இலட்சத்தீவு : எதேச்சதிகாரமாக பள்ளி சீருடைகளை மாற்றும் பாசிச மோடி அரசு !

முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நிலப்பரப்பில், பாசிச அரசு கொண்டு வரும் இந்த சிருடை மாற்றங்களை, பல பெற்றோர்களாலும் பள்ளி மாணவிகளாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

0

பிரபுல் கோடா படேல் நிர்வாகியாக பொறுப்பேற்ற பிறகு இலட்சத்தீவில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களின் தொடர்ச்சியாகதான் தற்போது பள்ளி மாணவர்களில் சீருடையில் மாற்றம் செய்யப்படுள்ளது.

புதிய பள்ளி சீருடை வழங்குவதற்கான டெண்டர் ஆவணம் சமூக ஊடகங்களில் கடந்த வாரம் பரவியதைக் கண்டு இலட்சத்தீவு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பெண் மாணவர்களுக்கு, தற்போது இருக்கும் சல்வார் உடைகள் பாவாடைகளாகவும், முழுக் கை சட்டைகள் அரை கை சட்டைகளாகவும் மாறும் என்கிறது அந்த ஆவணம்.

ஏப்ரல் 8-ம் தேதி, இலட்சத்தீவு யூனியன் பிரதேச கல்வி இயக்குநர் ராகேஷ் சிங்கால் கையொப்பமிட்ட அதிகாரப்பூர்வ டெண்டர் ஆவணங்களுடன், 5-ம் வகுப்பு வரையிலான பெண்களுக்கு பாவாடை; அனைவருக்கும் அரை கை சட்டைகள், டைகள் மற்றும் பெல்ட்கள் ஆகிய ரெடிமேட் சீருடைகளுக்காக விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் இருந்து டெண்டர்கள் கேட்கப்பட்டுள்ளது.

படிக்க :

இலட்சத்தீவு மக்களின் சட்ட உரிமைகளை முடக்க மோடி அரசின் சதி !

#Savelakshadweep : ஒன்றிய அரசின் புதிய வரைவுச் சட்டங்களை எதிர்த்து இலட்சத்தீவு மக்கள் போராட்டம் !

“அவர்கள் எந்த உள்ளூர் மக்களையும், பெற்றோர்களையும் கலந்தாலோசிக்கவில்லை. நீண்ட நாட்களாக நீலமும் வெள்ளையுமாக இருந்த சீருடையின் நிறத்தை மாற்றுவது குறித்து முன்பு விவாதம் நடந்தது. நாங்கள் சில வடிவங்களையும் முன்மொழிந்தோம். அதற்கு எந்த பதிலும் கூறாமல், திடீரென புதிய சீருடைகள் குறித்த டெண்டரை போட்டுள்ளனர்,” என்கிறார் மினிகாய் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் எல்.ஜி.இப்ராகிம்.

“டெண்டரில் சீருடைகள் ‘ரெடிமேட்’ உடைகளாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, குழந்தைகளின் உடை அளவீடுகள் தெரியாமல் அதிகாரிகள் இதை எப்படி முடிவெடுப்பார்கள். ஒரே அளவில் தைக்கப்படும் சீருடைகள் எப்படி அனைவருக்கும் பொருந்தும்? அனைத்து மாற்றங்களும் நிர்வாகி, கல்விச் செயலாளர் அல்லது கல்வி இயக்குனரால் தீர்மானிக்கப்படுகின்றன. அவர்களில் யாரும் இலட்சத்தீவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு எங்கள் கலாச்சாரம் தெரியாது” என்கிறார் இப்ராஹிம்.

கவரத்தியைச் சேர்ந்த மற்றொரு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் நிஜாமுதீன் கூறுகையில், ”கடந்த ஆண்டு மே மாதம் பிரபுல் படேல் பொறுப்பேற்றதில் இருந்து நிர்வாகம் பெரும்பாலும் எதேச்சதிகார முறையில் செயல்படுகிறது. அந்த நேரத்தில் தீவில் தொடர்ச்சியான மாற்றங்களை விதித்தது. இதில், நிலச் சீர்திருத்தங்கள், மாட்டிறைச்சி தடை மற்றும் மதுபான விற்பனை மீதான தடைகளை நீக்குதல் மற்றும் குடியிருப்பாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பிற மாற்றங்கள் ஆகியவை அடங்கும். இதுபோன்ற மக்கள் விரோத மாற்றங்களில் தொடர்ச்சிதான் இந்த சீருடை மாற்றம். இதுபோன்ற சீருடை மாற்றங்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின்கீழ் நடப்பதுதான் எங்களின் பொதுவான வழக்கம். ஆனால் இவர்கள் தானே முடிவெடுக்கிறார்கள். இந்த சீருடை ஆவணம் வந்தபிறகு, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன,” என்கிறார்.

இலட்சத்தீவின் பல்வேறு தீவுகளில் உள்ள சுமார் 20 பள்ளிகள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும் என்று அவர் கணக்கிட்டார்.

முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நிலப்பரப்பில், பாசிச அரசு கொண்டு வரும் இந்த சிருடை மாற்றங்களை, பல பெற்றோர்களாலும் பள்ளி மாணவிகளாலும்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சீருடையை மாற்றும் இந்த திட்டம் உள்ளூர் இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பின்பற்றும் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது.

பெண்களும் புதிய சீருடையில் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என்கிறார் ஹசீனா என்ற பெற்றோர். “எனக்குத் தெரிந்த அனைத்து பெற்றோர்களும் இந்த சீருடை மாற்றத்தை எதிர்க்கிறார்கள். என் மகள் அடுத்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் நுழைகிறாள், அவளும் அக்கம்பக்கத்தில் உள்ள மற்ற மாணவிகளும் பாவாடை மற்றும் அரை கை சட்டைகளை அணிந்து பள்ளிக்கு செல்ல மாட்டோம் என்று கூறுகிறார்கள்.” என்று கூறுகிறார்.

படிக்க :

இலட்சத்தீவு : அரசியல் விவகாரங்களை விமர்சிப்பது தேசத் துரோகமல்ல !

இலட்சத் தீவை அபகரிக்கத் துடிக்கும் மோடி அரசு || பு.மா.இ.மு கண்டனம்

“எந்த ஒரு மக்கள் பிரதிநிதியோ, எந்த பஞ்சாயத்து உறுப்பினரோ அல்லது உள்ளூர் அரசியல்வாதியோ, பெற்றோர் சங்கத்திடம் கூட அவர்கள் மாற்றம் குறித்து முடிவெடுக்கவில்லை. சீருடை மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகள் (ஆளும் கட்சி தவிர) மற்றும் அமைப்புகளால் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன,” என்கிறார் பெற்றோரும் சிபிஐ(எம்) செயலாளருமான லுக்மானுல் ஹக்கீம்.

பெரும்பான்மை மக்களின் கலாச்சாரத்தை தன்பாசிச நடவடிக்கைகளால் மாற்ற முயற்சிக்கிறது ஒன்றிய மோடி அரசு. இலட்சத்தீவு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கிறது. பள்ளிக் கூடங்களில் மாற்றங்கள் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்தாலோசிந்தாலோசித்து முடிவெடுக்கும் நிலையை மாற்றி, தானே எதேச்சதிகாரமாக மாற்றங்களை அமுல்படுத்தி பள்ளி மாணவிகளை வஞ்சிக்கிறது பாசிச மோடி அரசு.


சந்துரு
செய்தி ஆதாரம் : Thenewsminute

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க