நாகர்கோவில் காசி, பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், திருமணம் ஆகாத இளம்பெண்கள், திருமணமான பெண்கள் என சுமார் 100 பெண்களை திட்டமிட்டு ஏமாற்றியதால் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர் புகார் தைரியமாக கொடுத்ததன் அடிப்படையில் இன்று காசியும் அவனது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காசியோடு இந்த அயோக்கியத்தனத்தில் இன்னும் பலருக்கு தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று இந்த அயோக்கியத்தனத்தில் காசியுடன் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

காசியுடன் இந்த அயோக்கியத்தனத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக புகார் அளிக்க வேண்டும், அவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தினர் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட அயோக்கியர்கள் அனைவரும் தண்டிக்கப்படவும், இதுபோன்ற அயோக்கியத்தனங்கள் மேலும் நடைபெறாமல் இருக்கவும் காசி உள்ளிட்ட அயோக்கியர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் வழக்கு கட்டணம் வாங்காமல் அனைத்து விதத்திலும் சட்ட உதவி செய்ய தயாராக இருக்கின்றோம்.

படிக்க:
விகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை !
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ! புதிய கலாச்சாரம் ஏப்ரல் மின்னிதழ்

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுடைய பெயர் முகவரி உள்ளிட்ட அடையாளங்கள் வெளியே தெரிய வேண்டாம் என்று கருதினால் அது குறித்த ரகசியம் காக்கப்படும்.

மேலும் இந்த வழக்கு விசாரணை முறையாக நடை பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் ஆரம்பம் முதல் இறுதிவரை இந்த வழக்கு விசாரணை நேர்மையான இயக்கங்கள், நேர்மையான வழக்கறிஞர்கள், நேர்மையான பத்திரிக்கையாளர்கள், உள்ளிட்ட பலராலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கோருகின்றோம்.

இவன்
க. சிவராஜ பூபதி, வழக்குரைஞர், நாகர்கோவில்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
தொடர்பு எண் – 9486643116.

8 மறுமொழிகள்

 1. அடுத்தவன் படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கலாமா ? எட்டிப்பார்க்கலாம் என்பதுதான் சீரழிந்த முதலாளிய ஊடககலாச்சாரம். தங்களை பெண்ணியத்தின் காவலர்களாக அடையாளப்படுத்திக்கொண்டு மீசைமுறுக்குவதும்( பாரதியின் கவிதை, பெரியாரின் அரசியல், எம்,ஜி,ஆரின் திரைப்படங்கள் இவையெல்லாம்கூட, இக்கழிசடைக் கலாச்சாரத்தின் நீட்ச்சிகளே) காசிபோன்றவர்களைச்சாடுவதும், பாதிக்கபட்டதாகச்சொல்லப்படுகிற பெண்களுக்கு குற்ற நிகழ்களில்பங்களிப்பே இல்லை என்பதாக வாதிடுவதும் , பாலியல் உறவுச்சிக்கலில் ஆண்களும் விபச்சார வழக்குகளில் பெண்களும் பலியாக்கப்படுவதும்கூட,இப்பண்பாட்டுச்சீரழிவின் வெளிப்பாடுகளே .

 2. வரி எண்,6 குற்றநிகழ்களில் என்றிருப்பதை, குற்றநிகழ்வுகளில் என்பதாகத்திருத்தி வாசிக்கவும், பிழைநேர்ந்தமைக்காகப்பெரிதும் வருந்துகிறேன்,

 3. வீரபாண்டியன் T.ராஜேந்தர் ரசிகர் போலிருக்கு. ஊசி ஒத்துழைக்காமல் நூல் உள்ளே நுழைய முடியுமா என்கிற பெரும் தத்துவத்தின் அடிப்படையில் குற்றத்தை சமத்துவமாக பகிர்ந்தளிக்க விளைகிறார். அதனால்தான் எழுத்துப்பிழைக்குக்கூட “பெரிதும் வருந்து”கிறார் போலிருக்கிறது. பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருந்திருந்தால் இவருக்கு இந்த சங்கடம் நேர்ந்திருக்காது. பெண்கள் அடிப்படையில் விபச்சாரத்தை தூண்டுபவர்களாதலால் மனு சாத்திரம் பால்ய விவாகத்தை பரிந்துரைக்கிறது. பெண்கள் வேலைக்கு போவதைக்கூட தவிர்க்க வேண்டும் என்று மூத்த சங்கராச்சாரி வாந்தி எடுத்திருக்கிறார். என்ன செய்வது இந்துத்துவம் கோலோச்சும் நிலையிலும் பெண்கள் கவர்னர்களாகவும் நிதியமைச்சர்களாகவும் ஆவதை தவிர்க்க முடியவில்லை. கலி முத்திடுத்து..!

 4. எஸ்,எஸ்,கார்த்திகேயனுக்கு வணக்கம், கலிமுத்தவுமில்லை, நான் டி,ராசேந்தரின் சுவைஞனுமில்லை, நீங்கள் எனக்கு என்ன சொல்ல விழைகின்றீர்கள் என்பதும் எனக்குத் தெளிவாகப்புரியவில்லை, உங்கள் குழப்பம் தீர்க்கும் ஒளடதம் ஏதும் என்னிடமில்லை,
  (1) கம்யுனிஸ்ட் கட்சியின் அறிக்கை( மார்க்ஸ் ஏங்கல்ஸ்) ( 2) குடும்பம் தனிச்சொத்து அரசுஆகியனவற்றின்தோற்றம் ( ஏங்கல்ஸ்) ( 3)பெதுவுடைமை என்றால் என்ன (ராகுல சாம்கிருத்தியாயன்) இம்மூன்று நுால்களையும் படித்துத்தெளிவடையுங்கள், நன்றி,

 5. வணக்கம் வீரபாண்டியன்,
  நான் படிப்பது இருக்கட்டும். இத்தனை முற்போக்கு நூல்கள் படித்த நீங்கள் பாலியல் குற்ற நிகழ்வுகளில் பெண்களையும் குற்றவாளிகளாக ஆக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். கலாச்சார சீரழிவுக்கு பலியாகிற பெண்களை குற்றவாளிகள் ஆக்குவதும், மதுக்கடைகளை மூட போராடும் பெண்களை இழிவு படுத்துவதும், தந்தை பெரியாரை பொம்பளை பொறுக்கி எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவதுமான உங்களின் முற்போக்கு எங்களை டரியல் ஆக்குகிறது.

 6. வணக்கம் கார்த்திகேயன்,1)பெரியார் உங்களுக்குத்தந்தையாக இருக்கலாம்,எனக்கு என் அப்பா தான் தந்தை,மன்னிக்கவும்உங்களு்க்காகநான்அப்பாவைமாற்றிக் கொள்ளமுடியாது, 2) பொம்பளை பொறுக்கிகள் மட்டுமல்ல, ஆம்பளைப்பொறுக்கிகளும் குமுகத்தில் இருக்கிறார்கள் என்பதை உங்களால் மறுக்கமுடியாது, 3) என்தாயையும் தங்கைகளையும்
  குற்றவாளிகளாக்குவதோ,இவர்களின் போராட்டங்களைக்கொச்சைப்படுத்துவதோ
  என்நோக்கமல்ல, குமுகப்பெருந்தொற்றாய்ப்பரவிவரும் பண்பாட்டுச்சீரழிவிற்கு இருபாலினருமே பொறுப்பேற்றுக்கொள்ளவெண்டும்என்பதுதான் என்தாழ்மையான கருத்து,(டரியல் துரை இங்கிலீசெல்லாம் பேசுது)

 7. //பெரியார் உங்களுக்குத்தந்தையாக இருக்கலாம்,எனக்கு என் அப்பா தான் தந்தை,//
  கொச்சையான பதில்..!
  சீமானோட தம்பியா இருப்பாரு போலிருக்கு…!
  “தம்பி”க்கும் விளக்கம் கொடுக்க முனைஞ்சுறாதீங்க..

 8. கார்த்திகேயன் நீங்கள் சைமனைக்கண்டு மிகவும் மிரண்டுபோய் இருப்பதாக உணர்கிறேன்,
  காமாலைக்கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்நிறம்,
  நம்புங்கள் எனக்கும், ஓட்டுப்பொறுக்கி சைமனுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ யாதொரு தொடர்பும் இல்லை,

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க