PP Letter head23.06.2021

சேலம் : போலீஸ் நடத்திய படுகொலை !
போலீஸின் அதிகாரத்துக்கு எதிராக அணிதிரள்வோம் !

கண்டன அறிக்கை !

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பாப்பநாயக்கன் பட்டியில் ஏத்தாப்பூர் காவல் நிலைய தற்காலிக சோதனை சாவடியில் நேற்று போலீசால் ஒரு படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது.

இடையப்பட்டி முருகேசன் தன் இரு நண்பர்களோடு இரு சக்கர வாகனத்தில் வந்த போது மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு SSI பெரியசாமி தன் கையில் இருந்த லத்தியால் முருகேசனை கண்மூடித்தனமான கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

இதில் முருகேசனின் உடலெங்கும் அடிபட்டதோடு பின்மண்டை உடைந்துள்ளது. முருகேசன் தன்னால் வலிதாங்க முடியவில்லை அடிக்க வேண்டாம் என்று கதறியும் தடுத்தும் கூட கேட்காமல் எஸ்.ஐ.பெரியசாமி அடித்ததில் மிகவும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் முருகேசன்.

வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்த முருகேசனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் செல்ல அவர்களை சேலம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்திருக்கிறார்.

இச்சம்பவத்தில் சிறப்பு எஸ்.ஐ.பெரியசாமி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஊருக்கும் டாஸ்மாக்கை திறந்து வைத்து விட்டு ஊத்திக் கொடுக்கிறது அரசு. குடித்துவிட்டு வருபவர்களை தாக்கிக் கொல்கிறது போலீஸ்.

எத்தனை படுகொலைகளை செய்தாலும் அரசு அதிகாரிகளும் நீதிமன்றமும் நம்மை காப்பாற்றும் என்ற சிந்தனைதான் போலீஸே மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களை செய்யத் தூண்டுகின்றன.

யாரையும் தாக்கி, சித்திரவதை செய்து கொலை செய்யும் போலீஸ் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்காமல் இனி வாழவே முடியாது என்ற சூழ்நிலை உருவாக்கி இருக்கிறது போலீஸ். மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கம் மீண்டும் மேலெழும் என்பதற்கு போலீஸின் இந்த படுகொலையே இன்னொரு எடுத்துக்காட்டு.

தமிழக அரசே!

  • கொலைக்கு உடந்தையாக இருந்த அத்தனை போலீஸ்காரர்களையும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய் !
  • கொலை செய்யப்பட்ட முருகேசனின் குடும்பத்திற்கு உதவித் தொகை 25 லட்சம் ரூபாய் வழங்கு !
  • அவர் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கு !


தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன் ,
மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க