வம்பர் 26 அன்று இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அதன் அடிப்படையில் பல்வேறு புரட்சிகர தொழிற்சங்கங்களும், அமைப்புகளும் தமிழகத்தில் போராட்டங்களை நடத்தின.
சென்னை :
2020 நவம்பர் 26, அகில இந்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை புதிய  ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி முன்னெடுத்தது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் இயங்கி வரும் இணைப்பு சங்கமான டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆலைவாயில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் ச.மகேஷ்குமார் தலைமை தாங்கினார். பு.ஜ.தொ.மு மாநில தலைமைக்குழு உறுப்பினரும், டி. ஐ மெட்டல் பார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவருமான தோழர் பா. விஜயகுமார் கண்டன உரையாற்றினர். அடாத காற்று, விடாத மழையிலும்  திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது, போராட்ட உணர்வை வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சங்கத்தின் பொருளாளர் தோழர் மு. சரவணன் நன்றியுரை கூறினார்.
தகவல் : புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மேற்கு மாவட்டம்.
பென்னாகரம், தருமபுரி :
நவம்பர் 26, “வேளாண் திருத்த சட்டத்தை அனுமதியோம். தொழிலாளர் சட்ட மசோதாவை வீழ்த்த அணி திரள்வோம். கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்” என்ற முழக்கத்தின் அடிப்படையில் அகில இந்திய அளவில் நடைபெறும் தொழிலாளர் – விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து, இடதுசாரி தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கம், சி.பி.எம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக, சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினரான தோழர் வி.மாதன் தலைமையில் தருமபுரி மாவட்டம்  பென்னாகரம் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் நடைப்பெற்றது.
இதில் மக்கள் அதிகாரம் பகுதி ஒருங்கிணைப்பாளர்  தோழர் சிவா தலைமையில் திரளான தோழர்கள் கலந்து கொண்டு கைதாகினர்.
தகவல் : மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்.
தொடர்புக்கு :- 9790138614
தருமபுரி :
இன்று (26.11.2020) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து ஏ ஐ கே எஸ் சி சி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக தர்மபுரி தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர்  அர்ஜுனன் தலைமை தாங்கினார். அரூர் சட்டமன்ற  தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் டில்லிபாபு மற்றும் மக்கள் அதிகாரத்தின் தர்மபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
தகவல் : மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க