தேதி: 23.3.2020

ன்பார்ந்த வாசகர்களே, நண்பர்களே!

எமது வினவு இணைய தளத்தின் ஆசிரியர்குழு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி “விடைபெறுகிறோம் வினவு ஆசிரியர் குழு’’ என தமது விலகல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக அவர்களை அணுகி பிரச்சினையை தீர்க்க முயற்சித்து வருகிறோம்.

தற்போதைய அரசியல் சூழலில் கடந்த ஒரு மாத காலமாக தளம் செயல்படாததற்கு எங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். வினவு தளம் அரசியல் அரங்கில் தொடர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியம் கருதியும், வினவின் வாசகர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வினவை விரைந்து செயல்பட வைக்குமாறு கோரிய வகையிலும் நான் பொறுப்பாசிரியராக இருந்து வினவு தளத்தை இயக்கத் தொடங்கியுள்ளோம். இதுவரை எமக்கு உறுதுணையாக இருந்து வந்த வாசகர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

வினவு பொறுப்பாசிரியர்,
காளியப்பன்.

35 மறுமொழிகள்

  1. தோழன் பகத்சிங் ன் நினைவு நாளில் மீண்டும் செயல்படத் துவங்கிய வினவுக்கு வாழ்த்துக்கள். கொரானா குறித்தும், சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி குறித்தும் ச என ய்திகள் வழங்கவும்.

  2. //வினவு தளம் அரசியல் அரங்கில் தொடர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியம் கருதியும்//

    இதை தெரிந்து கொள்வதற்கு 1 மாதம் தேவைப்பட்டதா?

    இதை முன்பே செய்திருக்க வேண்டும். இப்பவாவது படிப்பினையா எடுத்துக்குங்க!
    வெற்றிகரமாக தொடருங்கள்! 👍👍👍

  3. வினவு தளம் மீண்டும் இயங்கத் தொடங்கியிருப்பதைக் கண்டு மகிழ்வதா அல்லது “இது தொடர்பாக அவர்களை அணுகி பிரச்சினையை தீர்க்க முயற்சித்து வருகிறோம்” என்ற வரிகளுக்குப் பின் மறைந்துள்ள துர்பாக்கிய நிலையைக் கண்டு அழுவதா என எனக்குப் புரியவில்லை. எது எப்படியிருந்தாலும், வினவு தளம் மீண்டும் இயங்கத் தொடங்கியிருப்பதற்கு எனது வாழ்த்துகள்.

  4. என்ன பிரச்சினைக்காக வெளியேறுகிறோம் என்று ஒருவரியில்கூட விளக்கம் சொல்லாமல் விலகிய ஆசிரியர்குழுவிடம் பேச என்ன இருக்கிறது? புரியவில்லையே … அந்த நாலுபேருக்கு நன்றி ….

  5. வினவுக்கு வாழ்த்துக்கள். வீறு நடை போடுங்கள். என்றும் உம்மோடு நாங்கள்.

  6. வினவுக்கு கொரோனா வெல்கம்.
    கொரோனா – உலகம் – இந்தியா – மக்கள் நிலை ?

  7. இடைவெளி இல்லாமல் இயக்கமில்லை. நீண்ட இடைவெளியைக் குறைத்ததற்கு மகிழ்ச்சி. நாள் தவறாமல் நற்செய்திகளைக் குவியுங்கள்.வாழ்த்துவதற்கு என்ன இருக்கிறது வீழ்த்துவதற்கல்லவா நிறைய குவிந்திருக்கிறது!

  8. வாழ்த்துகள், முன்னினும் சிறப்பாக செயல்படவேண்டும்.

  9. தங்களது புரட்சிகர பணி மீண்டும் சிறப்பாக தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  10. அன்பின் வினவு..புரட்சிகர அரசியலை தாங்கி ஒரு தளம் சிறப்பாக செயல்பட கடின உழைப்பும்..மிகச்சரியான அரசியல் கண்ணோட்டமும் தேவை..வினவின் முந்தைய ஆசிரியர் குழுத்தோழர்கள் தளத்தை அதன் வழி மிகச்சிறப்பாக நடத்தினர்..அவர்களோடான முரண் களைவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கதே…இந்தியாவின் லெனின் புரட்சி வீரன் பகத்சிங்கின் நினைவு தினத்தில் வினவின் வருகை கண்டு விழிகளில் நீர் ததும்ப நன்றியோடு வரவேற்கிறேன்..பொறுப்பாசிரியர் தோழருக்கும் கடமை ஏற்றிருக்கும் மற்ற தோழர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்…என்றும் உங்களுடன்…

    • அன்பு நெப்போலியன்,

      முரண் என்ன இருக்கிறது ? சரியா தவறா எனும் பிரச்சினை – இரு தரப்பில் பேசித் தீர்க்க வேண்டிய கட்டப் பஞ்சாயத்து அல்ல. விசாரணையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டியது அல்லவா ?

      அவர்கள் மீண்டும் வருவது மகிழ்ச்சிக்குரியதுதான். அது முறையான விசாரணைக்கு உட்பட்ட பின் வரவேண்டுமே ஒழிய பேசித் தீர்த்து வரவேண்டியது அல்ல..

  11. புதிய வினவுக்கு வாழ்த்துக்கள் !

    /// இது தொடர்பாக அவர்களை அணுகி பிரச்சினையை தீர்க்க முயற்சித்து வருகிறோம். ///

    பொறுப்பாசிரியர் ஐயா, ஒரு பிரச்சினை உரிய இடத்தில் வைத்து விவாதிப்பதற்கு முன்னர் நீங்களே பிரச்சினையை தீர்க்க எப்படி முயற்சிக்கிறீர்கள் ?

    அவர்கள் விலகல் சரியா தவறா ? தளத்தில் மருதையன் விலகல் கடிதத்தை வெளியிட்டது சரியா தவறா ? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று கூறினால் நியாயம் …

    அவர்களுடன் பேசித் தீர்க்க முயற்சிக்கிறோம் என்று அவர்களுக்கு யோக்கியப் பட்டம் கொடுப்பதற்கு சமமானது. இந்த வினவு தளத்தின் ஆதாரத் தூண்களான வாசகர்களும், அமைப்பின் அணிகளும் முடிவெடுக்க வேண்டிய விசயத்தில் இவர்களுக்கு மேலாக நீங்கள் நின்று கொண்டு அவர்களுடன் பேசித் தீர்க்க முயற்சிப்பதகக் கூறுவது உங்கள் சார்பு நிலையைக் காட்டுகிறது..

    சிறிதேனும் மக்களுக்கும் அணிகளுக்கும் நியாயமாக நடந்து கொள்ளுங்கள் !

    • இது சரியான கருத்து ஆனால் ஒரு பக்கக் கருத்து மட்டுமே.
      இதுவரை பகிரங்க வெளியில் பேசப்படடாத ஒரு தகவலை மருதையனின் விலகல் மூலம் வினவு வெளிக்கொணர்ந்தது. அதுதான் அவர்கள் மீது நடாத்தப்பட்ட தனிப்பட்ட மற்றும் ஜாதி சார்ந்த தாக்குதல். இந்தத் தாக்குதல் ஏன் நடாத்தப்பட்டது? அதன் உள்நோக்கம் என்ன? அதுபற்றியும் பேசப்பட வேண்டும். இதுபற்றி பகிரங்கமாக
      பேசப்படாதவரை அதுபற்றி வினவு வெளியிட்டது நியாயப்படுத்தப்படவே படும்.
      மக்கள் நலன் சார் அமைப்புகள் சில வேளைகளில் தமது நோக்கத்தைவிட இருப்பை முதன்மைப்படுத்தி விடுகின்றன. (நான் வாழும் நாட்டில் அது நன்றாகவே நடந்தது.) அது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

  12. தோழர்கள் மருதையன், நாதன் ஆகியோரின் கடிதத்தை அவ்விரு தோழர்களும் இயங்கிவந்த அமைப்பின் முகமாக அறியப்படும் வினவுதளத்திலேயே வெளியிட்டதற்கு பொறுப்பேற்று ஆசிரியர் குழு தோழர்கள் விலகுவதாக அறிவித்திருந்தனர். இக்கடிதம் வெளியானது பற்றியும் அக்கடிதத்தை வெளியிட்ட ஆசிரியர் குழு தோழர்கள் பற்றியும் பொது வாசகர்களுக்கு பொறுப்பாசிரியர் தெரிவிக்கும் கருத்து என்ன? ஆசிரியர் குழுத்தோழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்து வாசகர்களுக்கு அவர் தெரிவிக்க விரும்பும் செய்தி என்ன? மருதையன், நாதன் ஆகிய இரு தோழர்கள் அமைப்பிற்குள் நிலவும் சிக்கல்கள் குறித்து முன்வைத்திருப்பது சரியா? தவறா? அவர்களின் கடிதத்தை ஆசிரியர் குழு வெளியிட்டது சரியா? தவறா? தார்மீக பொறுப்பேற்று ஆசிரியர்குழு தோழர்கள் விலகியது சரியா? தவறா? இவையெல்லாம் உங்களது அமைப்பின் தனிப்பட்ட விவகாரங்கள். வினவுதளம் வழியே பொதுவெளிக்கு வருவது உவப்பல்ல. உழைக்கும் மக்களின் இணையக்குரல் என தன்னை அறிவித்துக்கொள்ளும் வினவுதளம் சில தனிப்பட்ட நபர்களின் தனிக்குரலாக ஒலிக்கத்தொடங்கிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    • என்ன பேசுரீங்க. ஆசிரியர் குழு விலகிட்டாங்க எனில் இதற்கு அவர்கள் எப்படி பதில் சொல்ல முடியும். ஆனா இங்க பொறுப்பாசிரியர் மூலம் இயங்குவதாக சொல்லி இருக்காங்களே. அப்புறம் என்ன? புதுசா ஒரு ஆசிரியர் குழு வந்தா அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்கிறேன். ஆனா இந்த பதிவில் அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே? வினவு என்பது இனி ஒரு புதிய ஆசிரியர் குழு மூலமாக இயங்குமா இல்லை ஒரு தனிப்பட்ட பொறுப்பாசிரியர் மூலமாக இயங்குமா?

  13. வினவு தளம் ஒப்படைக்கப்பட்ட பின்பும் அதை செயல்படுத்துவதற்கு இத்தனை காலம் ஆனது ஏன்?

    வினவு தளத்தை ஒரு மாதகாலம் முடக்கி வைத்தது யார்?

  14. வினவு தளம் தொடர்ந்து செயல்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது குறித்து மகிழ்ச்சி. இப்பவாவது தொடர்ந்து செயல்படுமா இல்லை. மறுபடியு யாரவது முட்டுக்கட்ட போட்டு கிடப்புல பொடுவீங்களா? இப்படி எனக்கு சொல்வதற்கு வருத்தமாக தான் இருக்கு. ஆனால் நான் தொடர்ச்சியாக வினவிற்கு மாதந்தோறும் நன்கொடை அளித்து வருகிறேன். வினவு தொடர்ந்து செயல்பட்டு சமூக பணி ஆற்ற வேணும் என்ற ஆற்றாமையில் தான் இப்படி சொல்கிறேன். உங்க பிரச்சினைகளை எல்லாம் ஒரு மீட்டிங்க போட்டு பேசி முடிச்சிட்டு வாங்க. ஏற்கனவெ ஒரு ஆசிரியர் குழு விலகிட்டாங்கனு சொன்னாங்க. இங்க பொறுப்பாசிரியர்னு சொல்ராங்க. அப்போ புதிய ஆசிரியர் குழு இல்லாம தான் வினவு செயல்படுமா?

  15. மீண்டும் செயல்பட துவங்கியதற்கு மகிழ்ச்சி!

    பிரச்சினைகளிலிருந்து மீண்டு புரட்சிகர புத்துணர்வோடு செயல்பட வேண்டுமென்பதே அனைவரது அவா.

    ஆனால், வெறும் வாய்க்கு மெல்ல அவல் கிடத்தது போலவும், வருவோர் போவோரெல்லாம் சேறடிப்பது போலவும் இருக்கக் கூடிய சூழல் ஆத்திரத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

    • சில மறுமொழிகள் புத்துணர்வூட்டுவதாக இல்லை. மாறாக அயர்சியை ஏற்படுத்துகிறது.

  16. வினவு ஒரு மாதம் கழிச்சி… மீண்டும் இயங்குவதில் மகிழ்ச்சி…

    இனி பிரச்சினை இல்லாமல் இருந்தால்… மிக மகிழ்ச்சி…

  17. ஹிட்லர் காலத்தில் முற்போக்கு பத்திரிகைகள் மிரட்டப்பட்டு , முடக்கப்பட்ட நிலை இருந்தது. அதே நிலை வினவுக்கும் வந்துவிட்டதா என்று விரக்தி அடைந்தேன். அரசியல் சமூகப் பொருளாதார நீதியை நிலை நாட்டத் தொடரும் நற்பணிக்கு வாழ்த்துக்கள்.

  18. உலகமே பரபரப்பான …வைரஸ் பயத்தில் ஆழ்ந்திருக்கிற நேரத்தில் தக்க சமயத்தில் மீண்டும் இயங்கத் தாெடங்கியதற்கு வாழ்த்துக்கள் …!

  19. What happened to my subscription amount of rs1000 made on 14/02/20 to Thiru. Kanaaiyan thro pay u money?

  20. ‘ “விடைபெறுகிறோம் வினவு ஆசிரியர் குழு’’ என தமது விலகல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக அவர்களை அணுகி பிரச்சினையை தீர்க்க முயற்சித்து வருகிறோம்.’

    — வெட்கக்கேடு. ‘ஓடுகாலி’ என்கிற சொல்லின் பொருள் இப்போது பொருந்தவில்லையா?! பேசித் தீர்த்து ஒரு வகையான இணக்கத்துக்கு வந்தால் அது ‘சந்தர்ப்பவாத’த்தில் தான் முடியும்.

    — இதை விலகிய அனைவருக்கும் பொருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    விமர்சனமும் சுயவிமர்சனமும் செய்து தவறுகளை சரி செய்து கொண்டு மக்களுக்கும் புரட்சிக்கும் உண்மையாக இருந்து களத்தில் இனி வரும் காலங்களில் நம்மை நிரூபிப்பது ஒன்று தான், நாம் மக்களிடம் சென்று ‘நாங்கள் புரட்சி செய்கிறோம்; எங்கள் பின்னால் திரளுங்கள்’ என்று மக்களை நம்மை நம்பச் சொல்வதற்கு ஒரே வழி. மேலும் அது தான் அமைப்புக்காகவும் அமைப்பினாலும் உயிரிழந்த, வாழ்க்கையை இழந்த தோழர்களுக்கு நாம் செய்யும் மரியாதை.

    பிளவுக்குப் பின், நம்மை நம்பியிருப்போருக்கு, நம்மைப் பின்பற்றுவோருக்கு, நம்மை எதிர் பார்த்திருப்போருக்கு இவ்வளவு காலமும் எந்த பதிலும் எந்தத் தகவலும் தராமல் திடீரென்று ஒரு நாள் வந்து ‘நாங்கள் மீண்டும் வந்து விட்டோம்’ என்று அறிவிப்பது கேள்விக்கு அப்பாற்பட்ட உயர் அதிகாரிகளின்/நீதிபதிகளின் மனநிலையையே காட்டுகிறது. அரசியல் முரண்பாடோ அல்லது தனிநபர் நலன் சார்ந்த முரண்பாடோ, எதுவாயினும் மக்களுக்கு அறிவிப்பது ஒரு புரட்சிகரக் கட்சியின் கடமையாகும்.

    கட்சிதான் ஒரு விரிந்த அரசியல் பார்வையைக் கொடுத்தது. அந்த மதிப்பு எப்போதும் உண்டு.

    கட்சியை மறு உருவாக்கம் செய்து புது இரத்தம் பாய்ச்சி புத்துணர்வூட்ட வேண்டும். ஒரு புரட்சிகரக் கட்சியையே மக்கள் எதிர் பார்க்கின்றனர்; அதுவே அவர்களுக்கான நம்பிக்கை.

    இப்படி எழுத நேர்ந்தமைக்காக வருந்துகிறேன். நம்பிக்கையுடன்….

  21. திரும்ப வந்ததில் மகிழ்ச்சிங்க
    உங்களுக்குள் என்ன சண்டைனு சரியா தெரியவில்லை
    அதற்குள் மூக்கை நுழைக்கவும் விரும்பவில்லை
    ஆனால் வீட்டிலுள்ள உறவினரை தொலைத்தது போல இருந்தது.
    2008 ல் ஆரம்பத்திலிருந்து இதன் வாசகன் நான்.

  22. புத்தம் புதிய திரைப்படம் : கந்து வட்டி காம்ரேடு

    ஹன்சி குரோனியே மற்றும் ஐரோம் ஷர்மிளா புகழ் மருதையன் இயக்கத்தில், காளான்மேக அண்ணாச்சியின் திரைக்கதை வசனத்தில் கந்து வட்டி காம்ரேடு டீசர் வெகுவிரைவில் வெளியாக உள்ளது.

    டைரக்சன் – காளியப்பன்
    சண்டைப்பயிற்சி – சல சல குமாரு
    நடனம் – கொக்கி குமாரு
    வில்லன் – மா.அ.க
    கௌரவ வேடம் – பஞ்ச பாண்டவர் அணி
    தகவல் தொடர்பு – ஆசிரியர் குழு

    பாடல் 1 : நம்பினார் கெடுவர்
    பாடல் 2 : காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம்
    பாடல் 3 : ஊரத்தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்
    பாடல் 4 : என் கட்சி தான் எனக்கு மட்டும் தான்

    இன்னும் பல சிறப்புகளுடன் வினவை வாசித்த பாவிகளுக்காகவும் கட்சிக்கு உழைத்து விசுவாசமாய் இருக்கும் தொண்டர்களுக்காகவும் விரைவில் வெளிவர உள்ளது

  23. “அணுகி பிரச்சினையை தீர்க்க முயற்சித்து” வரவது தொடர்பில்….
    முதலில் வினவு எந்த அமைப்பினதும் உத்தியோகபூர்வ பத்திரிகையாக இருக்கவில்லை. ஒருசிலர் தமது சொந்த முயற்சியில் சொந்தப்பணத்தில் ஆரம்பித்ததே அது. காலப்போக்கில் (ஏற்கனவே அவர்கள் ஒரு அமைப்பில் இருந்த காரணத்தாலும் வினவு பத்திரிகை அந்த அமைப்பின் கருத்துகளை பிரதிபலித்த காரணத்தாலும்) அது அந்த அமைப்பின் பத்திரிகை போல செயற்பட்டது.
    அவர்கள் தமது அமைப்பின் தொடர்பு காரணமாக மருதையனின் விலகல் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டனர். அதனை அவர்கள் வெளியிட்டிருக்கக் கூடாது என்று கட்சி சொல்லக்கூடும். (கட்சி இரகசியங்களை வெளியிடுதல்.) ஒரு பத்திரிகையாளனாக அதனை வெளியிடுவது சரி என்றும் சிலர் (நான்) சொல்லக்கூடும். (அவரது விலகல் ஒன்றும் இராணுவ இரகசியமல்லவே மறைத்து வைக்க. அதன் உண்மைகள் மக்கள் முன் வர வேண்டும்.) எனவே அது விவாதத்திற்கு உரியது.
    அவர்கள் நினைத்திருந்தால் தொடர்ந்தும் வினவு பத்திரிகையை நடத்தி மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது சேறு பூசியிருக்கலாம். மாறாக அவர்கள் மக்கள் நலன் கருதி இந்தத் தளத்தை முழுமையாக ஒப்படைத்தார்கள்.
    மருதையன் அவர்களும் வினவு அமைப்பின் முன்னைய ஆசிரியர் குழுவும் ம.அ. மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். (தனிப்பட்ட தாக்குதல், ஜாதி முலாம் பூசுதல் உட்பட) அவை குறித்தும் அமைப்பு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

    இது மக்கள் அமைப்பாயின் இந்தப்பிரச்சினையை மக்கள் நடுவில் பகிரங்கமாக விவாதியுங்கள். இருதரப்பும் தமது குற்றச்சாட்டுகளையும் சுயவிமர்சனங்களையும் முன்வைக்கட்டும். இருட்டுக்குள் என்ன பேரம் பேசுதலும் கட்டப்பஞ்சாயத்தும் வேண்டியிருக்கிறது.
    மக்கள் விரோத முதலாளித்துவ அமைப்புகளில் இரகசிய பேரங்கள் சகஜம். இதுவே மக்கள் அமைப்புகளில் நடைபெறுமானால் அதுவே அந்த அமைப்புகளின் வீழ்ச்சியின் படிகளாக அமையும்.

Comments are closed.