மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும் ஏன்?

பொதுமக்களே! தொழிலாளர்களே!

♠ கார்ப்பரேட் கம்பெனிகள் இலாபம் என்ற பெயரில் அதிக விலை நிர்ணயித்து கொள்ளையடிப்பதை தடுக்க சட்டத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லை!

♠ விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, அரசு கொள்முதல் என்பதற்கு சட்டத்தில் எந்த உத்தரவாதமும் இல்லை!

♠ மக்களிடம் விற்பனை செய்யப்படும் விற்பனை விலையை (அநியாய விலையை) கார்ப்பரேட் முதலாளிகளை கட்டுப்படுத்த சட்டத்தில் இடமில்லை!

♠ உணவுப் பொருள் பதுக்கல், செயற்கை தட்டுப்பாடு, சுதந்திரமான பயிரிடல், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் , விவசாய கடன் ஆகிய அனைத்தும் கார்ப்பரேட்டுகள் கைக்கு செல்கிறது!

♠ வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கினால் கார்ப்பரேட்டுகள் நம்பிக்கை இழப்பர் என மத்திய விவசாய அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிட்டார் !

படிக்க :
♦ உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் !
♦ வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : முட்டுக்கட்டையிட்ட கேரள கவர்னர் !

♠ வாக்குறுதிகளை நிறைவேற்றாத போது பிரதமரையோ, BJP கட்சியையோ
பதவிநீக்கமோ, திருப்பி அழைக்கவோ, சட்டரீதியாக எந்த வாய்ப்பும் இல்லை!

♠ கார், பைக், லாரி உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலைகளில் படித்த தொழிலாளர்களையே குறைந்த கூலிக்கு கசக்கி பிழியும்போது படிக்காத விவசாயிகள் நிலை என்னவாகும்?

♠ அரசியல் சாசனத்தில் ஒப்புக்கொண்ட கல்வி, வேலை, உணவு, இருப்பிடம் இவற்றை நிறைவேற்றாத இந்த அரசு கட்டமைப்பில் நாடோடியாக இளைஞர்கள் அலைய வேண்டுமா?

♠ பொதுத்துறைகள், வங்கி, காப்பீடு, எரிசக்தி, மின்சாரம், சில்லரை வர்த்தகம், ஜவுளித்துறை,வேளாண்மை இவற்றை கார்ப்பரேட் கொள்ளைக்கு திறப்பதன் மூலம் 90% பொருளாதாரம் விரல்விட்டு எண்ணக்கூடிய சில முதலாளிகள் கல்லாவுக்கு செல்கிறது!

*மொத்ததில் கார்ப்பரேட்களைத் தவிர விவசாயிகள், பொது மக்களுக்கு வறுமை – பட்டினி, நெருக்கடியை தவிர எந்த நன்மையுமில்லை !*

♠ அன்று கொள்ளையடித்தது, ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி!
இன்று கொள்ளையடிப்பது, அம்பானி – அதானி மற்றும் சர்வதேச கார்ப்பரேட் கம்பெனிகள்!

♠ நடப்பது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் காட் ஒப்பந்ததின் ஆட்சி!
நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் என்பதெல்லாம் அடக்குமுறை கருவிகளே!

♠ நாடு முழுவதுமுள்ள 138 கோடி மக்களையும் பாதிக்கும் உணவு, வேலைவாய்ப்பு, பொருளாதார பிரச்சனை என்பதால் மத்திய அரசை நிர்ப்பந்தித்து போராட அணிதிரள்வோம்! கார்ப்பரேட் – காவி பாசிச கூட்டணியை முறியடிப்போம்!

♠ அனைத்து தரப்பு மக்களையும் திரட்டுவோம்! புதிய ஜனநாயகக் குடியரசு கட்டியமைப்போம்!


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு: 97880 11784