Wednesday, February 28, 2024
முகப்புசெய்திஇந்தியாபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் ?

பிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் ?

தமிழகத்தில் பாஜக என்றதும் நினைவுக்கு வருவது, ‘பிரியாணி அண்டா திருடர்கள்’ என்பது தான். இருந்தும் ஏன் பா.ஜ.க.விற்கு பிரியாணியின் மீது வெறுப்பு.

-

பிரியாணியின் செய்முறையில் இறுதிக்கட்டம் தம் போடுவதாகும். அரிசி, இறைச்சி, மசாலா மற்றும் நறுமணப் பொருட்கள் கலந்த கலவையாக பிரியாணி அற்புத சுவையுடன் இருக்கும். உண்மையில் பிரியாணி சமைப்பது ஒரு மந்திர செயல்முறை என்று கூட சொல்லலாம். இத்தகைய சமையல் கலைத்திறனை பாராட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இத்தகைய பிரியாணியை எதிர்ப்பவர்களும் இருக்க முடியுமா?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைத் தாக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, “டெல்லி தேர்தல் ஆதாயத்திற்காக ஆம் ஆத்மி கட்சி ஷாஹீன் பாகில் போராடுபவர்களுக்கு பிரியாணி வழங்குவதாக” கூறி போராட்டத்தைக் கொச்சைப்படுத்த முனைந்துள்ளது பா.ஜ.க.

பா.ஜ.க -வின் ஐ.டி பிரிவின் தலைவரான அமித் மால்வியா, “ஷாகீன் பாகில் பிரியாணி விநியோகிக்கப்படுவதற்கான ஆதாரம்” எனக் கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளான். (ஏதோ மிக ரகசியமாக பிரியாணி உண்டதை இவர்கள் கண்டுபிடித்து வெட்டவெளிச்சமாக்கியதைப் போல)

இவ்வாறு பா.ஜ.க.வினர் பேசுவது முதல்முறையல்ல. 2015-ல் மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப்பிற்கு சிறை நிர்வாகம் பிரியாணி வழங்கியது என அரசு வக்கீல் உஜ்வல் நிகம் ஒரு பொய்யைக் கூறினார். விசாரணையின் போது கசாபிற்கு ஆதரவாக உருவான ஒரு உணர்ச்சிகரமான சூழலை உடைப்பதற்காக தான் அவ்வாறு பொய் கூறியதாக பின்னர் கூறினார்.

படிக்க:
விரைவில் பிரியாணிக்கு தடை – மோடி அரசு அடக்குமுறை
♦ 10 வயதுக் குழந்தைகளை தொடர்ந்து மிரட்டும் கர்நாடக காவிப் போலீசு !

முசுலீம் மற்றும் இந்தியத்தன்மை :

பிரியாணி என்பது தெற்காசியாவில் உள்ள முசுலீம்களின் உணவாக கருதப்படுகிறது. உண்மையில், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு முசுலீம் சமூகத்திற்கும் அதன் சொந்த பிரியாணி உள்ளது.

மலபாரில் மாப்ளாக்களின் தலசேரியாக,  டக்னிஸின் (தக்கானம்) ஹைதராபாதி பிரியாணி, குஜராத்தின் மெமன்களின் மெமோனி பிரியாணி, லக்னோவின் அவதி அல்லது உருது மொழி பேசுபவர்களின் கொல்கத்தா பிரியாணி – என பலவகை உண்டு.

இருப்பினும் இதில் சுவாரசியமான விசயம் என்னவெனில், பிரியாணி என்பது முசுலீம்களின் உணவு என்பதைத் தாண்டி ஒரு தேசிய உணவாக மாறியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கியில் கடந்த 3 ஆண்டுகளில் அதிகபட்சமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணி தான். ஸ்விக்கி நிறுவனத்தில் மட்டும் ஒவ்வொரு நிமிடமும் 95  பிரியாணிகள்  ஆர்டர் செய்யப்படுகின்றன.

இந்திய உணவு பற்றி எண்ணும் போது வெளிநாட்டினர்க்கு முதலில் நினைவுக்கு வரும் உணவு பிரியாணி. ஒரு ஆய்வில், இணையத்தில் “உலகளவில் அதிகம் தேடப்பட்ட இந்திய  உணவு” பிரியாணி என்று கண்டறியப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக பிரியாணி என்றாலே இறைச்சியைக் கொண்டுதான் தயாரிக்கப்படும். ஆனால் இப்போது பல சைவ உணவுகள் பிரியாணி என்ற அடைமொழியுடன் பெயரிடப்படுகின்றன.

2014-ம் ஆண்டில், வெளியில் இருந்து ஒரு பிரியாணி கொண்டு வர அனுமதிக்கவில்லை என்பதற்காக ஹைதராபாத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலையே மாற்றினாராம் எம்.எஸ்.தோனி.

இவ்வாறு எல்லோராலும் மிகவும் விரும்பப்படும் உணவை யாரையும் இழிவுபடுத்துவதற்கு எவ்வாறு பயன்படுத்தலாம்?

பிரியாணியின் மீது பா.ஜ.க-விற்கு இத்தகைய வெறுப்பு ஏற்பட காரணம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள அக்கட்சியை ஆளும் சித்தாந்தத்தை ஒருவர் கவனிக்க வேண்டும்: இந்து தேசியவாதம் அல்லது இந்துத்துவா தான் அது..

படிக்க:
கொல்கத்தா : ஒரு மாதமாக பெண்கள் தலைமையில் தொடரும் போராட்டம் !
♦ கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் ?

அரசியல் அறிவியலாளர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் வாதிட்டபடி, “இந்து தேசியவாதத்தை அதன் உளவியல் சூழலோடு பொருத்திப் பார்க்காமல் புரிந்து கொள்ள முடியாது. அது பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. இந்த சித்தாந்தம் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு பலவீன உணர்வின் எதிர்வினையாக வடிவமைக்கப்பட்டது. இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் இந்துமத சாதி படிநிலை மற்றும் பிளவுகளின் காரணமாக இந்துமதம் பலவீனமாக காணப்பட்டது” என்று அவர் வாதிடுகிறார்.

இந்த அடிப்படையில் தான் பெரும்பான்மையாக இருந்தாலும், இந்நாட்டில் 7 பேரில் ஒருவர் மட்டுமே முசுலீமாக இருந்த போதிலும், இந்து தேசியவாதிகள் முசுலீம்களைக் கண்டு அஞ்சுகின்றனர், வெறுக்கின்றனர். முசுலீம்களின் உணவான பிரியாணியும் இந்தியர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.


செய்தி கட்டுரையாளர் : ஷோயப் தனியால்
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : நறுமுகை
நன்றி :ஸ்க்ரால்.

பின்குறிப்பு :
இந்துத்துவ சித்தாந்தவாதிகளுக்கு வேண்டுமானால் பிரியாணி வெறுப்பு இருக்கலாம். ஆனால் அதன் அடிபொடிகளுக்கு நிச்சயம் பிரியாணி வெறுப்பு கிடையாது என அடித்துச் சொல்லலாம். ஆதாரம் கேட்போர், கோவையில் இந்து முன்னணி பொறுக்கி செத்த போது கலவரம் செய்ய வந்த சங்கிகள் பிரியாணி அண்டாவைத் தான் திருடினார்களே அன்றி தயிர்சாத குண்டாக்களை அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

 1. “முசுலீம்களின் உணவான பிரியாணியும் இந்தியர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.”

  இந்தக் கட்டுரை தவறானது. மதம், இனம் ஆகியவற்றைத் தாண்டி அனைவரும் பிரியாணியை அதன் சுவைக்காக விரும்புகிறார்கள். பிரியாணியில் சைவ வகைகளும் உண்டு. அதுபோல் சமோசாவும் அதன் சுவைக்காக அனைவராலும் விரும்பப்படுகிறது. ஆரம்பத்தில் இஸ்லாமியரின் தீனியான சமோசாவில் இறைச்சி வைக்கப்பட்டு பொறிக்கப்பட்டது. பிறகு சில சாதியினரின் விருப்பத்திற்கு ஏற்ப உருளைக்கிழங்கு பட்டாணி வெங்காயம் ஆகியன உள்ளே வைக்கப்பட்டு பொறிக்கப்பட்டு உண்ணப்பட்டது. தங்களுடைய எதிரிகள் சுவை மிகுந்த பிரியாணியை உண்ணுவதையும் அவர்களுக்கு அது கொடுக்கப் படுவதையும் ஆர்எஸ்எஸ் அடிப்பொடிகள் விரும்புவதில்லை இதுதான் காரணம்.

  • பிரியாணி என்பது அரபு நாடுகளின் தேசிய உணவு. அரபு நாட்டிலிருந்து வந்த பிரியாணியை இந்தியர்கள் பலவிதமாக சமைத்து உண்கிறார்கள். அது அரபு நாட்டு இஸ்லாமிய உணவு என்பதால் சங்கிகள் வெறுப்பை உமிழ்கிறார்கள். (ரகசியமாக தின்றுகொண்டே..)

 2. பெரியசாமி சார் கொஞ்சம் மாட்டுக்கறி வைத்து பிரியாணி செய்து உங்கள் வீதியில் உள்ளவர்களோடு சேர்ந்து சாப்பிட்டு பாருங்களேன்..இந்தக்கட்டுரை சரியா தவறா என்று உடனே “புரிந்து” விடும்…

  • பேசாமல் வினவு பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் ஒரு தமிழ் பத்திரிகை என்று பெருமையோடு போட்டு கொள்ளலாம். இந்த கட்டுரை பாக்கிஸ்தான் பத்திரிகையில் வெளிவந்து வினவிற்கு வந்து இருக்கிறது…

   பிரியாணியை விட எங்கள் நாட்டின் இட்லி தோசை சாம்பார் சட்டினி பல மடங்கு ருசியானது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காதது.

   • //பிரியாணியை விட எங்கள் நாட்டின் இட்லி தோசை சாம்பார் சட்டினி பல மடங்கு ருசியானது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காதது.
    Taste is a personal choice. Anything excessive is harmful.

  • மாட்டுக்கறி சாப்பிட வேண்டுமெனில் நான் நேரடியாகவே சாப்பிட்டுவிட்டு போகிறேன். அதை எதற்கு பிரியாணியோடு சாப்பிட வேண்டும்? மாட்டுக்கறியை பற்றி பேசக்கூடிய நீங்கள் பன்றி கறி பிரியாணி பற்றி ஏன் பேசுவதில்லை? இந்த நாட்டில் பெரும்பான்மையினர் மாட்டுக்கறி சாப்பிடாதவர்கள் தான். திராவிடம், பகுத்தறிவு, கம்யூனிசம் பேசக் கூடியவர்களிலேயே நிறைய பெயர் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்கள். மாட்டுக்கறிக்கு ஒரு நியாயம். பன்றிகறிக்கு இன்னொரு நியாயம் என இருப்பவர்கள் நீங்கள். இந்த கட்டுரை அதனால்தான் தவறானது.

   • //மாட்டுக்கறிக்கு ஒரு நியாயம். பன்றிகறிக்கு இன்னொரு நியாயம் என இருப்பவர்கள் நீங்கள். //
    மாட்டுக்கறி உண்பதை ஆதரிக்கும் வினவு பன்றிக்கறி உண்பதை ஆதரித்தால் இஸ்லாமியர் மனம் புண்படும் என்று அமைதி காப்பதாக எண்ணி பெரியசாமி வேதனையுருவதாகக் கருதுகிறேன். சங்கிகளுக்கு பசு போல இஸ்லாமியருக்கு பன்றி புனிதமல்ல அசிங்கம். அவர்கள் தாங்கள் உண்பதில்லையே தவிர மற்றவர்கள் உண்பதைத் தடுப்பதில்லை. சமீபத்தில் தமிழகத்தில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டத்தின் போது அர்ஜூன் சம்பத் பெரியசாமியின் எண்ணத்தை செயலாக்குவது போல பன்றிக்கறி உண்ணும் போராட்டம் அறிவித்தார். அவர் எதிர்பார்த்தபடி முஸ்லிம்கள் அதை சட்டை செய்யவில்லை. மேலும் திராவிட மற்றும் முற்போக்கு இயக்கத்தவர்கள் தாங்களும் பன்றிக்கறி சாப்பிட வருவதாக அறிவித்த பின்னர் தான் அர்ஜுன் சம்பத்தின் மரமண்டைக்கு உறைத்து வாயை மூடிக்கொண்டார். அரபு நாடான துபாயில் கூட பன்றிக்கறி விற்பனைக்கு உள்ளது.

    • இஸ்லாமியர்களுக்கு பன்றி புனிதம் அல்ல
     ஹிந்துக்களுக்கு பசு புனிதம்

     அதெல்லாம் இருக்கட்டும் இதற்கு பதில் சொல்லுங்கள்

     ஹிந்து வேதங்களையும் ஹிந்து தெய்வங்களையும் இழிவு செய்யும் உங்களை போன்ற வினவு கூட்டங்கள் ஏன் இஸ்லாமிய கடவுளையோ அல்லது குரானையோ அல்லது கிறிஸ்துவ கடவுளையோ அல்லது பைபிளையோ இழிவு படுத்துவதில்லை… ஓடி ஒளியாமல் நேர்மையாக பதில் சொல்ல முடியுமா ?

     ஹிந்து என்றால் உங்களுக்கு இளிச்சவாயர்கள் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டக்கூடிய அப்பாவிகள் அதனால் அவர்களின் நம்பிக்கைகளை எப்படி வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம் ஒன்றும் ஆகாது என்ற தைரியத்தில் ஹிந்துக்களை அவமதித்து கொண்டு இருக்கிறீர்கள்.

     ஆனால் இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ கடவுளை இழிவு செய்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும் அதனால் வாயை மூடி கொண்டு இருக்கிறீர்கள்.

     உங்களுக்கு ஒரு தகவல்: காஷ்மீரில் பன்றி கறிக்கு எதிராக சட்டமே இருக்கிறது. அவர்கள் கிசான் ஜாம், மேகி நூடுல்ஸ், காட்பரி சாக்லேடில் பன்றி கொழுப்பு இருக்கலாம் என்பதற்காக தடை செய்து இருக்கிறார்கள்.

     காஷ்மீரில் தங்களின் தெருவில் பன்றியை ஒட்டி வந்தார் என்று சொல்லி கொலையே செய்து இருக்கிறார்கள்.

 3. ஹிந்து வேதங்களையும் தெய்வங்களையும் இழிவு செய்வது நாங்களல்ல மணிசார்…ஹரனின் ஒழுகும் விந்துவை ஹரி தன் கையில் ஏந்தினார்…அப்போது பிறந்தவர்தான் ஐயப்பன்..ஹரி ஹர சுகனே அய்..சிவனின் ஆண்குறியும் பார்வதியின் பெண்குறியும் சேர்ந்ததுதான் லிங்கம்..இப்படி ஏராளமாய் காணக்கிடைக்கும் உங்கள் ஹிந்து மதத்தில் அந்த இழிவை செய்து வைத்தது யார்?நீங்கள் நியாயமாக நான் வணங்கும் ஹிந்து தெய்வங்களை ஏன்டா இப்படி இழிவு படுத்தி வைத்துள்ளீர்கள் என்று…கையில் சூலாயுதத்துடன் சங்கரமடத்தை இடிக்க கிளம்பியிருக்க வேண்டும்…ஐயையோ மணி சாரின் கண்கள் சிவக்கிறதே “கிளம்பி விட்டாரோ”ரோஷம் கொண்டு…

  • கிறிஸ்துவ அமைப்புகள் பரப்பி வைத்த பொய்களை அப்படியே திரும்ப சொல்கிறீர்கள்…

   சிவ லிங்கத்தின் அடிப்பகுதி படைக்கும் கடவுளான பிரம்மாவை குறிக்கும், நடு பகுதி விஷ்ணுவை குறிக்கும், மேல்பகுதி சிவனை குறிக்கும். மும்மூர்த்திகளின் வடிவம் தான் சிவலிங்கம்.

   லிங்கத்தின் மிக முக்கியமான அர்த்தம் பற்று அற்ற மனநிலையை குறிக்கும் ஒரு வடிவம், சிவலிங்கத்தின் மீது நீங்கள் பூ வைத்தாலும் சரி, அபிஷேகம் செய்தாலும் சரி எதுவுமே தாங்காது.. பிறக்கும் போது நாம் எதுவும் கொண்டு வரவில்லை இறக்கும் போதும் எதுவும் கொண்டு போவதில்லை அதனால் நம்மோடு ஒட்டாத பொருட்களுக்காக நாம் நம்மை இழக்கிறோம்.. தனி மனிதனின் சுயநலத்தை போக்கி ஆத்மாவை நிலையானதாக பேரின்பத்தை வழிகாட்டி சிவலிங்கம்…

 4. மணி சார் நீங்கள் என்னதான் மாற்றி மாற்றி கழுவினாலும் மலவாயின் நாற்றம் போகவே போகாது…இது தசரத சக்கரவர்த்தியின் பத்தாயிரம் பெண்டாட்டிகள் மீது சத்தியம்…

  • உங்களின் கிறிஸ்துவ அடிப்படைவாத சிந்தனைகள் இப்படி தான் உங்களை பேச வைக்கும்.

 5. இந்தியாவில் கிறிஸ்துவமும் இஸ்லாமும் வளர்ந்ததே உங்கள் ஹிந்து மத பார்ப்பன கொடுங்கோன்மையால்தான்.. ஹிந்து மதம் தோன்றியபோதே “கொரெனா”..கிறிஸ்துவமும் இஸ்லாமும் தோன்றும்போது “இன்சுலினாக” தோன்றி இன்று “நீரழிவு”…அதனால்தான் நான் மதம் மக்களுக்கு “அபின்” என்றுணர்ந்து வினவு கூட்டங்களால் “கெட்டு”எம்மதத்தையும் ஏற்பதில்லை…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க