதற்கு எதிராக சமூக ஊடகங்களில் #NoToSexistCurriculum, #SayNoToNonSciologicalCurriculum மற்றும் #DefendSecularEducation போன்ற ஹேஷ்டேக்குகளுடன் இரண்டு பெரிய ஆர்ப்பாட்டங்கள் துருக்கி நடந்துள்ளன.

“21 ஆம் நூற்றாண்டில் அறிவியலைத் தடைசெய்யும், காலாவதியான பாடத்திட்டத்தை மறுக்க வேண்டும்” என்று போராட்டக்காரர்களுக்கு ஒரு தொழிற்சங்கத் தலைவர் அழைப்பு விடுத்தார்.

துருக்கி அரசாங்கம் புகுத்தும் கல்விக் கொள்கையை எதிர்த்து நடைபெற்ற போராட்டம்.

துருக்கிய குடியரசின் மதச்சார்பற்ற அடித்தளங்களுக்கு பதிலாக இஸ்லாமிய மற்றும் பழமைவாத மதிப்பீடுகளை அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனின் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி (ஏ.கே.பி) கொண்டு வருவதாக எதிர்தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

“தெய்வ பக்தியுள்ள தலைமுறையை” வளர்ப்பது குறித்தான அதிபரின் சொந்த கருத்துக்களும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளன.

பாடத்திட்டத்திலிருந்து பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு முற்றிலுமாக விலக்கப்பட்டுள்ளதாக கூறும் விமர்சகர்களை “முற்றிலும் அறியாதவர்கள்” என்றும் கல்வி அமைச்சகம் குற்றஞ்சுமத்துகிறது.

பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை மேற்கோள் காட்டாமலேயே மரபணு திடீர்மாற்றம், மாறுபாடு மற்றும் தகவமைப்பு போன்ற பாடங்கள் உயிரியல் பாடநூல்களில் விளக்கப்பட்டுள்ளன. இந்த கோட்பாடு “மாணவர்களின் தகுதிக்கு மீறியதாக” உள்ளதால் இதை பல்கலைக்கழகங்களில் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறுகிறார்.

இது மாணவர்களை மேலும் குழப்பமடைய மட்டுமே செய்யும் என்று துருக்கியின் “கல்வி சீர்திருத்த முன்முயற்சி” (Education Reform Initiative) திட்டத்தை சேர்ந்த ஐசெல் மட்ரா கூறுகிறார். மேலும் குழந்தைகள் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை புரிந்து கொள்ள முடியாது ஆனால் ஜிகாதியை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறுகிறார்.

ஜிகாதி விவாதம் தொடர்பாக ஆசிரியர் சங்கங்களும் பிளவுபட்டுள்ளன. அரசாங்கத்தின் “கருத்தியல் மற்றும் திட்டமிட்ட” ஒரு நடவடிக்கையாக இதை துருக்கியின் எகிடிம் சென் (Egitim Sen) தொழிற்சங்கம் பார்க்கும் அதே நேரத்தில் மிகவும் பழமைவாத போட்டி தொழிற்சங்கம் ஒன்று இஸ்லாமிய எதிர்ப்பு வாதங்களைப் பயன்படுத்துவதாக விமர்சகர்களைக் குற்றம் சாட்டுகிறது.

ஜிகாதியின் முதன்மை பொருள் ‘புனிதப் போர்’ என்று துருக்கிய மொழி நிறுவனம் கூறுகையில் “இரண்டாவது மற்றும் மூன்றாவது விளக்கங்களை கூறுவதில் என்ன பயன்?” என்று எகிடிம் சென் தலைவர் ஃபெரே அய்டோகன் கூறுகிறார்.


சுகுமார்
நன்றி : பி.பி.சி. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க