பென்னாகரம் பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் கட்டிக் கொடுக்கவும், பேருந்துநிலையம் புதுப்பிப்பது என்ற பெயரில் பேருந்து நிலையத்தை கழிவுநீர்க் குட்டையாக மாற்றிய அவலத்தைக் கண்டித்தும், மோசமான நிலையில் உள்ள பென்னாகரம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை வசூல் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தும் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் 16.10.2021 இன்று பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள், மாணவர்கள், போக்குவரத்து ஊழியர்கள் வெயில், மழை காலங்களில் நிற்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், சிறுநீர், மலம் கழிக்க இடமில்லாமல் இருப்பதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொடர்ச்சியாக மக்கள் கோரிக்கை வைத்தும், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையத்தை இடித்தது முதல்  இன்றுவரை பேருந்து நிலையத்தை கட்டி முடிப்பதற்கான எந்த வேலையும் செய்யாமல், குழியை மட்டும் தோண்டி வைத்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி நோய் பரவுகிற அவலநிலை ஏற்பட்டு இருக்கிறது.
படிக்க :
♦ சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் !
♦ தேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் !
பேருந்து நிலத்தை கட்டி முடிப்பதற்காக டென்டர் என்கிற பெயரில் கோடி கோடியாக கொள்ளை அடிப்பது மட்டும்தான் ஓட்டுக் கட்சிகளின் தொடர்கதையாக இருக்கிறது. முந்தைய ஆட்சியில் அதிமுக மாவட்ட நிர்வாகி ஒருவர் இந்த டெண்டரை எடுத்துள்ளார். ஒன்னறரை ஆண்டு காலங்களில் குழியை மட்டுமே தோண்டிவிட்டு எந்த வேலையும் செய்யாமல் இழுத்தடித்து வருகிறார், ஆனால் அரசு அதிகாரிகளோ இலஞ்சத்தை பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் விடுவதும், பேருந்து நிலையம் கட்டும் வேலையை தள்ளிபோடுவதும் தொடர்கிறது.
இதனால் நகரத்திலுள்ள வணிகர்கள், சிறு வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள், என பலதரப்பட்ட மக்களும் வாழ்விழந்து நிற்கின்றனர். எனவே இந்த அவல நிலையை போக்க போர்க்கால அடிப்படையில் பேருந்து நிலையத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டலக் குழு உறுப்பினர் தோழர். அருண் தலைமை தாங்கினார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் சத்தியநாதன்,  CPI(ML) (விடுதலை)-யின் மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் தோழர் லட்சுமணன், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, தருமபுரி மாவட்ட பொறுப்பாளர் தோழர் பெரியண்ணன், தமிழ் புலிகள் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் முனுசாமி, தர்மபுரி மாவட்ட முடி திருத்துவோர் நலச்சங்கத்தின் நிர்வாகிகளான, தோழர் மகேஸ்வரன், தோழர் கருணாகரன், தோழர் லட்சுமிகாந்தன், தோழர் சிவாஜிஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக முடி திருத்துவோர் நலச்சங்கத்தின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தோழர் சத்தியமூர்த்தி நன்றியுரையாற்றினார். இதில் பெருந்திரளாக வணிகர்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டனர்.
தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
97901 38614

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க