சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் எப்போதாவது மன்னிப்பு கேட்டாரா, இல்லையா என்பது குறித்த பதிவுகள் ஏதும் அரசிடம் இல்லை என்று இந்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தகவல் அறிந்தவர்களின் கருத்துப்படி, சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர்.

1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன் பிறகு 9 ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார்.

“சாவர்க்கர் சகோதரர்கள் சிறைச்சாலைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய எங்களை ரகசியமாக தூண்டிவிடுவார்கள். ஆனால் எங்களுடன் வெளிப்படையாக இணைந்து கொள்ள சொன்னால் பின்வாங்கிவிடுவார்கள். சாவர்கர் சகோதரர்களுக்கு கடின உழைப்பு கொண்ட வேலைகள் வழங்கப்படவில்லை” என்று பரிந்திர கோஷ் என்ற மற்றொரு கைதி பின்னர் ஒரு சமயம் தெரிவித்தார்.

15 நாட்களுக்கு ஒரு முறை கைதிகளின் எடை அளவிடப்படும். சாவர்க்கர் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 112 பவுண்டுகள் எடை இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினோல்ட் கிரீடோக்கிடம் அவர் நான்காவது முறை மன்னிப்பு கேட்டபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக அதிகரித்திருந்தது.

தன் மீது கருணை காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திந்தார். பதிலுக்கு, அவர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்திற்காக பணியாற்ற தயாராக இருந்தார்.

படிக்க:
♦ பயங்கரவாத பாஜக : இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி வேண்டுமாம் !
♦ காந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ !

ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்? அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரனம் என்ன என பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல், இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

காந்தி கொலை வழக்கில் தங்கள் மீது படிந்த கறையை நீக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ். -க்கு நீண்ட காலம் எடுத்தது. இந்த வழக்கில் சாவர்க்கர் சிறைக்குச் சென்றார், பின்னர் வழக்கில் இருந்து விடுபட்டு 1966 வரை வாழ்ந்தார், ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.”

ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கூட அவரை புறக்கணித்தது. அவர் எப்போதுமே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். காந்தி கொலை தொடர்பாக சாவர்க்கர் மீதான சந்தேகம் எப்போதும் மறையவே இல்லை என்பதே காரணம். சாவர்கருக்கு தெரியாமல் காந்தி படுகொலை நடந்திருக்க முடியாது என்று கபூர் கமிஷன் அறிக்கையிலும் தெளிவாக கூறிவிட்டது.

நீங்கள் சாவர்க்கரை மதிக்க விரும்பினால், காந்தியின் சித்தாந்தத்தை முற்றிலும் பின்தள்ள வேண்டும். அதேபோல் காந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சாவர்க்கரின் சித்தாந்தத்தை நிராகரிக்க வேண்டும்.

இது குறித்து பிபிசி வெளியிட்டுள்ள கட்டுரையை கீழே படித்துப் பாருங்கள் :

சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க அரசு – இது உண்மையா? வரலாறு சொல்வதென்ன?

 

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன்