சீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்

நாம் தமிழர் கட்சியின் அன்புத் தம்பிகளின் சீமான் ஆதரவு மனநிலையின் பின்னணி என்ன ? விவரிக்கிறார் மனநல ஆற்றுப்படுத்துநர் வில்லவன்.

ரிசிக் கப்பலில் சுட்டது முதல் பன்றி வேட்டைக்குச் சென்றது வரை சீமான் சொல்லும் அத்துணை பொய்களையும் புரட்டுகளையும், சீமானின் அன்புத் தம்பிகள் கண்களை மூடிக் கொண்டு நம்புவதற்கான காரணம் என்ன ? சீமான் தான் தமிழகத்தை காக்க வந்த ஒரே மீட்பர் என அவர்கள் ஏன் நினைக்கிறார்கள் ?

நாம் தமிழர் கட்சியின் அன்புத் தம்பிகளின் சீமான் ஆதரவு மனநிலையின் பின்னணி என்ன ? விவரிக்கிறார் மனநல ஆற்றுப்படுத்துநர் வில்லவன்.

பாருங்கள் ! பகிருங்கள் !

வினவு செய்திப் பிரிவு

27 மறுமொழிகள்

 1. தமிழர் மண்ணை தமிழர் தான் ஆளணும்.
  இந்த உணர்ச்சியின் அடுத்த பரிணாமம் தமிழர் நிலத்தல் தமிழர் தான் வாழணும்.

  • அப்ப சிங்கள நிலத்தில் சிங்களவர்கள் தான் வாழனும் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா ?

   • சிங்களர் நிலத்தில் சிங்களர் வாழலாம் ஆளலாம் மணிகண்டன். ஆனால் யாழ்ப்பாண ராஜியத்தில் தமிழர்கள் தான் ஆள வேண்டும். அந்த ராஜ்யம் எல்லாளன் பெயர் சொல்வது.
    சங்கிலி மன்னன் ஆட்சி செய்தது. பாயும் புலி பண்டார வன்னியன் போரிட்டது. அந்த தமிழீழம் பல நூற்றாண்டுகளாக தமிழர்களின் பூர்வீக நிலம். அது இப்போது சிங்களரின் ஆதிக்கத்தில் இருக்கிறது அதுதான் பிரச்சனை.

 2. சீமான் கட்சியின் மாபெரும் தோல்வி அடைந்ததை பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. அதுவும் மணப்பாறையில் ஒரு ஒட்டு மட்டும் தான் வீழ்ந்து இருக்கிறது, சீமான் கட்சியினரை அவர்களின் குடும்பத்தினர் கூட நம்புவதில்லை என்பது நல்ல விஷயம்.

  இதே போல் தமிழக மக்கள் திமுக கம்யூனிஸ்ட் போன்ற தீய சக்திகளிடம் இருந்தும் விலகி நிற்க வேண்டும்.

  காங்கிரஸ் பிஜேபி போன்ற தேசிய சக்திகள் தமிழகத்தில் வலுவடைய வேண்டும்.

  • சீமானுக்காவது ஒரு சீட்டு. பாஜக விற்கு முட்டை… எனக்கு ரெண்டு கண்ணும் போனாப் பரவாயில்லை அவனுக்கு (நண்பனுக்கு) ஒத்தை கண்ணாவது போயிரனும்…
   ரெண்டு கண்ணையும் புடுங்கி கபோதியாக்கி உதைத்து அனுப்பியிருக்கிறார்களே தமிழ் மக்கள் என்பது மாட்டுமூளைகளுக்கு புரியாது..

   • எனக்கு கம்யூனிஸ்ட்களை பிடிக்காமல் இருப்பதற்கு காரணம் அவர்களின் கூச்சமற்ற பொய்கள்.

    மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியில் 6 இடங்களையும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 87 இடங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது.

    இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் நாகையில் கம்யூனிஸ்ட்களை பிஜேபி வென்று இருக்கிறது.

 3. “காங்கிரஸ் பிஜேபி போன்ற தேசிய சக்திகள் தமிழகத்தில் வலுவடைய வேண்டும்.”

  தேசிய சக்திகள் என்றால் வட இந்திய ஆதிக்க, உயர்சாதி ஆதிக்க சக்திகள் என தமிழகத்தில் அர்த்தம். அதனால்தான் தமிழகத்தில் அவை சரியாக வளரவில்லை.

 4. முதலில் இந்த வில்லவன் மாதிரியான ஆட்களின் உளவியலை ஆராய்ந்து சிகிச்சை தர வேண்டும். அப்புறம் சீமான் தம்பிகளின் உளவியலை ஆராயலாம். தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு குறித்து பேசினாலே திராவிட விரோதி, சமூக நீதி விரோதி, கம்யூனிச விரோதி, தேச விரோதி, இந்து மத விரோதி ஆகிய அனைத்து பட்டங்களும் எட்டு திசைகளிலும் இருந்து வந்து சேருகிறது. தமிழகத்து மக்கள் இன உணர்வு கொள்ளாதவரை வந்தேறிகள் ஏறி மிதிக்க தான் செய்வார்கள். திராவிடம் பேசும் கும்பல் ரொம்பவும் கொடுத்து வைத்திருக்கிறது.

  • காலமெல்லாம் திராவிடத்தை எதிர்த்து வந்த ஆன்மீக தமிழ் கடல் நெல்லை கண்ணனின் கைதை எதிர்த்தும் எச்ச ராஜாவை கைது செய்ய கோரியும் திராவிட கம்யூனிச உணர்வாளர்கள்தான் மெரீனாவில் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். போலி தமிழ் தேசியவாதிகள் ஒருத்தனைக்கூட காணவில்லை.
   அரிசிக் கப்பல், ஆமை படகு, ஆமைக் கறி, பன்னி வேட்டை, இன அழிப்பு காலத்தில் வகைவகையாக தின்று தீர்த்தது போன்ற வீரஞ்செரிந்த செயல்களை கழுத்து நரம்பு புடைக்க, கை முஷ்டியை முறுக்கி பேசும் சீமானின் பின்னால் அணிதிரளுபவர்களின் மனநிலையை ஆராய்ந்திருக்கிறார் வில்லவன். குறிப்பாக சமூகத்தில் அடையாளம் இல்லாத மற்றும் ஏதாவது ஒரு அடையாளத்திற்கு ஏங்குகின்ற பொறம்போக்குகள்தான் சீமானின் பின்னால் அணிதிரள்வதாக விவரித்திருக்கிறார். அந்த வரிசையில் பெரியஸ்வாமியும் காணக்கிடைக்கிறார்.

   • இலங்கையில் இரண்டு முறை பல்லாயிரம் தமிழ் மக்கள் படுகொலை ஆவதற்கு காரணமானது காங்கிரஸ் கட்சி. அதற்கு துணை போனது திமுக முதலிய திராவிட கட்சிகளும் கம்யூனிஸ்டுகளும் தான். அந்தக் கட்சியைச் சேர்ந்த உலகமகா தமிழ்கடல் அண்டத்திலேயே இல்லாத தமிழ்கடல் நெல்லை கண்ணன் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதற்காக கைதாகி இருக்கிறார். அதற்காக உங்கள் மாதிரியான கம்யூனிச உளுத்தர்களும் திராவிட பேடிகளும் தான் போராட்டம் நடத்துவீர்கள். அரசியல் நேர்மை கொஞ்சமாவது இருப்பவர்கள் செய்யமாட்டார்கள்.

    • கொதிநிலையில் இருக்கின்ற காலகட்டத்தில் பார்ப்பனியத்தின் டவுசரை அவுத்துவிட்ட நெல்லை கண்ணனை வன்முறையை தூண்டினார் என்று பார்ப்பனியத்திற்கு சொம்படிக்கிறீர்கள்.
     உண்மையில் வன்முறையை தூண்டுகின்ற எச்ச ராஜா வகையறாக்களின் பேச்சை விமர்சிக்க மற்றும் போராட மறுத்து போலி தமிழ்தேசியம் சகல துவாரங்களையும் மூடூவதாக நினைத்துக்கொண்டு அம்மணமாக நிற்கிறது.

     • ரெண்டு பேரோட சோலிய முடிங்க என்று சொல்வதுதான் பார்ப்பனியத்தின் டவுசரை அவிழ்த்து விடுவதா? இன்றைக்கு நாடு கொதிநிலையில் இருப்பதற்கு காரணமே முந்தைய ஆட்சியில் திராவிடம் பேசக்கூடிய கும்பல் 2ஜி ஊழல் 3 ஜி ஊழல் என சுரண்டி குடும்ப அராஜகம் நடத்தியதால் தான். உங்களை மாதிரி யான மானங்கெட்டவர்களுக்கு இது எப்போதும் புரியாது. வந்தேறி கும்பலிடம் அதற்குண்டான நியாயத்தை தான் எதிர்பார்க்க முடியும்.

      • //வரவர பெரியஸ்வாமியின் பதிவுகள் மணிகண்டனின் தரத்தை நோக்கி பாய்வது போலுள்ளது.//
       ரைட்டு..!
       நாம அனுமானிச்சது சரியாத்தான் இருக்கு…

 5. இது நல்லா இருக்கு, ஆளும் தலைவர்களை மற்றும் சீமானை விடுங்க, நாட்டு நடப்புகளுக்கு தீர்வு என்ன,..? 1. Petrol Diesel GST வரம்புக்குள் கொண்டு வர முடியுமா, முடியாது…. அப்ப ஏன்.? கேள்விக்கு பதில்
  2. ஏன் கட்டண உயர்வு?
  3.சாலை- அரசாங்கம் ஏன் பராமரிக்க முடியாமல் போனது.
  நீரம்ப கேள்விகள்… பதில் தீர்வு?

  • இவர்களுக்கு இது மாதிரியான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு நேரம் எங்கே இருக்கிறது? எப்போதும் எவனையாவது எதிர்த்து போராட்டம் என்ற பெயரில் ரகளை பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். முடிந்தால் மக்கள் புரட்சி என்னும் பெயரில் வன்முறையை தூண்டிக் கொண்டிருக்க வேண்டும்.

  • டேவிட் காத்துவாக்குல இன்னிக்கு வினவு பக்கம் ஒதுங்கியிருக்கிறாருன்னு நினைக்கிறேன்..
   அதுதான் பெரியஸ்வாமி ‘ஒரு அடிமை சிக்கிட்டான்’னு நெனச்சிட்டார் போலிருக்கு..
   வரவர பெரியஸ்வாமியின் பதிவுகள் மணிகண்டனின் தரத்தை நோக்கி பாய்வது போலுள்ளது.

 6. “குறிப்பாக சமூகத்தில் அடையாளம் இல்லாத மற்றும் ஏதாவது ஒரு அடையாளத்திற்கு ஏங்குகின்ற பொறம்போக்குகள்தான் சீமானின் பின்னால் அணிதிரள்வதாக விவரித்திருக்கிறார். ”

  இதிலிருந்தே நீங்களும் வில்லவனும் புறம்போக்குகள் என்பது தெரிகிறது. முதலில் உங்கள் இருவருக்கும் உளவியல் சிகிச்சை தேவை. நல்ல மருத்துவர்களை பாருங்கள் ஐயா.

  • புதுசா யோசிங்க பெரியஸ்வாமி…
   எங்க விமர்சனத்தையே காப்பி அடிக்காதீங்க…

 7. உங்களை மாதிரி ஆட்களுக்கு பதில் சொல்வதற்கு உங்களை மாதிரி யோசித்தாலே போதும்

 8. பெரியசாமி சார்…நெல்லை கண்ணன் வன்முறையை தூண்டினார் என்றால்..தமிழ் மண்ணில் ராஜீவ்காந்தியை கொன்று புதைத்தோம் என்றாரே சீமான்…அதுவும் வன்முறைப் பேச்சு தானா?காவி பயங்கரவாதத்தைக் காட்டிலும் ஆபத்தானது நெல்லை கண்ணனின் கைதை கண்டிக்காமல் ஒதுங்குவது..ராஜீவின் மரணத்தின் போதே பம்மி பதுங்கிக் கொண்டவர்கள்தானே இந்த தமிழ் தேசிய வீரர்கள்…அண்ணன் பிரபாகரனை ஆமைக்கறிக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வதுதான் ஒரு வேளை தமிழ்தேசியமோ என்னவோ?வாருங்கள் கருத்து வேறுபாடுகளை நாம் பேசி களைந்து கொள்வோம்…காவிகளை நாம் களையெடுத்து வெல்வோம்…பரிசீலிப்பீர்களா?

 9. சீமான் அடிப்படையில் சினிமா துறையில் இருந்து வந்த அதிக படிப்பறிவில்லாத ஒரு கோமாளி. அவர் பரபரப்புக்காக என்றோ நடந்த இந்திரா காந்தி கொலையை கூட தாங்கள் தான் செய்ததாக சொன்னாலும் சொல்வார். தமிழ் நாட்டுக்கான அரசாங்கம் தில்லியில் இருக்கும் மத்திய அரசுதான். மாநிலத்தில் இருப்பது மாநில நிர்வாகம். அது மத்திய அரசுக்கு கட்டுப்பட்டது. தனிப்பட்ட முறையில் ஒரு சில அதிகாரங்கள் கொண்ட இந்த மாநில நிர்வாகத்தை மாநில அரசு என நம் மனத்திருப்திக்காக சொல்லிக் கொள்கிறோம். உண்மையில் தமிழ் நாடாக இருந்தாலும் வேறு மாநிலமாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் அரசு எனில் அது மத்திய அரசுதான்.இறையாண்மை இருக்கக்கூடிய ஒன்றுதான் அரசாக இருக்க முடியும் மாநில நிர்வாகத்திற்கு இறையாண்மை கிடையாது. ஒரு மாநில கட்சி எப்படித்தான் எம்பி குதித்தாலும் எவ்வளவுதான் மெஜாரிட்டியோடு மாநில நிர்வாகத்தில் ஆட்சிக்கு வந்தாலும் சுற்றிவளைத்து தனக்கு மேலே இருக்கும் மத்திய அரசுக்கும் அதன் அதிகாரத்துக்கும் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். திராவிட கட்சிகள் மாநில நிர்வாகத்தில் அதிகாரத்திலிருந்து கிழிக்காத எதை சீமானும் ரஜினிகாந்தும் அதிகாரத்திற்கு வந்து கிழிக்கப் போகிறார்கள் என தெரியவில்லை. ராணுவ ரீதியில் பிரபாகரன் பேரழிவை தேடிக்கொண்ட மாதிரி அரசியலில் பேரழிவை சீமான் தேடிக் கொள்ளாமல் இருந்தால் சரி. ஆனால் இவர் கேட்கக்கூடிய சில கேள்விகள் மாநில நிர்வாகத்தில் பதவியில் இருந்தவர்களையும் பதவிக்கு வரவேண்டுமென நினைப்பவர்களையும் தர்மசங்கடத்துக்கு உள்ளாகக் கூடியவை. முன்னர் நடந்த தேர்தல்களில் வெறும் 4 சதவீதமாக இருந்த இவரது ஓட்டு வங்கி தற்போது நடந்த இந்த உள்ளாட்சித் தேர்தலில் பத்து சதமாக உயர்ந்திருக்கிறது. இது தமிழ்நாட்டில் நிறைய பேர் இவர் பேச்சை கவனிக்கிறார்கள் என்பதற்கான அடையாளம். இந்த தளத்தை நடத்துபவர்கள் பார்ப்பனியம் பார்ப்பனியம் என எப்போது பார்த்தாலும் பிலாக்கணம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பார்ப்பனியம் இன்றைக்கு மத்தியில் தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டியுடன் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு காரணமே திமுக மாதிரியான ஊழலிலும் குடும்ப அரசியல் அராஜகத்திலும் ஈடுபட்டுள்ள கட்சிகள்தான். மத்தியில் பாஜக ஆட்சி என்பது விளைவு. அதற்கான காரணிகள் திமுக மாதிரியான ஊழல் குடும்ப அராஜக கட்சிகளும் இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினரின் அடிப்படைவாத செயல்பாடுகளும் தான் இட்லர் ஜனநாயக முறைப்படி தேர்தலில் மெஜாரிட்டி வாங்கித்தான் ஆட்சிக்கு வந்தார். அது விளைவு.. இது தெரிந்தும் இந்த தளத்தில் காரணிகளை இலைமறைகாயாக ஆதரித்துக் கொண்டு விளைவை விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த தளத்தில் கட்டுரை எழுதுபவர்களும் தளத்தை நடத்துபவர்களும் மக்களை கேனையர்களாக நினைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு பொய்களை வாரி இறைத்துக் கொண்டு வருகிறார்கள்.

  • பீலா விடறதுனு முடிவு செய்தால் இப்படி எல்லாம் 4 சதவீதம் 10 சதவீதம் என்று எல்லாம் பீலா விட கூடாது எங்களுக்கு இருப்பது 30 சதவீதம் விரைவில் சீமான் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்பது போல் பீலா விட வேண்டும்.

   அது எப்படிப்பா 10 சதவீத வாக்கு வங்கி இருக்கிறவங்க ஒரே ஒரு வார்டில் ஜெயிச்சு இருக்கீங்க ? நீங்க பாமக பிஜேபி காங்கிரஸ் கட்சிகளை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டுமே…

   ஒரு வார்டில் வெற்றி பெற்றதற்கே இவ்வுளவு அலப்பறைகள்… தமிழர்களின் உண்மையான எதிரிகள் சீமான் போன்றவர்கள் தான், நல்லவேளை தமிழக மக்கள் சீமானை முற்றிலும் புறக்கணித்து இருக்கிறார்கள். இல்லையென்றால் நாளை இலங்கையில் நடந்த அழிவுகளை சீமான் தமிழகத்தில் கொண்டு வந்து இருப்பான்.

   துளிகூட நேர்மையில்லாத ஒரு அரசியல்வாதி சீமான்.

   • 120க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளை இந்த உள்ளாட்சி தேர்தலில் கைப்பற்றி இருப்பதாக சீமான் கூறியுள்ளார் லோக்சபா தேர்தலில் 4% இருந்த ஆதரவு இப்போது 10% அளவுக்கு வந்திருப்பதாக அவரே கூறியுள்ளார் ஆனந்த ஓட்டுக்கள் பரவலாக இருந்ததால் அதிக இடங்களை கைப்பற்ற முடியவில்லை
    இலங்கையில் நடந்த அழிவுகளை விட அதிக அழிவுகளை நடத்தக்கூடிய நிலையில் உங்களின் பாஜக இருக்கிறது இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மிக அதிகமான கலவரங்களை நடத்தி அவற்றில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் ரத்தம் சிந்துவதற்கு காரணமானது பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பு

    • சார் நீங்கள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றிர்கள் எவ்வுளவு வாக்குகளை வாங்கினீர்கள் என்பதை சீமான் சொல்ல கூடாது தேர்தல் ஆணையம் சொல்ல வேண்டும்.

     10 வருடங்களாக கட்சி நடத்தி ஒரே ஒரு தொகுதியில் தான் நீங்கள் வென்று இருக்கிறீர்கள். இந்த கேவலத்திற்கு நீங்கள் கட்சியை களைத்து விட்டு ஈழத்திற்கே சென்று அங்கே அரசியல் செய்து கொள்ளலாம்.

     தமிழர்கள் உங்களை முற்றிலும் புறக்கணித்து இருக்கிறார்கள்.

    • நீ ஏண்டா பயங்கரவாத அரசியல் செய்கிறாய் என்று கேட்டால் பிஜேபியை பார் என்று பதில் சொல்கிறீர்கள், அவர்கள் மத்தியில் 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கிறார்கள்… எத்தனை மத கலவரங்கள் நடந்து இருக்கிறது என்று சொல்ல முடியுமா ?

     பசு கொலைகளை சொல்விர்கள் ஆனால் அது பிஜேபி ஆட்சியில் மட்டும் அல்ல வெள்ளையர் ஆட்சி காலத்தில் இருந்தே இருக்கும் ஒரு பிரச்னை தான். எப்படி இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் அவர்களின் மத உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அதே போல் ஹிந்துக்களும் பசு புனிதம் என்ற அவர்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று எதிர் பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும். வேண்டும் என்றே வன்முறை தூண்டுவது போல் சமூக வலைத்தளங்களில் நான் பசு கறி சாப்பிட்டேன் என்று சொல்லும் போது அது வன்முறையை தூண்டும் விஷயம் தானே.

     ஆனால் ஒரு அய்யோக்கியனும் இதை பற்றி பேச மாட்டான்.

 10. பெரியசாமி சார் என்னது இது? சீமான் பிரபாகரன் பிஜேபி ஆர்எஸ்எஸ் எதிலும் உங்களுக்கு உடன்பாடில்லை சரி..முதலாளித்துவ கொடுங்கோன்மைகளிலிருந்து மக்கள் விடுதலை என்பது கம்யூனிச புரட்சியின் வழியாகவே சாத்தியம் என்று அதை மக்கள் நலனிலிருந்தே மக்களை புரட்சிகர அரசியல் நடவடிக்கைக்கு அவர்கள் கற்றுணர போராடிக்கொண்டிருக்கும் வினவோடும் மாற்றுக்கருத்தெனில் உங்களின் அரசியல்தான் என்ன?

  • முதலில் மக்கள் விரோத தேசவிரோத கம்யூனிஸ்ட் அயோக்கியர்களிடம் இருந்து சாதாரண மக்களுக்கு விடுதலை வேண்டும்.

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க