மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெல்க! | தோழர் ஆ.கா.சிவா

போல்ஷ்விக் உணர்வும், அது கோரும் தியாக உணர்வும், அரசியல் சித்தாந்த தெளிவும் ஏற்படுத்திய மக்கள் அதிகாரம் முதலாவது மாநாடு வரலாற்று சிறப்புமிக்கதே!

ன்றைக்கு சோசலிசம் பற்றி கற்பான வாதத்திற்கு மாற்றாக சோசலிச சமூகத்திற்கு மாற வேண்டுமானால் அதற்குரிய அறிவியல் பூர்வமான வழிமுறைகளை மார்க்சிய ஆசான்கள் நிலைநாட்டினார்கள். அதைப்போல இன்றைக்கு மா.லெ-விற்கு எதிரான அனைத்து வகையான நடைமுறைகளை களைந்து பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட அமைப்பாக அறிவித்திருக்கும் மக்கள் அதிகாரம் சரியான வழியில் பயணிப்பதற்கான திசையை காட்டுவதாக இருக்கின்றது.
கலைப்புவாதிகளின் ஊளைச் சத்தம் நம் செவிகளில் மங்கிய ஒலியில் கேட்கிறது. நாங்கள் தான் பெருபான்மை, நாங்கள் தான் பெரும்பான்மை என சொல்லி கொள்ளட்டும். அந்த உரிமையை பறிக்க நமக்கு அதிகாரமில்லை.
மகத்தான நவம்பர் 7, 1917 சோசலிசப் புரட்சிக்கு சில மாதங்கள் வரை சோவியத்தின் மத்தியில் போல்ஷ்விக்களும் சிறுபான்மை தான். ஆனால் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்கு தான் புரட்சியை சாதித்தார்கள்.
அப்படிப்பட்ட போல்ஷ்விக் உணர்வும், அது கோரும் தியாக உணர்வும், அரசியல் சித்தாந்த தெளிவும் ஏற்படுத்திய முதலாவது மாநாடு வரலாற்று சிறப்புமிக்கதே!
விருதையில் நடைபெற்ற மக்கள் அதிகாரம் முதல் மாநாட்டில் வாழ்த்துரை வழங்கிய பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஆ.கா.சிவா ஆற்றிய உரையின் காணொலியை பதிவிடுகிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க