திருச்சி :

திருச்சி காஜா பேட்டையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங்கின் பிறந்தநாள் விழா 28-09-2020 அன்று கொண்டாடப்பட்டது.

* வேளாண் திருத்த சட்டம், தொழிலாளர் நல சட்ட திருத்தம், புதிய கல்விக் கொள்கை, மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டத்திருத்தம் என நாட்டையே கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடுகிறது கார்ப்பரேட் காவலன் மோடி அரசு !
* CAA,NRC,NPR யை அமல்படுத்தி இந்து ராஷ்டிரத்தை உருவாக்கத் துடிக்கிறது RSS – BJP பார்ப்பன பாசிச கும்பல் !
* நாட்டை மறுகாலணியாக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிக்க, பகத்சிங் பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் !

ஆகிய முழக்கங்களை முன் வைத்து நடத்தப்பட்ட இந்த விழாவில் முதல் நிகழ்வாக தோழர் பகத்சிங் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் அமைப்பாளரான தோழர் பிரிதிவ் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில், பகத்சிங் பிறந்தநாளை நாம் கொண்டாட வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார். மேலும் பேசுகையில், வேளாண் திருத்த சட்டம், தொழிலாளர் நல சட்ட திருத்தம், புதிய கல்விக் கொள்கை, மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டத்திருத்தம் என நாட்டையே கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடுகிறது மோடி அரசு. CAA,NRC,NPR யை அமல்படுத்தி இந்து ராஷ்டிரத்தை உருவாக்கத் துடிக்கிறது RSS – BJP பார்ப்பன பாசிச கும்பல்.
நாட்டை மறுகாலனியாக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிக்க, பகத்சிங் பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் என விளக்கிப் பேசினார் .

இந்த நிகழ்வில் காஜாப் பேட்டை பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். பகத் சிங் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.
தொடர்புக்கு :
9943 176 246

000

கடலூர் – கோ. பூவனூர் :

கடலூர் மாவட்டம், கோ.பூவனூர் பகுதியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி மாவீரன் பகத்சிங் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தலைமை:
தோழர் கார்த்திக்

கண்டன உரை:
தோழர் கணேஷ் பாபு

நன்றி உரை:
தோழர் அர்ஜுன்

இதில் கிராம மாணவர்கள், இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்கின் போராட்ட வரலாறு குறித்து பேசப்பட்டது.
இதோடு நீட், புதிய கல்விக் கொள்கை, புதிய விவசாய மசோதா, புதிய மின்சார மசோதா புதிய தொழிலாளர் மசோதா புதிய சுற்றுச்சூழல் சட்டம் ஆகிய அவசர சட்டங்களுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி.
கடலூர்.

தொடர்புக்கு:
97888 08110

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க