பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி

பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு, சங்க பரிவாரத்தின் இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான முன்னறிவிப்பு என்பதை அம்பலப்படுத்திகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் !

பாபர் மசூதியை அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண்சிங் தலைமையிலான இந்துத்துவக் கும்பல் இடிக்கவில்லை என்றும், மசூதிக்கு கீழ் உள்ள ராமர் சிலையைப் பாதுகாக்கத்தான் அங்கு சென்றனர் என்றும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது சிறப்பு நீதிமன்றம்.

மேற்சொன்ன கிரிமினல்கள் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரத்தைச் சேர்ந்த பலரும் பொதுவெளியில், மசூதி இடிப்புக்குப் பொறுப்பேற்றும், அதனை பகிரங்கமாகவே நியாயப்படுத்தியும் பேசியும் வந்திருக்கிறார்கள். ஆனாலும் மசூதியை அவர்கள் இடிக்கவில்லை என ஒரு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க முடியும் எனில், நாம் ஒரு அபாயகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள்.

தமது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை படிப்படியாக அமல்படுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரக் கும்பல் இந்து ராஷ்டிரத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை இந்தத் தீர்ப்பு முன்னறிவிக்கிறது.

இந்தத் தீர்ப்பின் சாராம்சத்தையும் பின்னணியையும் விரிவாக விளக்குகிறார், மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் !

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க