வடக்கு சிரியாவில் அமைதி வசந்தம் (operation peace spring) என்ற தனது நடவடிக்கையை துருக்கியப் படைகள் தொடங்கியதையடுத்து, சிரியாவின் ராஸ் அல்-ஐன் நகரத்தில், துருக்கிய இராணுவ ஆளில்லா வானூர்திகள் அந்தப் பகுதியை நிழற்படம் எடுக்காமல் தடுக்க, அங்கு டயர்கள் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனில் புதனன்று, “ஆபரேஷன் பீஸ் ஸ்பிரிங்” என்ற பெயரில் வடகிழக்கு சிரியாவின் மீது தாக்குதல் தொடங்கப்போவதாக அறிவித்தார்.  ISIL குழுவும், துருக்கியால் சட்டவிரோதமாகக் கருதப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் தொடர்புடையதாக, சிரியா – சார்பு மக்கள் பாதுகாப்பு பிரிவுகளுமே இதன் இலக்கு என்று கூறினார்.

YPG தலைமையில் இருக்கும் சிரிய ஜனநாயக சக்திகளின் கருத்துப்படி, எஸ்.டி.எஃப். இராணுவ நிலைகள் மற்றும் டால் அபேட், ராஸ் அல்-ஐன், காம்ஷ்லி மற்றும் ஐசா-வில் உள்ள கிராமங்கள் மீது துருக்கிய ஜெட் விமானங்கள் குண்டுவீசத் தொடங்கிய பின்னர் நேர்ந்த பொதுமக்கள் இறப்புக்கள் பற்றிய ஆரம்ப நிலை அறிக்கைகள் வந்துள்ளன.

படிக்க:
சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும் : சீக்கிய அமைப்புகள்

சிரியாவின் வடகிழக்கு பகுதியை ஒட்டியுள்ள எல்லைகளை 32 கிமீ மீட்டர் வரை நீட்டிப்பதன் மூலம்,  ஒரு பாதுகாப்பான வளையத்தை உருவாக்க துருக்கி அதிபர் விரும்புகிறார்.

சிரிய – குர்திஸ் போராளிகளை இலக்கு வைத்து, 2016-ல் யூப்ரடிஸ் ஷீல்டு நடவடிக்கையையும் பின்பு 2018-ல் தொடங்கப்பட்ட ஆலிவ் கிளை நடவடிக்கையையும் தொடர்ந்து, கடந்த  மூன்று ஆண்டுகளில் துருக்கி நடத்தும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

சிரியாவிற்குள் துருக்கி நடவடிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில், தென்கிழக்கு துருக்கியின், சான்லியூர்ஃபா மாகாணத்திலுள்ள, அக்காக்கலே நகரத்தின் ஊடாக துருக்கியப் படைகளின் வாகனங்கள் வருவதால் உள்ளூர்வாசிகள் ஆரவாரம் செய்கிறார்கள்.

துருக்கிய துருப்புக்கள் வடக்கு சிரியாவில் தனது பீஸ் ஸ்பிரிங் நடவடிக்கையை தொடர்ந்ததையடுத்து, துருக்கிய இராணுவம் பீரங்கி குண்டுகளை வீசுகின்றது.

வடகிழக்கு சிரியாவில் துருக்கிய துருப்புக்களால் நீண்டகாலமாக அச்சுறுத்தப்பட்டு வந்த தனது இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து ராஸ் அல்-ஐன் நகரத்திலிருந்து புகை எழுகிறது.

குர்திஷ் தலைமையிலான படைகளை எல்லைப் பகுதியிலிருந்து அகற்றி, சிரிய அகதிகளை அங்கு மீள் குடியமர்த்த ஒரு ‘பாதுகாப்பான மண்டலத்தை’ உருவாக்க துருக்கி இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

டமாஸ்கஸின் எல்லை தாண்டிய நடவடிக்கை குறித்து தெரிவிக்க இஸ்தான்புல்லில் உள்ள சிரியாவின் தூதரகத்திற்கு ஒரு இராஜதந்திர குறிப்பை துருக்கி அரசாங்கம் அனுப்பியது.

துருக்கிய இராணுவ வாகனங்கள் சன்லியுர்பா மாகாணத்திலுள்ள, அக்காக்கலே அருகே சிரிய எல்லையை நோக்கி செல்கின்றன.

இராணுவ நடவடிக்கையை தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு, ஒரு துருக்கிய இராணுவ வாகனம் சிரியாவின் எல்லையை நோக்கி செல்கிறது.

துருக்கியின் திட்டமிட்ட நடவடிக்கைக்கு முன்னதாக வடக்கு சிரியாவில் உள்ள துருக்கியின் கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் நட்பு நாடுகள், தங்கள் படைகளை மன்பீஜ்ஜுக்கு அனுப்ப முன் வரிசையில் தயாராகின்றன.


தமிழாக்கம் :  மூர்த்தி
நன்றி : aljazeera

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க