Tuesday, July 14, 2020
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
79 பதிவுகள் 0 மறுமொழிகள்

சாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

சாத்தான்குளம் படுகொலையைக் கண்டித்தும், போலீசு அராஜக நடவடிக்கையைக் கண்டித்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வழக்கறிஞர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அச்செய்திகளின் தொகுப்பு...

சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் !

சாத்தான்குளம் இரட்டை படுகொலையில் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டின் பொறுப்பற்ற, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையும் பொது மக்களின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.

சாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

குற்றம்சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதே சரி! எனவே சாத்தான்குளம் நீதித்துறை நடுவர், மருத்துவர், கோவில்பட்டி துணை ஜெயிலர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை அவசியமானது.

சாத்தான்குளம் : மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யாதது ஏன்? கைது செய்யாமல் தடுப்பது யார்? - எங்கே சட்டத்தின் ஆட்சி? – எங்கே நீதி? எனக்கோரி மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை இலவசமாக்கு ! PRPC மனு நீதிமன்றத்தில் விசாரணை !

மார்ச் 27 ம் தேதியிலிருந்து இன்று வரை இவ்வழக்கில் 5 உத்திரவுகளை நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனினும் அரசு தரப்பு போதிய நடவடிக்கைகளை எடுக்காது காலம் தாழ்த்துகிறது.

சென்னை மக்கள் உதவிக் குழு : 50 நாட்களைக் கடந்து தொடரும் நிவாரணப் பணிகள் !

08.04.2020 அன்று தொடங்கி இன்று வரை சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உதவி வழங்கி மக்களின் துன்பத்தில் பங்கெடுத்துள்ளோம்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை இலவசமாக்கு ! நீதிமன்றத்தில் PRPC மனு !

கடந்த 09.04.2020 அன்றே இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதிலும் கடந்த 2 மாத காலமாக எவ்வித பதில்மனுவும் தாக்கல் செய்யாமல் அரசு இழுத்தடித்து வந்தது.

கொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு !

வடசென்னை மக்கள் உதவிக்குழு சார்பாக இதுவரை 700 குடும்பங்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய் என தேவையான மளிகை தொகுப்புகளை; நிவாரண உதவிகளை செய்து வருகிறோம்.

கன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி !

காசி உள்ளிட்ட அயோக்கியர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் வழக்கு கட்டணம் வாங்காமல் அனைத்து விதத்திலும் சட்ட உதவி செய்ய தயாராக இருக்கின்றோம்.

ரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா ?

புழுத்த அரிசியை அள்ளிக் காட்டிய பெண்கள் “இந்த அரிசியை நீங்களும் உங்கள் அதிகாரிகளின் குடும்பத்தினரும் பொங்கிச் சாப்பிடுவீர்களா?” என்று கேட்டனர்.

மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !

பொதுமக்கள், எதிர்கட்சிகள், அமைப்புகளின் களப்போராட்டம் தான் இன்று நீதிமன்ற தீர்ப்பை மாற்றி இந்த வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. பொறுக்க முடியாமல் மேல்முறையீடு செய்கிறது குடி கெடுக்கும் அரசு.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பங்கேற்ற வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம் !

வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்! நிகழ்வில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டதன் புகைப்படங்கள். பாருங்கள்... பகிருங்கள்...

கொரோனா ஊரடங்கு : மக்களுக்கான நிவாரண உதவிகளில் கரம் சேருங்கள் !

இரக்கம் உள்ள மனிதர்களும், உதவி தேவைப்படும் மக்களும் எல்லா இடத்திலும் நிறைய இருக்கிறார்கள். இவர்களை இணைக்கும் பணிகளில் நமது சென்னை மக்கள் உதவிக்குழு பாலமாக இருக்கிறது.

கொரோனா நிவாரணப் பணிகளில் மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் !

“அரசு கைவிடும் இடத்தில் மக்களுக்கு கை கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்...” என்ற அடிப்படையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

கொரோனா கால துயர் துடைப்பில் திருவண்ணாமலை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் !

நகரின் மிக அருகில் வசிக்கும் மக்களுக்குக்கூட மாவட்ட நிர்வாகம் உதவ முன்வராத போது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் முன்முயற்சி எடுத்துள்ளது. மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது.