லகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோ, சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தனது மேஜை மீது விளம்பரநோக்கில் வைக்கப்பட்டிருந்த கோக் பாட்டில்களை அகற்றிவிட்டு, தனது தண்ணீர் பாட்டிலை உயர்த்திக் காட்டி மேஜை மீது வைத்தார். ஏற்கெனவே கோக் நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், ரொனால்டோ கோக்கை புறக்கணித்தது, சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. கோக்கின் ஆரோக்கியமற்ற தன்மை குறித்துப் பலரும் பேசத் துவங்கினர். இதன் காரணமாக, கோக் நிறுவனத்திற்கு ஒரே நாளில் ரூ. 29,337 கோடி பங்குச் சந்தையில் இழப்பு ஏற்பட்டது.

ஒரு முன்னணி வீரராக இருந்துகொண்டு கோக்கின் ஆதிக்கத்தை ஒதுக்கித் தள்ளிய ரொனால்டோவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கோக்கை தெறிக்கவிட்ட ரொனால்டோ


கருத்துப்படம் : மு. துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க