மிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் தடையை மீறி வேல் யாத்திரை என்ற பெயரில் பாஜக செய்யும் அடாவடித் தனத்தை கண்டித்தும், இதற்கு துணைபோகும் தமிழக அரசு மற்றும் போலிசைக் கண்டித்தும், கோவையில் 21.11.2020 அன்று மாலை 4 மணிக்கு போலீசு ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைப்பெற்றது.

இந்த போராட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த முற்றுகைப் போராட்டத்தில்  மக்கள் அதிகாரம், விசிக உள்ளிட்ட 18 அமைப்புகள் கலந்து கொண்டன. மக்கள் அதிகாரம் கோவைப் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜன் உள்ளிட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினரை போலீசு கைது செய்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து அனைவரையும் விடுவித்தது.

படங்கள்:

தகவல் :
மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
94889 02202

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க