இந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்

இந்தியப் பொருளாதாரம், காஷ்மீர் மற்றும் தொழிலாளர் வாழ்வு ஆகியவற்றின் இன்றைய நிலையை பாடலில் விவரிக்கின்றனர் ம.க.இ.க மையக் கலைக்குழுவினர். பாருங்கள்.. பகிருங்கள்..

சிய சோசலிச புரட்சியின் 102-ம் ஆண்டை ஒட்டி திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மொத்த இந்தியப் பொருளாதாரம், காஷ்மீர் மற்றும் தொழிலாளர் வாழ்வு ஆகியவற்றின் இன்றைய நிலையை பாடலில் விவரிக்கின்றனர் ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்கள் கோவன் மற்றும் லதா.

“மூனு ரூபா பார்லே ஜி வாங்க முடியல …
முப்பது ரூபா பனியன் ஜட்டி போணி ஆகல …”
– பொருளாதார நெருக்கடியை அம்பலப்படுத்தும் கோவனின் பாடல்.

“எழில்மிகு காஷ்மீரிலே என்ன நடக்குது தெரியல …
மண்ணின் சொர்க்கமே இருண்டு கெடக்கு .. மர்மம் விலகல …”
– காஷ்மீர் மக்கள் வாழ்வின் சோகத்தை பாடலாக வெளிப்படுத்துகிறார் தோழர் லதா…

“இரும்பு குழம்பாகி பாய்லரிலே கொதித்திடும் ..
கை உரையும் தாண்டி சூடு விரலெல்லாம் வெந்திடும் …”
தொழிலாளர்களின் வேலைநிலை அவலத்தை பாடலால் விவரிக்கிறார் தோழர் கோவன்..

பாருங்கள் ! பகிருங்கள் !