31.10.2020
நவம்பர் 5-ம் தேதி வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற உள்ள நாடு தழுவிய போராட்டத்தை ஆதரிப்போம் !!
மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டத்திருத்தம் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பிடுங்கி கர்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கிறது. உணவுப்பொருட்கள் பதுக்குவதை சட்டப்பூர்வமாக்குகிறது. நெல், கோதுமை உள்ளிட்ட முக்கியமான உணவுப் பொருட்களை இனி அரசு கொள்முதல் செய்யாது. குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யாது .எனவே ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை இனி எதிர்பார்க்கவும் முடியாது.
இதற்கெதிராக நவம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் இணைந்து நடத்தவுள்ள போராட்டத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்டு ஆதரிக்க வேண்டுமென்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் !
தோழமையுடன்
வெற்றிவேல் செழியன் ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம் ,
தமிழ்நாடு – புதுவை
9962366321