மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும் ஏன்?

பொதுமக்களே! தொழிலாளர்களே!

♠ கார்ப்பரேட் கம்பெனிகள் இலாபம் என்ற பெயரில் அதிக விலை நிர்ணயித்து கொள்ளையடிப்பதை தடுக்க சட்டத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லை!

♠ விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, அரசு கொள்முதல் என்பதற்கு சட்டத்தில் எந்த உத்தரவாதமும் இல்லை!

♠ மக்களிடம் விற்பனை செய்யப்படும் விற்பனை விலையை (அநியாய விலையை) கார்ப்பரேட் முதலாளிகளை கட்டுப்படுத்த சட்டத்தில் இடமில்லை!

♠ உணவுப் பொருள் பதுக்கல், செயற்கை தட்டுப்பாடு, சுதந்திரமான பயிரிடல், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் , விவசாய கடன் ஆகிய அனைத்தும் கார்ப்பரேட்டுகள் கைக்கு செல்கிறது!

♠ வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கினால் கார்ப்பரேட்டுகள் நம்பிக்கை இழப்பர் என மத்திய விவசாய அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிட்டார் !

படிக்க :
♦ உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் !
♦ வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : முட்டுக்கட்டையிட்ட கேரள கவர்னர் !

♠ வாக்குறுதிகளை நிறைவேற்றாத போது பிரதமரையோ, BJP கட்சியையோ
பதவிநீக்கமோ, திருப்பி அழைக்கவோ, சட்டரீதியாக எந்த வாய்ப்பும் இல்லை!

♠ கார், பைக், லாரி உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலைகளில் படித்த தொழிலாளர்களையே குறைந்த கூலிக்கு கசக்கி பிழியும்போது படிக்காத விவசாயிகள் நிலை என்னவாகும்?

♠ அரசியல் சாசனத்தில் ஒப்புக்கொண்ட கல்வி, வேலை, உணவு, இருப்பிடம் இவற்றை நிறைவேற்றாத இந்த அரசு கட்டமைப்பில் நாடோடியாக இளைஞர்கள் அலைய வேண்டுமா?

♠ பொதுத்துறைகள், வங்கி, காப்பீடு, எரிசக்தி, மின்சாரம், சில்லரை வர்த்தகம், ஜவுளித்துறை,வேளாண்மை இவற்றை கார்ப்பரேட் கொள்ளைக்கு திறப்பதன் மூலம் 90% பொருளாதாரம் விரல்விட்டு எண்ணக்கூடிய சில முதலாளிகள் கல்லாவுக்கு செல்கிறது!

*மொத்ததில் கார்ப்பரேட்களைத் தவிர விவசாயிகள், பொது மக்களுக்கு வறுமை – பட்டினி, நெருக்கடியை தவிர எந்த நன்மையுமில்லை !*

♠ அன்று கொள்ளையடித்தது, ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி!
இன்று கொள்ளையடிப்பது, அம்பானி – அதானி மற்றும் சர்வதேச கார்ப்பரேட் கம்பெனிகள்!

♠ நடப்பது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் காட் ஒப்பந்ததின் ஆட்சி!
நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் என்பதெல்லாம் அடக்குமுறை கருவிகளே!

♠ நாடு முழுவதுமுள்ள 138 கோடி மக்களையும் பாதிக்கும் உணவு, வேலைவாய்ப்பு, பொருளாதார பிரச்சனை என்பதால் மத்திய அரசை நிர்ப்பந்தித்து போராட அணிதிரள்வோம்! கார்ப்பரேட் – காவி பாசிச கூட்டணியை முறியடிப்போம்!

♠ அனைத்து தரப்பு மக்களையும் திரட்டுவோம்! புதிய ஜனநாயகக் குடியரசு கட்டியமைப்போம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு: 97880 11784

1 மறுமொழி

  1. அனைத்தும் சரியே. அதைவிட மேலாக, மத்திய அரசுக்கு எதிராகவோ, மாநில அரசுகளுக்கு எதிராவோ, அவர்களின் ஏசண்டுகளுக்கு எதிராகவோ, முதலாளிகளுக்கு எதிராக வேளாண், மற்றும் வேளாண் விளைபொருள்கள் மற்றும் அவற்றின் விலை சம்பந்தமாக நீதிமன்றத்தை அணுகுவதை மறுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனச் சட்டத்தின் முன்னுரையான சபதத்தையே Preamble மாற்றுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க