மீபத்தில் யோகி சத்குரு ஜக்கி வாசுதேவ் துருக்கி போயிருக்கிறார். அந்த நாட்டில் இருக்கும் கொன்யாவில்தான் ரூமியின் கல்லறை இருக்கிறது. அந்த இடத்திற்கு சென்றவருக்கு ஒரு அதிசயம் நடந்திருக்கிறது.

அவர் கண்ணில் ஒரு டைனோசர் முட்டை போன்ற ஒரு பெரிய கல் தென்பட்டிருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளாக அந்த கல்லறை இருந்தும் அது ஏனோ யார் கண்ணிலும் படவில்லை. இறையருளை ப்ரோக்கர்கள் இல்லாமல் நேரடியாக பெற்ற சத்குரு அவர்களுக்குதான் அது காட்சியளித்திருக்கிறது பாருங்கள். கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.

அந்த முட்டைக்கல்லின் மேல் தன் கழுத்தில் இருந்து சக்திவாய்ந்த ருத்திராட்சத்தை வைத்து சோதித்து பார்க்கிறார். ருத்திராட்சம் அப்படியே அசையாமல் நிற்கிறது… ஒரு இடத்தில் தவிக்கிறது. ஒரே அதிர்ச்சி… அது ஒரு பழமையான சிவலிங்கம்… கன்னத்துல போட்டுக்கோங்க…

செம்பருத்தி சீரியலில் குடும்பத்திற்கே வரிசையாக வருவது போல சத்குருவுக்கும் அதிர்ச்சி வந்து விடுகிறது. அந்த லிங்கம் மட்டுமில்லை, அந்த கல்லறை தோட்டம் முழுக்க ஆங்காங்கே பழமையான கோவிலின் சிதிலங்களை பார்த்து மீண்டும் ராஜாராணி சீரியலில் வருவதுபோல அதிர்ந்து போகிறார் ஜக்கி. ஆம் நண்பர்களே, அது ஒரு பழங்கால சிவன் கோயில். கன்னத்துல போட்டுக்கங்க…

ஆனால் இஸ்லாமியர்கள் தந்திரமாக அந்த இடத்தில் ரூமிக்கு கல்லறை கட்டிவிட்டார்கள். அந்த லிங்கம் 4700 ஆண்டு பழமையானது, சக்தி வாய்ந்தது என்பதும் சத்குருவுக்கு தெரியவருகிறது.

ஞானதிருஷ்டியாலேயே அதை கண்டுபிடித்துவிட்டாலும், விஞ்ஞானிகளை வைத்து ஆராய்ச்சி பண்ணி நிரூபித்துவிட்டார். எந்த விஞ்ஞானிகள் என்று அவரும் சொல்லவில்லை, நாமும் கேட்கவில்லை. சத்குரு மேலயே சந்தேகமா… கன்னத்தில் ப்ளீஸ்…

படிக்க :
♦ கேள்வி பதில் : ஸ்டெர்லைட் – தேர்தல் – பறையிசை !
♦ சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!

இந்த கண்டுபிடிப்பால் துருக்கி அரசே ஆடிப்போயிருக்கிறது. யாருய்யா இவரு என துருக்கி பிரதமர் உளவுத்துறையை கூப்பிட்டு கேட்டாராம்… சிவ சிவா… கன்னத்தில் போட்டுக்கலாம். ஆயிரம் அணுகுண்டுகளின் பவர் கொண்ட சத்குருவின் பவர்களை கேள்விப்பட்டு ஆடிப்போய்விட்டாராம்…

ஜக்கி அவர்களின் கண்டுபிடிப்பு இத்தோடு முடியவில்லை… ரூமி கல்லறையில் மட்டுமில்லை, ஐரோப்பா மற்றும் அரேபியா முழுவதுமே இப்படிப்பட்ட லட்சக்கணக்கான கோயில்கள் இருந்ததையும் தன் ஞானதிருஷ்டியால் கண்டுபிடித்துவிட்டார். அதெல்லாம் இப்போது சிதைந்துவிட்டன… என மனது நொந்து தன் சமீபத்திய அருள்தரும் வீடியோவில் உரை ஆற்றியிருக்கிறார்.

அவருடைய மனவாட்டத்தைப் போக்க உடனடியாக அத்வானி… சாரி.. சாரி… அவருக்கு வயதாகி திருந்திவிட்டார்… எனவே அமித்ஷா அவர்கள் தலைமை தாங்கி தன் பாஜக பக்தர்களை அழைத்துக்கொண்டு போய் துருக்கி நாட்டின் மீது படையெடுத்து ரூமியின் கல்லறை இருந்த இடத்தில் சிவன் கோயில் கட்டவேண்டும் என்பதே அகில உலக சத்குரு பக்தர்களின் கோரிக்கை.

இந்த செய்தி அமித்ஷாவை சென்றடையும்வரை அதிகம் பகிரவும்.

(இந்த அதிசய கண்டுபிடிப்பு பற்றி வீடியோ)

நன்றி : முகநூலில் – Athisha

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க