புதிய ஜனநாயகம் சார்பில் இரண்டு புதிய வெளியீடுகள் வெளி வரவிருக்கின்றன. கொரோனா உருவாக்கம் மற்றும் பரவலுக்கு பின்னணியில் உள்ள ஏகாதிபத்திய சுரண்டல் குறித்த ஒரு வெளியீடும், இந்த நாட்டை ஒரு இந்து ராஷ்டிரமாக  பாசிச சர்வாதிகார ஆட்சியதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கோடு செயல்படும் பாசிச ஆர்.எஸ்.எஸ். – பாஜக வின் நடைமுறைகளை அம்பலப்படுத்தி ஒரு வெளியீடும் கொண்டுவரப்ப்படவிருக்கின்றன.
ஏகாதிபத்தியச் சுரண்டலையும், நாட்டை கவ்வியிருக்கும் பாசிச அபாயத்தையும் எதிர்கொள்ள இந்த வெளியீடுகளை வாங்கி நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். வெளியீடுகள் தேவைப்படுவோர் முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ளவும் : 94446 32561; மின்னஞ்சல் முகவரி : puthiyajananayagam@gmail.com
***
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கோரத்தாண்டவமே கொரோனா
முதலாளித்துவத்தின் இலாப வெறிக்கு, பரந்துபட்ட அளவில் காடுகள் அழிக்கப்படுவது, சுற்றுச்சூழல் சீர்குலைக்கப்படுவது, பல்லுயிர் தன்மை சிதைக்கப்படுவதோடு, காலநிலை மாற்றமும் நிகழ்கின்றன. இதன் விளைவாக வன விலங்குகளுக்கும் வீட்டு விலங்குகளுக்குமிடையிலான இடைவெளி அழிக்கப்படுவது, பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களையும் விலங்குகளையும் ஒரே உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் பிணைப்பது நடந்தேறுகிறது. ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் கட்டமைப்பில் உலகம் முழுவதும் உற்பத்திச் சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலைமைகள் ஏற்படுத்தும் உயிரியல் மாற்றத்தை, முதலாளித்துவத்தின் இலாபவெறி  காரணமாக  கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஏகாதிபத்தியக் கட்டமைப்பு செயல்படுவதன் மூலம் புதிய நோய்க்கிருமிகளின் சுழற்சிக்கு வழிவகுத்துள்ளது. இதற்குக் மூலதனத்தின் உள்ளியல்பே காரணம் ஆகும்.

இது குறித்த அறிவியல்பூர்வமான, விரிவான ஒரு ஆய்வுக் கட்டுரையே இந்த சிறு வெளியீடு. வாங்கிப் படியுங்கள் !

விலை : ரூ.30.
***
காவி – கார்ப்பரேட் பாசிசம் எதிர்கொள்வது எப்படி?
ன்னாட்சி கொண்ட நிறுவனங்கள் என்று சொல்லப்பட்ட தேர்தல் கமிசன், ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ, உயர் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் முக்கியமான அதிகாரங்கள் பறிக்கப்படுவிட்டன. ஒன்றிய அரசு நினைத்தால் அந்த நேரத்திலும் ரிசர்வ் வங்கியின் நிதியை எடுத்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு இன்று நிலைமை மாறியுள்ளது. தேர்தல் கமிசனோ, மோடி அரசுக்கு ஐந்தாம் படையாகவே வேலை செய்கிறது. இவை மட்டுமின்றி, உயர்கல்வி நிறுவனங்கள், அரசின் கலாச்சார நிறுவனங்கள், தணிக்கை நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் விசுவாசிகள் திட்டமிட்டே நுழைக்கப்படுள்ளனர்.
மொத்தத்தில், பீற்றிக் கொள்ளப்பட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்து அங்கங்களும் வெட்டிச் சிதைக்கப்பட்டுவிட்டன. அதன் உச்சமாக நாடாளுமன்ற “விமர்சன சுதந்திரம்” அடைந்திருக்கும் பரிதாப நிலையைத் தான் இன்று நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

சொல்லிக் கொள்ளப்படும் குறைந்தபட்ச போலி ஜனநாயகத்தையும் தகர்த்து ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியை – இந்து ராஷ்டிரத்தை – அமைப்பதை நோக்கி ஆர்.எஸ்.எஸ். பாஜக தலைமையிலான பாசிசக் கும்பல் முன்னெடுத்துச் செல்வதையும் அதன் பின்னணியில் உள்ள கார்ப்பரேட் நலன்களையும் இந்த வெளியீடு அம்பலப்படுத்துகிறது. வாங்கிப் படியுங்கள் !

விலை : ரூ.50

புதிய ஜனநாயகம்
புதிய ஜனநாயகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க