மத்தியப் பிரதேசம் : 6 வயது சிறுவனை கொன்ற போலீசு !

உணவிற்கான கையேந்திய ஆறு வயது சிறுவனை கழுத்தை நெறித்துக் கொன்ற மத்திய பிரதேச மாநிலத்தின் கொலைகார போலீசு ரவி ஷர்மா போன்ற அதிகாரிகளை இந்த சட்டம் தண்டிக்கப் போவதில்லை.

0
டந்த மே 11-ம் தேதியன்று மத்தியப் பிரதேச மாநிலம் தாடியா மாவட்டத்தில் ஆறு வயது சிறுவனைக் கொன்றுவிட்டு, அருகமை குவாலியர் மாவட்டத்தில் சிறுவனது உடலை வீசியதற்காக போலீசு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனை கொன்ற போலீசு அதிகாரி, ரவி ஷர்மா ஆவார். இவர் குவாலியரின் போலீஸ் பயிற்சிப் பள்ளியில் பணியமர்த்தப்பட்ட ஒரு தலைமைக் காவலர். கடந்த மே 4 அன்று தாடியா மாவட்டத்தில் பணியிலிருந்தபோது, ​ஒரு ​சிறுவன் போலீசு அதிகாரி ஷர்மாவிடம் உணவு வாங்க பணம் கேட்டுள்ளான். அதற்கு கோவமடைந்த அதிகாரி ஆறு வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
கொலை நடந்த ஒரு நாள் கழித்து, மே 5 அன்று ஆறு வயது சிறுவன் யாரோ ஒருவரால் கடத்தப்பட்டதாகவும், சிறுவனை காணவில்லை என்றும் அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.
விசாரணையின் போது, ​​சிறுவன் காணாமல் போன தாடியா மாவட்டத்தில் உள்ள பஞ்சசீல் நகர் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அந்த காட்சிகளில் சந்தேகத்திற்கு இடமான ஒரு நபரையும், அவரது காரையும் பார்த்ததாக கூறியது.
படிக்க :
உ.பி : 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீசு !
இருளர் மக்களை பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்யும் போலீசு!
தாடியா மாவட்ட எஸ்.பி ரத்தோர், ஷர்மா ஒரு ரத யாத்திரையின் போது தாடியா மாவட்டத்திற்கு பணிக்காக அனுப்பப்பட்டதாகவும், அவர் வாகனத்தில் மற்ற இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்களுடன் குவாலியருக்குத் திரும்பினார் என்றும் கூறினார்.
கொலை செய்த பிறகு, தன் கார் டிக்கியில் சிறுவனின் உடலைப் போட்டுக்கொண்டு அருகில் உள்ள மாவட்டமான குவாலியரில் சிறுவனின் உடலை வீசி எரிந்துள்ளார் கொலைவெறி பிடித்த போலீசு அதிகாரி ரவி ஷர்மா.
சிறுவனை கொலை செய்த போலீசு ஷர்மா கைது செய்யப்பட்டதாகவும், ஷர்மாவை உடனடியாக பணிநீக்கம் செய்யுமாறு மாநில போலீசுத்துறை தலைமையகத்திற்கு தான் கடிதம் எழுதியுள்ளதாகவும் செய்தி ஊடகங்களுக்கு தெரிவித்தார் மாவட்ட எஸ்.பி ரத்தோர். மேலும், ​​​​சர்மாவுக்கு மனச்சோர்வு மற்றும் மன உளைச்சலில் இருந்ததாகவும் சிறுவன் தன்னிடம் பணம் கேட்டபோது பொறுமை இழந்ததாகவும் ரத்தோர் கூறினார்.
பசியால் பணம் கேட்ட சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்தது மட்டுமல்லாமல், சிறுவனின் உடலை குப்பையை போன்று வீசியெரிந்த போலீசு அதிகாரி ரவி ஷர்மாவின், கொலைவெறிசெயலுக்கு, பணிநீக்கம் என்ற குறைந்தபட்ச நடவடிக்கையே போலீசுத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலீசின் அதிகார வெறி கொலைசெய்யும் என்பதை  நம் ஏற்கனவே பல்வேறு சம்பவங்களில் பார்த்திருக்கிறோம். பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், முஸ்லீம் சிறுபான்மை மக்கள் ஆகியோரை தாக்குவது, பொய்வழக்கு போடுவது, சிறையிலடைப்பது, காவல் கொட்டடி கொலைகளை செய்வது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற பல்வேறு கொடூரங்களை நாளுக்கு நாள் போலீசு அதிகார வெறியர்கள் அரங்கேற்றி வருகிறார்கள்.
தமிழகத்தில் உஷா என்ற கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைத்து கொலை செய்தது முதல், ஜெயராஜ் – பென்னிக்ஸ் போன்ற காவல் கொட்டடி மரணங்கள் வரை சொல்லி மாளாத துயர சம்பவங்கள் போலீசின் அதிகார வெறியால் அரங்கேறியுள்ளது.
உணவிற்கான கையேந்திய ஆறு வயது சிறுவனை கழுத்தை நெறித்துக் கொன்ற மத்திய பிரதேச மாநிலத்தின் கொலைகார போலீசு ரவி ஷர்மா போன்ற அதிகாரிகளை இந்த சட்டம் தண்டிக்கப் போவதில்லை. அதிகாரவெறிபிடித்த கொலைகார போலீசு அதிகாரிகளை உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்துதான் தாண்டிக்க வேண்டியுள்ளது.

காளி
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க