“வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நடவடிக்கையை கைவிடு!” என்ற முழக்கத்தை முன்வைத்து இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். அதே போல தமிழகத்திலும் பல இடங்களில் நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அவற்றின் தொகுப்பு இங்கே…
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கோவை வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
நெல்லை வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம்.
திருவண்ணாமலை வழக்கறிஞர்கள் போராட்டம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மதுரை வழக்கறிஞர்கள் போராட்டம்.
***
ஒடிசா மாநில வழக்கறிஞர்கள் போராட்டம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
பஞ்சாப் மற்றும் ஹரியாணா வழக்கறிஞர்கள் போராட்டம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 99623 66320
தான் குற்றவாளி என தெரிந்தே வக்காலத்து வாங்கும் வக்கீல் தொழில் முறையினர் இந்திய முழுவதும் ஒரே நாளில் ஒரு முகப்பட்ட போராட்டம் நடத்துகிறார்கள்…சட்டமே தெரியாது தனது உழைப்பே மூலதனமாக கொண்டு கடினமாக உழைக்கும் விவசாயி, தொழிலாளர் பாட்டாளி பொது மக்களுக்கு அப்படி போராட்டங்களை கட்டியமைக்க அமைப்புகளும் இல்லை!!!வழி நடத்தி செல்ல சரியான தலைமைகளும் இல்லை…!!!
சட்டம்: கடந்த 2005ந்தாம் ஆண்டின் அறிக்கையின்படி 33,400 க்கும் மேற்பட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்றும், மேலும் அவ்வப்போது சட்டமன்றத்தில் கொண்டு வரும் தீர்மானங்களும், அரசு ஆணைகள், உயர் நீதிமன்றத்தின்/உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் சட்டமாகிறது.ஆக தற்போது
2020 ஆண்டு வரை அறுதியிட்டு ஆராய்ச்சி செய்து எவ்வளவு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்று நமது வழக்கறிஞர்கள் தான் கூற வேண்டும், ஆனால் பொதுவாக அரசியல் சாசனம், உரிமையியல் விசாரணை முறைச் சட்டம்,குற்ற விசாரணை முறைச் சட்டம்,சாட்சிய சட்டம்,தன்டணை சட்டம் போன்ற அடிப்படை சட்டங்களை பின்பற்றினாலே அனைத்து வழக்குகளுக்கும் தீர்வு கண்டு விடலாம் என அறிஞர்கள் வரையறுத்து கூறுகின்றனர்…சட்டக் கல்லூரி மாணவர்களின் படிப்புக்கு அரசு வெளியிட்டுள்ள குற்றவியல் தத்துவம் என்ற தொகுப்பில்,தேக்கத்தில்/நிலுவையில் உள்ள 95% வழக்குகளுக்கு வழக்குரைஞர்களே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது,ஆக வெள்ளையர் ஆட்சியில் தலையை சுற்றி வர விடப்பட்ட சட்டங்கள், இந்த நவீன நானோ தொழில்நுட்ப ஆன்லைன் ஆன்ட்ராய்டு உலகிலும் வளம் வருமேயானால் எப்போது தீர்வு காணுவோம்… ???தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு விரைந்து தீர்ப்புகளை காண ம.உ.பா.மைய தலைமையே வேலை திட்டங்கள் வகுக்க வேண்டும்…!!! மற்றபடி தங்களின் முனைப்பான மக்கள் பணிக்கு செவ்வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள்…!!!
கூடுதல் விவரங்களுக்கு
https://tnprpc.blogspot.com/2020/08/blog-post_18.html?m=1