பத்திரிக்கைச் செய்தி

19.05.2020

  • கரூர் எம்பி ஜோதிமணியை இழிவாக பேசிய பாஜக கரு.நாகராஜனின் காலித்தனத்தை கண்டிக்கிறோம்!
  • நியுஸ் 7 தொலைக்காட்சியே மன்னிப்பு கேள்!
  • ஆர்.எஸ்.எஸ் சங்கிகளை புறக்கணிப்போம்!

10.05.2020 அன்று நியூஸ்7 தொலைக்காட்சியில் விவாதத்தின் போது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணி அவர்களை ஆபாசமாகவும் இழிவாகவும் பிஜேபியை சேர்ந்த கரு.நாகராஜன் என்பவர் பேசியுள்ளார் .

கரு. நாகராஜனுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி எச்.ராஜா தன் புத்தியை காட்டியிருக்கிறார்.

ஜோதிமணிக்கு ஆதரவாக இருப்பதாக பலரும் #I_standwith_Jothimani என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியுள்ளனர். ஜோதி மணியும், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியும் இதுபோன்ற பிஜேபியினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள் .

பாஜக கரு நாகராஜன்

கரு. நாகராஜன், எச்.ராஜா போன்ற பிஜேபி மற்றும் அதிமுகவினர் விவாதத்தின்போது கேட்கும் கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்வதற்கு வக்கில்லாத போதெல்லாம் எதிர்த்தரப்பில் இருப்பவர்களை ஆபாசமாக பேசுவதும் இழிவாக நடத்துவதும் உலகம் அறிந்த உண்மை தான். இதை தொலைக்காட்சி நிர்வாகங்கள் அனுமதித்ததும் உலகறிந்த உண்மை தான்.

இப்படி நடைபெற்ற போதெல்லாம் கரு.நாகராஜன் போன்ற நபர்கள் தொலைக்காட்சி நிர்வாகத்தால் வெளியேற்றப்படவில்லை, தண்டிக்கப்படவும் இல்லை.
அதன் தொடர்ச்சியாகவே இப்பொழுது எல்லை மீறி பேசியிருக்கிறார்.

கரு. நாகராஜன் போன்ற பிஜேபி நபர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்பது உலகம் அறிந்தது தான். அதுவல்ல பிரச்சனை. இப்பிரச்சனைக்கு பின்னரும் கரு. நாகராஜனை விவாதத்தில் தொடர்ந்து பங்கேற்க வைத்து இருக்கிறது நியூஸ்7 தொலைக்காட்சி.

படிக்க:
♦ நகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத்
♦ ஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !

இந்த மோசமான செயலுக்காக நியூஸ்7 தொலைக்காட்சி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.

ஏற்கனவே தோழர் திருமுருகன் காந்தியை மிகவும் இழிவாகப் பேசிய கரு. நாகராஜன் விவாதத்தில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டார்.

தமிழக மக்களிடம் கொஞ்சமும் செல்வாக்கு இல்லாத பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பினர், மத்திய அரசதிகாரத்தினை காட்டி தொலைக்காட்சி நிர்வாகங்களை மிரட்டி விவாதங்களில் தங்களது வலதுசாரி நிபுணர்களுடன் பங்கேற்பதும், தமிழகத்தில் மக்கள் குரலை ஓங்கி ஒலிக்கும் மக்கள் அதிகாரம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மே.17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளை அழைத்தால் நாங்கள் வர மாட்டோம் என மிரட்டுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலின் மிரட்டலுக்கு இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் பணிந்து போகலாம். தமிழக மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

சக மனிதர்களை இழிவாக நடத்தக்கூடிய இதுபோன்ற ஆர்எஸ்எஸ் பிஜேபி நபர்களை அனுமதிக்க மாட்டோம் என்று தொலைக்காட்சி நிர்வாகங்கள் உறுதியளிக்கும் வரை விவாதங்களில் பங்கேற்க கூடாது என்ற முடிவை தமிழக அரசியல் கட்சிகள் எடுக்க வேண்டும்.

மேலும் ஜோதிமணி அவர்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசிய கரு.நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தங்கள்
மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு மற்றும் புதுவை
தொடர்புக்கு : 99623 66321

3 மறுமொழிகள்

  1. பிரதமரை கல்லால் அடிப்போம் என்று சொல்வது மட்டும் உங்களுக்கு கருத்து சுதந்திரமா?

  2. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பத்தையும் பிஞ்சு குழந்தைகளையும் பசியோடு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடக்கவிட்டு கொன்ற கல்நெஞ்சன் மோடியை “பிஞ்ச செருப்பால” அடிக்கனும்னு ஒருத்தர் பதிவு போட்டிருந்தாராம். அது எனது செருப்புக்கு இழுக்குன்னு செருப்பு தயாரிப்பாளர் ஆட்சேபம் தெரிவிக்கவே பதிவை நீக்கிட்டாராம்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க