ஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது ! | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உரை

ஸ்டெர்லைட் போராட்டம் உயர்நீதிமன்றத் தீர்ப்பு…! அடுத்து என்ன…? என்ற தலைப்பில் ஆகஸ்டு 23 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய இணைய வழிப் பொதுக்கூட்டத்தில் மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் ஆற்றிய உரை!

ற்போது ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தீர்ப்பு வந்திருக்கிறது. அடுத்து அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று வழக்காடுவார்கள். ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் வழக்கில் அபராதம் விதித்து ஆலைய திறக்க அனுமதித்தது அனைவரும் அறிந்ததே! மக்கள் மன்றத்தின் தீர்ப்பு என்ன என்பதை பார்க்க வேண்டும்.

1992 – ல் மகாராஸ்டிரம் மாநிலம் ரத்தினகிரியில் 200 -ஏக்டேர் நிலம் ஸ்டெர்லைட் ஆலை கட்ட மாநில அரசு அனுமதி அளித்தது. கட்டிடமும் கட்டப்பட்டு விட்டது. ஆனால் ஊர் மக்கள் ஸ்டெர்லைட் ஆலை கட்டப்படுவதை கடுமையாக எதிர்த்தார்கள். 20ஆயிரம் பேர் அந்த கட்டிடத்தை இடித்து நொறுக்கினார்கள், அம்மக்கள் மீது அரசு எந்த தாக்குதலும் துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லை. ஆனால், தூத்துக்குடியில் அமைதியான வழியில் மனு அளிக்க சென்ற மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை சூற்றுசூழல் மாசு படுத்துகிறது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளது. விஷவாயு தாக்கி பல்வேறு மரணங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால், அரசு ஆலைக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுகிறது. பொருளாதாரத்தை விட சுற்றுசூழல் பாதுகாப்புதான் மிகவும் அவசியமானது. எனவே தூத்துக்குடி மக்களுக்காக நாம் தொடர்ந்து போராட வேண்டும். 144 தடை உத்தரவு என்பது மக்களுக்கான சொத்துக்களை பாதுகாக்கத்தான் அரசால் பயன்படுத்தப்படும், ஆனால், இங்கோ ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது வந்த தீர்ப்புக்கு அடுத்து என்ன? எது நமக்கு முழுவெற்றியாக அமையும்? என்பதை பற்றி இந்த காணொளியில் விளக்குகிறார் மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன். பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க