உ.பி : 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீசு !
13 வயது நிறைந்த சிறுமியை ஐந்து காம வெறியர்கள் பாலியல் வெறியாட்டம் போட்ட நிலையில், புகார் அளிக்க வந்த சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யும் இந்த காவி போலீசு அதிகாரியின் வெறிச்செயலை நாம் என்னவென்று சொல்வது.
உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் 13 வயது சிறுமி நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அச்சிறுமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய நான்கு பேர் மீது புகாரை கொடுக்க போலீசு நிலையம் சென்றபோது, அச்சிறுமையை போலீசு நிலைய அதிகாரி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட போலீசு அதிகாரி, திலக்தாரி சரோஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசு அதிகாரியுடன் சேர்த்து இவ்வழக்கில் மொத்தம் 6 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
தலைமறைவாக இருந்த சரோஜ் மே 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். சம்பவம் நடந்த போலீசு நிலையத்தில் இருந்த மற்ற போலீசு அதிகாரிகளும் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சந்தன், ராஜ்பான், ஹரிசங்கர் மற்றும் மகேந்திர சௌராசியா ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, 13 வயது சிறுமி போபாலுக்கு அழைத்துச் சென்று நான்கு நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த பாலியல் பொறுக்கிகள் நான்குபேரும், அச்சிறுமியை மீண்டும் அவரது கிராமத்தில் உள்ள போலீசு நிலையத்தில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
போலீசு நிலையத்தில் இருந்த சிறுமையை, அவளது அத்தையை அழைத்து அனுப்பி வைத்துள்ளது போலீசு. வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுநாள் சிறுமியை அழைத்து வருமாறு போலீசு அதிகாரி கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோரிடம் அவள் இருக்கும் இடத்தை அத்தை கூறவில்லை. அதற்கு பதிலாக, மறுநாள் சிறுமியை குற்றம் சாட்டப்பட்டவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். போலீசு அதிகாரி சரோஜ் சிறுமியை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுத்தொடர்பாக சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்,ஐ.ஆரில் சிறுமியின் அத்தையின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
ஏப்ரல் 30 அன்று, மீண்டும் போலீசு நிலையத்திற்கு வந்த சிறுமி, சைல்டுலைன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டாள். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிறுமியிடம் நடந்த சம்பவத்தை பற்றி விசாரணை நடத்தியது.
புகாரின் அடிப்படையில், போலீசு அதிகாரி சரோஜ் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக லலித்பூர் போலீசு துறை தெரிவித்துள்ளது.
“லலித்பூரில் 13 வயது சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்ததும், புகார் அளிக்கச் சென்றபோது போலீசுத்துறை அதிகாரியால் பலாத்காரம் செய்யப்பட்டதும், புல்டோசர்களின் சத்தத்தில் உண்மையான சட்டம் ஒழுங்கு சீர்திருத்தங்கள் எவ்வாறு நசுக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. போலீசு நிலையங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாக இல்லை என்றால், புகார்களை எங்கு செல்வார்கள்?” என்று இந்த பாலியல் வன்கொடுமைக்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம் மக்கள் மீதான கலவரங்கள், தாக்குதல்கள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. சமீக காலங்கலாக அரசின் அனைத்து அதிகாரிகளும் காவி பாசிஸ்டுகளாக – பாலியல் பொறுக்கிகளாக மாறிவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக பெண்கள் மீதான ஒடுக்கும் முறையை போலீசு கட்டவிழ்த்து வருகிறது. பெண்கள் மீது தாக்குதல் தொடுப்பது, பாலியல் வன்கொடுமை செய்வது, கொலை செய்வது போன்ற வெறிச்செயல்களில் ஈடுபட்டு வருகிறது உ.பி போலீசு.
காவிக் குண்டர்கள் ஆட்சியில் தலைவிரித்தாடும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுகைகள் தற்போது போலீசு துறையிலும் அரங்கேறுகிறது. 13 வயது நிறைந்த சிறுமியை ஐந்து காம வெறியர்கள் பாலியல் வெறியாட்டம் போட்ட நிலையில், புகார் அளிக்க வந்த சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யும் இந்த காவி போலீசு அதிகாரியின் வெறிச்செயலை நாம் என்னவென்று சொல்வது.
கொலை, கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், சிறுமிகள் மீதான போலீசின் பாலியல் வன்கொடுமைகள், முஸ்லீம் மக்கள் மீதான காவிக் குண்டர்களின் வெறியாட்டங்கள் என இந்துராஷ்டிரத்தின் ஓர் முன்னோட்டமாக திகழும் உ.பி. ஆர்.எஸ்.எஸ் – பாஜக சங் பரிவாரத்தின் கனவு உலகமான இந்துராஷ்டிரம் நிறுவப்பட்டால் இந்த கொடுமைகள் அனைத்து நாடுமுழுவது அறங்கேறும் என்பதில் எந்த சந்தேகவுமில்லை.