சாத்தான்குளம் படுகொலை : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
காவல் கொட்டடி கொலைகளை காவல்துறையே விசாரிப்பதா?
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 06.07.2020
நேரம் : காலை 11 மணி
இடம் : சென்னை உயர்நீதிமன்றம், ஆவின் பாலகம் வாயில்.
  • பிரகாஷ்சிங் வழக்கில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி குற்றமிழைத்த போலீசாரை விசாரிக்க தனி அமைப்பை உருவாக்கப் போராடுவோம்!
  • ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை 6 மாதத்திற்குள் விரைந்து நடத்தி, குற்றவாளிகளுக்கு   தண்டனை கிடைக்க போராடுவோம்!

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தமிழக அரசே!
★ காவல் நிலையத்தின்  நீதித்துறை  நடுவர்  விசாரணையில் அத்துமீறி, இடையூறு செய்த ADSP குமார்,  DSP பிரதாபன் மீது  இ.த.ச.பிரிவுகள் 143, 353, 506(ii)ன் கீழ் குற்ற  வழக்கு  பதிவு  செய்!
★ நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ADSP குமார், DSP பிரதாபனை பாதுகாக்காதே, துறை ரீதியான நடவடிக்கை எடு!
★ பேரிடர் மேலாண்மைச்  சட்டத்தை காற்றில் பறக்கவிட்டு போலீசு ராஜ்ஜியத்தை கட்டவிழ்த்து விட்ட சாத்தான்குளம் படுகொலையின் முதன்மைக் குற்றவாளி
 ‘தெர்மாகோல்’ கலெக்டர் சந்தீப் நந்தூரியின் மீது குற்ற / துறை ரீதியான நடவடிக்கை எடு!
★ மதவெறி RSS சேவாபாரதி ‘குண்டர்களை’ காவல் நண்பர்கள் குழுவில் சேர்த்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு! சட்டவிரோத ‘காவல் நண்பர்கள்’ அடியாள் படையை கலைத்திடு!
★ காவல்துறைக்கு உடந்தையாக பொய்யாக  மருத்துவச்  சான்றளித்த அரசு மருத்துவர் வெண்ணிலா மற்றும் கோயில்பட்டி கிளைச்சிறை ஜெயிலர் ஆகியோர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடு!
★ உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும், உயர்நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் ‘ரிமாண்டுக்கு’  உத்தரவிட்ட சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் சரவணன் மீது   துறைரீதியான நடவடிக்கை எடு!
வழக்கறிஞர்களே!!
★ மூத்த வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட  மக்கள் பிரதிநிதிகள் கொண்ட தமிழகம் தழுவிய ‘பாதுகாப்பு அமைப்புகளை’ உருவாக்குவோம்!!
★ காவல்துறையின் காட்டு தர்பாருக்கு முடிவு கட்டுவோம்!
இவண் :
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்.
தொடர்புக்கு :
9841399900, 9994555016, 9444141925, 9842812062.

***

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

சாத்தான்குளம் இரட்டைக்கொலை : விசாரிக்கச் சென்ற நீதிபதியை மிரட்டிய காவல்துறையை கண்டித்தும், குற்றவாளிகளை கொலை வழக்கில் கைது செய்ய கோரியும்; தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு கடந்த 30-06-2020 அன்று  மதியம் 12.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

***

கோவை வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் !

சாத்தான்குளம் : ஜெயராஜ்-பென்னிக்ஸ் இரட்டை படுகொலையை கண்டித்து கோவை வழக்குரைஞர்கள், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வாயில் முன் கடந்த 29/06/2020 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

***

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டம்!

சாத்தான்குளம் காவல் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை செய்த நீதித்துறை நடுவர் திரு. பாரதிதாசனை அவதூறாக பேசி விசாரணைக்கு இடையூறாக இருந்து மிரட்டி காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்து கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டம்!

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

தேனி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

சாத்தான்குளம் காவல் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை செய்த நீதித்துறை நடுவர் திரு. பாரதிதாசனை அவதூறாக பேசிய போலீசை கைது செய்!

விசாரணைக்கு இடையூறாக இருந்து மிரட்டி காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்து, தேனி வழக்கறிஞர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டம்!

***

சாத்தான்குளம் படுகொலைகள் : திருநெல்வேலி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

சாத்தான்குளம் படுகொலைகள் தொடர்புடைய காவல் துறையினரைக் கண்டித்து திருநெல்வேலி நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், தந்தை – மகனை கொலை செய்த போலீசாரை டிஸ்மிஸ் செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்! சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்! என வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

சாத்தான்குளம் : திண்டுக்கல் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம்!

சாத்தான்குளம் இரட்டை படுகொலையை கண்டித்தும் , சாத்தான்குளம் படுகொலை வழக்கை உயர்நீதிமன்ற உத்திரவுபடி விசாரிக்க சென்ற நீதித்துறை நடுவர் அவர்களை “உன்னால் ஒன்னும் புடுங்கமுடியாது டா” என பேசி நீதித்துறையை அசிங்கபடுத்திய காவலர் மகாராஜன்; அவ்வாறு பேச சொல்லி வேடிக்கை பார்த்த ADSP குமார் மற்றும் DSP பிரதாபன் ஆகியோரை பணிநீக்கம் செய்தும், கைது செய்து சிறையில் அடைக்கவும், வலியுறுத்தி திண்டுக்கல் வழக்குரைஞர் சங்கம் சார்பாக 01-07-2020 புதன் அன்று காலை 11-00 மணியளவில் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க