தீர்ப்புக்கு பிறகும் பிஜேபி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு !
உயர்நீதிமன்றத்தில் இன்று (18.08.2020) வந்த தீர்ப்பு…. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இலட்சக்கணக்கில் கலந்துகொண்ட மக்களுக்கும், உயிர்நீத்த போராளிகளுக்கும் கிடைத்த வெற்றி !
தீர்ப்பு வந்த பிறகும் பிஜேபி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு.
ஸ்டெர்லைட்டை உடனடியாக தூத்துக்குடி சிப்காட்டிலிருந்து அகற்றவேண்டும்.
ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் !
நாமும் நமது போராட்டத்தை
இறுதிவரை தொடர்வோம் !
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.
***
ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்கிறோம்! – ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை பிரித்து அகற்ற வேண்டும்! ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தூத்துக்குடி மக்கள் வரவேற்கிறோம். இதற்காக உழைத்த அனைத்து பொதுமக்களுக்கும், கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், இயக்கங்களுக்கும் தூத்துக்குடி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக அரசு இந்த தீர்ப்பினை பயன்படுத்தி தூத்துக்குடி மக்களின் கீழ்க்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
- ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இருந்து பிரித்து அகற்ற வேண்டும்.
- ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களை துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
- பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.
- மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்யக்கூடாது.
- உயிர் தியாகம் செய்த 15 தியாகிகளுக்கு தூத்துக்குடி மையப்பகுதியில் நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும்.
தகவல் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.
9443584049, 7811940678,
8122275718, 7305172352,
9787195783, 9952763686,
9965345695, 9894574817.
***
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போரில் முன்னணியில் நின்று போராடி, கொல்லப்பட்ட தியாகிகளுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு சமர்ப்பணம்!!
1. ஸ்நோலின்
2. கிளாஸ்டன்
3. தமிழரசன்
4. ரஞ்சித்
5. ஜான்சி
6. கார்த்திக்
7. அந்தோணி செல்வராஜ்
8. கந்தையா
9. ஜெயராமன்
10. மணிராஜ்
11. காளியப்பன்
12. சண்முகம்
13. செல்வசேகர்
14. பரத்ராஜ்
15. ஜஸ்டின்
ஸ்டெர்லைட் உச்சநீதி மன்றம் சென்றாலும், இறுதிவரை போராடுவோம்.
– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.
***
ஸ்டெர்லைட் வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு!
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையானது மேல்முறையீடு செய்ய இருப்பதால், அதற்கு முன்னர் நமது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் கெ. அரி ராகவன் பெயரில் இன்று (19.08.2020) காலை 10.30 மணிக்கு கேவியட் மனு தாக்கல் செய்யப்படுகிறது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
இதன் மூலம் நமது தரப்பு வாதத்தை கேட்காமல் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.
***
ஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி!
சென்னை உயர்நீதி மன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார்கள்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.
***
இன்றைய தீர்ப்பு வரை அனைத்து நிலைகளிலும் எங்களுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு மடத்தூரில் உருவாகியது முதல்…
தொடர் போராட்டங்கள், கூட்டங்கள், ஊர்வலம், பொதுக்கூட்டம், மே 22 மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை, மறு பிரேதப் பரிசோதனை வழக்கு, சட்ட உதவி வழக்கு, தலைமறைவு வாழ்க்கை, சென்னை ஏர்போர்ட்டில் கைது, பாளையங்கோட்டை சிறை, வீடு, அலுவலகம் ரெய்டு, 273 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றியது, தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம், 100-க்கும் மேலான வழக்குகளை உடைத்தது, பசுமைத் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம், இன்றுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் நுழைய நீடிக்கும் தடை, இன்றைய தீர்ப்பு என அனைத்து நிலைகளிலும் எங்களுடன் பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!
வாஞ்சிநாதன்,
வழக்கறிஞர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் இன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் உபகார தீர்ப்பு…விடாகண்டன் கொடாகண்டனாக களப்பணி ஆற்றிவரும் பி.ஆர்.பி.சி/மக்கள் அதிகாரம் தோழமைக்கு சற்று ஆறுதல் அளிக்கும் தீர்ப்பு… போராட்டத்திற்கான வெற்றியை தீர்மானிக்க இருப்பது உச்சநீதிமன்றத்தின் வசமுள்ள மேல்முறையீடுக்கான உத்தரவே, இந்த தமிழக அரசு உன்மையிலேயே இம்மாநிலத்தில் வாழும் மக்களுக்கான அரசாக இருந்தால், அந்நிறுவனத்தின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யவேண்டி இவர்கள் இயற்றிய சட்ட மன்ற தீர்மானம் அதர்க்கான அரசு ஆணை எனும் மாநில உரிமைக்கான அரசியல் சட்டம் மாண்புகளை அழுத்தத்துடன் பதிவு செய்து (under crpc 309(1)/(2) with initiating the state rights in Indian constitutions and whatsoever possibilities through law practice of full efforts) முக்கியத்துவம் கருதி தொடர் விவாதங்கள் மேற்க்கொண்டு சாதகமான தீர்ப்பாணை பெற வேண்டும், அதைவிட்டு ஒத்திவைப்பு வாய்தா நாடகங்கள் நடத்துமானால், எப்படி முல்லை பெரியாறு அணை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேர்ள் அரசு மதிக்கவில்லையோ, எப்படி காவிரி நதி நீர் வழக்கில் கர்நாடக அரசு மதிக்கவில்லையோ, எப்படி உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு மதிப்பதில்லையோ, இது போன்ற எண்ணற்ற உதாரணங்களை மேற்கோளிட்டு, மாநில அரசுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நிலைநாட்டும் வண்ணமாக ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்தி மக்களுக்கான கோரிக்கைகள் நிறைவேறினால்…!!! நம்மவர்கள் மானத்தை காப்பாற்றினர் என வெற்றி விழாவே எடுத்து ஊர்வலம் வரலாம்… எப்படி ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடையில் ஏற்றி வெற்றி விழா மாநாடு
சிதம்பரத்தில் நடத்தினமோ,அதர்க்கும் ஒரு படி மேலே சென்று தமிழகம் முழுவதும் மக்களுக்கான வெற்றி விழாவாகக் கொண்டாடுவோம்…!!!